Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
2021 கிராமி விருது விழாவிற்கு பார்ப்போரின் வாய் பிளக்க வைக்கும் செக்ஸியான உடையில் வந்த பிரபலங்கள்!
63 ஆவது கிராமி விருது விழாவிற்கு பியான்ஸ் முதல் டெய்லர் ஸ்விஃப்ட் வரை, பெரும்பாலான பிரபலங்கள் வாய் பிளக்க வைக்கும்படியான கவர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தனர்.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 63 ஆவது கிராமி விருது விழா சமீபத்தில் நடந்தது. மிகப்பெரிய இசை விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு வந்திருந்த பிரபலங்கள் பலரும் அட்டகாசமான மற்றும் கலக்கலான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

இசைத் துறையில் மிகவும் பிரபலமான பியான்ஸ் முதல் டெய்லர் ஸ்விஃப்ட் வரை, பெரும்பாலான பிரபலங்கள் வாய் பிளக்க வைக்கும்படியான கவர்ச்சிகரமான மற்றும் வித்தியாசமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தனர். கீழே 63 ஆவது கிராமி விருது விழாவில் பிரமிக்க வைக்கும் உடைகளில் வந்த பிரபலங்களின் ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பியான்ஸ்
பிரபல பாப் பாடகி பியான்ஸ் கிராமி விருது விழாவிற்கு தொடை அளவுள்ள கருப்பு நிற லெதர் உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் மிகப்பெரிய காதணியை அணிந்து, உதட்டிற்கு மின்னும் நியூட் நிற லிப்கிளாஸ் போட்டு, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

துவா லிபா
பாடகி துவா லிபா உடல் முழுவதும் அப்பட்டமாக தெரியுமாறான கவர்ச்சிகரமான ஷீர் ஆடையை அணிந்து வந்திருந்தார். உடையின் முன்புறமானது பட்டாம்பூச்சி டிசைனில் கிரிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த உடைக்கு துவா பிங்க் லிப் ஷேடு, உடைக்கு பொருத்தமான ஐ ஷேடோ போட்டு, நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

மேகன் தீ ஸ்டாலியன்
Best Rap Performance என்னும் விருதைப் பெற்ற கிராமி வெற்றியாளரான மேகன் தீ ஸ்டாலியன், அடர் ஆரஞ்சு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் சிம்பிள் தோற்றத்தைக் கொடுக்கும்படியான மேக்கப்பை போட்டதுடன், உதட்டிற்கு டார்க் லிப் லைனர் போட்டு, தலைக்கு கொண்டை போட்டிருந்தார்.

இங்க்ரிட் ஆண்ட்ரஸ்
அமெரிக்க பாடகியான இங்க்ரிட் ஆண்ட்ரஸ், சட்டை எதுவும் போடாமல் வெறும் வெள்ளை நிற பேண்ட் மற்றும் கோட் அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு கழுத்தில் பல அடுக்குகளைக் கொண்ட வைர செயினை அணிந்து வந்தது, ஒரு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது. அதோடு இங்க்ரிட் உதடு மற்றும் கன்னங்களுக்கு பிங்க் நிற லிப் ஷேடு மேக்கப் போட்டிருந்தார்.

மிராண்டா லம்பேர்ட்
மிராண்டா லம்பேர்ட் ஜென்னி லேபிளில் இருந்து மின்னும்படியான நீளமான உடையை அணிந்திருந்தார். மேலும் இந்த உடையின் முன்புறம் மிகவும் லோ நெக் கொண்டதுடன், உடையின் ஒரு பக்கம் தொடை தெரியுமாறு சைடு ஸ்லிட் கொண்டிருந்தது. அதோடு மிராண்டா இந்த உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு காஜல் மற்றும் உதட்டிற்கு பிங்க் நிற லிப் ஷேடு போட்டு, கை, காதுகளுக்கு வைர ஆபரணங்களை அணிந்திருந்தார்.

டோஜா கேட்
டோஜா கேட் கிராமி விருது விழாவிற்கு ராபர்டோ காவாலி உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் மேல் பகுதி கவர்ச்சிகரமாக மார்பகங்கள் மற்றும் தொப்புள் தெரியுமாறு இருந்தது. அதோடு உடையின் கீழ் பகுதி பச்சை மற்றும் கருப்பு நிறங்கள் கலந்த இறகு போன்ற ஸ்கர்ட்டைக் கொண்டிருந்தது. இந்த உடைக்கு இவர் மேற்கொண்டிருந்த ஸ்மோக்கி மேக்கப், பிங்க் நிற லிப் ஷேடு போன்றவை இவரது தோற்றத்தை கூட்டிக் காட்டியது.

பில்லி எலிஷ்
பாடகி பில்லி எலிஷ் வித்தியாசமான பிரிண்ட் மற்றும் வேலைப்பாடு செய்யப்பட்ட பைஜாமா செட் அணிந்திருந்தார். அதோடு இந்த உடைக்கு பொருத்தமாக இவர் ஃபேஸ் மாஸ்க் போட்டு, கைக்கு கையுறையையும் அணிந்து வந்திருந்தார்.

டெய்லர் ஸ்விஃப்ட்
ஆறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட டெய்லர் ஸ்விஃப்ட் 63 ஆவது ஆண்டு கிராமி விருதுகளில் Album of the Year விருதை வென்றார். இவர் இந்த விருது விழாவிற்கு ஆஸ்கார் டி லா ரென்டாவில் இருந்து ஃப்ளாரல் உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் ஆரஞ்சு, பிங்க், ஊதா, மஞ்சள் நிற பூக்கள் இடம் பெற்றிருந்தன. ஃபுல் ஸ்லீவ் கொண்ட இந்த உடைக்கு டெய்லர் பிங்க் லிப் ஷேடு, மற்றும் கண்களுக்கு பிங்க் ஐ ஷேடோ போட்டு ஜொலித்தார்.

நோவா சைரஸ்
நோவா சைரஸ் கிராமி விருது விழாவின் சிவப்பு கம்பளத்திற்கு பல சுருக்கங்களைக் கொண்ட வெள்ளை நிற உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். நோவாவின் உடையைப் பார்த்த பலரும் வியந்து போயினர். ஏனெனில் அந்த அளவில் இவர் ஒரு வித்தியாசமான உடையை அணிந்து வந்திருந்தார்.

ஜெனே ஐகோ
முதுகு முழுவதும் டாட்டூக்களைக் குத்தியுள்ள பாடகி ஜெனே ஐகோ கிராமி விருது விழாவிற்கு, தனது முதுகில் உள்ள டாட்டூக்கள் நன்கு தெரியும் வண்ணம் பிங்க் நிற ஹை-லோ ப்ளாரல் கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டிருந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் இவரது தோற்றத்தை வித்தியாசமாகவும், அழகாகவும் காட்டியது.



Click it and Unblock the Notifications











