Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
2020 லேக்மீ ஃபேஷன் வீக்கில் செக்ஸியான உடையில் ஒய்யார நடை போட்ட பாலிவுட் பிரபலங்கள்!
2020 லேக்மீ ஃபேஷன் வீக்கில் மலாய்கா அரோரா கான், சானியா மிர்சா, நித்யா மேனன், அதிதி ராவ், தபு, சன்னி லியோன், ரகுல் ப்ரீத் சிங், கரீனா கபூர் போன்ற பல பிரபலங்கள் பல டிசைனர்களின் புதிய கலெக்ஷனை அணிந்து வந
சமீபத்தில் மும்பையில் மிகவும் பிரபலமான 2020 ஆம் ஆண்டிற்கான லேக்மீ ஃபேஷன் வீக் சம்மர்/ரெசார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கில் பல்வேறு டிசைனர்களின் கலெக்ஷன்கள் வெளியிடப்பட்டன. இதில் தனது கலெக்ஷனை வெளியிட்ட டிசைனர்கள் மற்றும் பிராண்டுகள், ஷோஸ்டாப்பராக பிரபலங்களைக் கொண்டு வந்தனர்.

2020 லேக்மீ ஃபேஷன் வீக்கில் மலாய்கா அரோரா கான், சானியா மிர்சா, நித்யா மேனன், அதிதி ராவ், தபு, சன்னி லியோன், ரகுல் ப்ரீத் சிங், கரீனா கபூர் போன்ற பல பிரபலங்கள் பல டிசைனர்களின் புதிய கலெக்ஷனை அணிந்து வந்திருந்தனர். இப்போது 2020 லேக்மீ ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்து ஒய்யார நடை போட்ட பாலிவுட் பிரபலங்களைக் காண்போம்.

சானியா மிர்சா
டென்னிஸ் வீராங்கணையான சானியா மிர்சா, 2020 லேக்மீ ஃபேஷன் வீக்கில் டிசைனர் ஏகா வடிவமைத்த ஸ்பெஷலான உடையை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

அதிதி ராவ் ஹைதாரி
பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதாரி டிசைனர் ரித்து குமாருக்கு ஷோஸ்டாப்பராக அடர் நீல நிற ஷீர் உடை அணிந்து 2020 லேக்மீ ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடந்து வந்தார்.

தியா மிர்ஷா
சாமா அலி, மீரா அலி மற்றும் முசாபர் அலி ஆகியோகின் ஹவுஸ் ஆஃப் கோத்வாராவிற்கு ஷோஸ்டாப்பராக நடிகை தியா மிர்ஷா வந்திருந்தார். அப்போது அவர் இந்த டிசைனர்கள் வடிவமைத்த கிரே நிற லெஹங்கா மற்றும் வெள்ளை நிற ஸ்டாப்லெஸ் கோர்செட் அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

மலாய்கா அரோரா கான்
நடிகை மலாய்கா அரோரா கான் டிசைனர் வருண் சக்கிலத்திற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் ராம்ப் வாக் நடக்கும் போது, அந்த டிசைனர் வடிவமைத்த வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அடர் சிவப்பு நிற லெஹெங்கா அணிந்திருந்தார்.

தபு
நடிகை தபு டிசைனர் கவுரங்கிற்கு ஷோஸ்டாப்பராக, டிசைனர் வடிவமைத்த ஒரு பாரம்பரிய கருப்பு மற்றும் கோல்டன் நிற கைத்தறி உடையை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

நோரா ஃபதேஹி
நோரா ஃபதேஹி இரட்டையர் டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகாவுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் நிகழ்ச்சியின் போது டிசைனர்கள் வடிவமைத்த அழகிய செக்ஸியான பாடிகான் கருப்பு கவுனை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

சோஹா அலி கான்
சோஹா அலி கான் ஆடை வடிவமைப்பாளர் ஷாஹின் மன்னனுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் ராம்ப் வாக் நடக்கும் போது, அழகாக வடிவமைக்கப்பட்ட நீல நிற கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்திருந்தார்.

தாரா சுத்தாரியா
டிசைனர் புனித் பாலானாவுக்கு தாரா சுத்தாரியா ஷோஸ்டாப்பராக வந்தார். இவர் டிசைனர் வடிவமைத்த லைட் பிங்க் நிற லெஹெங்கா அணிந்து அழகாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

ஷ்ரதா கபூர்
பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் இரட்டையர் டிசைனர்களான பங்கஜ் மற்றும் நிதிக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இவர் இந்த டிசைனர்கள் வடிவமைத்த வண்ணமயமான விளிம்புகளைக் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் டாப் மற்றும் ஜீன்ஸ் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் காவேரி என்ற லேபிளுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதுவும் அந்த கலெக்ஷனில் உள்ள ஸ்பெஷல் உடையான மஞ்சள் மற்றும் ப்ரௌன் நிற உடை அணிந்து க்யூட்டாக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

திவ்யா கோஸ்லா
திவ்யா கோஸ்லா க்ர்ஸ்னா கோடூருக்கு ஷோஸ்டாப்பராக மின்னும் சில்வர் நிற டீப் லோ நெக் கொண்ட கிராப் டாப் மற்றும் நீளமான ஸ்கர்ட் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

இலியானா
நடிகை இலியானா மிருனாலினி ராவ்விற்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். இந்த டிசைனருக்காக ராம்ப் வாக் நடக்கும் போது, இவர் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஊதா நிற லெஹெங்கா அணிந்து வந்திருந்தார்.

கரீனா கபூர்
பாலிவுட் நடிகை கரீனா கபூர் டிசைனர் அமித் அகர்வாலின் கலெக்ஷனுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். கரீனா கபூர் இந்த டிசைனர் வடிவமைத்த அடர் பச்சை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். கரீனா கபூர் அணிந்து வந்த கவுனின் முன்புறம் டீப் லோ நெக் கொண்டிருந்ததோடு, கூர்மையான விளிம்புகளையும் கொண்டிருந்தது. இதனால் இந்த உடை கரீனா கபூரின் கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது.

சன்னி லியோன்
சன்னி லியோன் 2020 லேக்மீ ஃபேஷன் வீக்கின் போது டிசைனர் ஸ்வப்னில் ஷிண்டேவின் கலெக்ஷனுக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் 2020 லேக்மீ ஃபேஷன் வீக் சம்மர்/ரெசார்ட்டில் AJIO பிராண்டிற்காக ஷோஸ்டாப்பராக வந்தார். அதுவும் அவர் வெள்ளை நிற காலர் டாப்ஸ் மற்றும் முழங்கால் அளவுள்ள பேண்ட் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.



Click it and Unblock the Notifications
