Latest Updates
-
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி ஆம்லெட் செய்யாம, ஒருவாட்டி இந்த துவையல் ஆம்லெட் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்! -
Breast Cancer Awareness Month: இளம் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பது ஏன்? - விளக்கும் டாக்டர்! -
இந்தியாவில் 'தங்கத்தின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? நமக்கு பக்கத்துலதான் இருக்காம் -
குரு அதிசார பெயர்ச்சி 2026: குரு பார்வையால் கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் இவங்கதான்! ஜோதிடர் கணிப்பு! -
பச்சை பயறு வேர்க்கடலை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 14 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கபோகுதாம் -
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
கருப்பு நிற அன்னப் பறவை போன்று உடையணிந்து பல போஸ்களைக் கொடுத்த ஐஸ்வர்யா!
லோரியலின் பிராண்ட் அம்பாஸிடராக கேன்ஸில் கலந்து கொள்வதால், போட்டோசூட் நடைபெற்றது. அப்போது கருப்பு நிற அன்னப் பறவை போன்று தோற்றமளிக்கும் கருப்பு நிற உடையை அணிந்து, ஐஸ்வர்யா பல போஸ்களைக் கொடுத்தார்.
2017 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் ஓர் நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகத் தான் இருக்கும். இவர் என்ன தான் முன்னாள் உலக அழகியாக இருந்தாலும், இன்னும் தனது அழகிய உடலமைப்பைப் பராமரித்து, பல நிகழ்ச்சிகளில் அட்டகாசமான உடைகளை அணிந்து வந்து கலக்குவார்.

அந்த வகையில் நேற்று நடந்த கேன்ஸ் விழாவிற்கு அழகிய சிண்ட்ரல்லா போன்ற கவுனில் வந்து சிவப்பு கம்பளத்தில் அசத்திவிட்டார். மேலும் இன்று நடக்கவிருக்கும் கேன்ஸ் விழாவிலும் கலந்து கொள்ள இருக்கிறார். அதற்கு முன் அவர் லோரியலின் பிராண்ட் அம்பாஸிடராக கேன்ஸில் கலந்து கொள்வதால், போட்டோசூட் நடைபெற்றது.
அப்போது அழகிய கருப்பு நிற அன்னப் பறவை போன்று தோற்றமளிக்கும் கருப்பு நிற உடையை அணிந்து, பல போஸ்களைக் கொடுத்தார். இங்கு அந்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற கவுன்
ஐஸ்வர்யா ராய் அணிந்திக்கும் கருப்பு நிற உடை ஆஷி ஸ்டூடியோ கவுன் ஆகும். இந்த கவுன் ஒரு ஸ்ட்ராப்லெஸ் உடையாகும்.

மேக்கப்
ஐஸ்வர்யா ராய் இந்த கவுனிற்கு லோரியல் பாரிஸ் மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தி மேக்கப் போட்டுள்ளார். அதுவும் அவர் ஆரஞ்சு நிற லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு நீல நிற ஐ-லைனரைப் போட்டிருந்தார்.

ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து, முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்திருந்தார்.

காலணி
இந்த கருப்பு நிற கவுனிற்கு பொருத்தமாக கருப்பு நிற ஹை-ஹீல்ஸ் அணிந்தும் இருந்தார்.

அன்னப் பறவை போஸ்
இது அன்னப்பறவை பறக்க தயாராக இருப்பது போன்று போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
