Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
2021 சைமா விருது விழாவிற்கு செக்ஸியான உடையணிந்து கவர்ச்சியை தெறிக்கவிட்ட பிரபலங்கள்!
சைமா விழாவில் பல நடிகைகள் அட்டகாசமான உடைகளை அணிந்து வந்து, இந்த விழாவின் சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தனர். கீழே 2021 சைமா விருது விழாவிற்கு அழகிய உடைகளை அணிந்து வந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் தான் சைமா விருதுகள் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிகவும் முக்கியமான பொழுதுபோக்கு விருது விழாக்களில் ஒன்றாகும். இந்து விருது விழா ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சைமான விருதுகள் அதன் ஒன்பதாவது பதிப்பை ஐதராபாத்தில் உள்ள ஐதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடத்தியது.
சைமா 2021 அணியானது தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கான 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலை ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பின், இம்மாதிரியான விருது விழாக்கள் நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா வழக்குகள் ஓரளவு குறைவாக இருப்பதால், இந்த விழா சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பல நடிகைகள் அட்டகாசமான உடைகளை அணிந்து வந்து, இந்த விழாவின் சிவப்பு கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்தனர். கீழே 2021 சைமா விருது விழாவிற்கு அழகிய கண்கவர் உடைகளை அணிந்து வந்த நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா
தெலுங்கில் ஒரே பாடலில் மிகவும் பிரபலமான நடிகை தான் ராஷ்மிகா. இவர் சைமா விருது விழாவிற்கு ஒற்றை தோள்பட்டை கொண்ட சிவப்பு கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த கவுனிற்கு இவர் அளவான மேக்கப் போட்டு, நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் சைமா சிவப்பு கம்பளத்திற்கு கருப்பு நிற கவர்ச்சிகரமான மின்னும் ஒற்றை தோள்பட்டை கொண்ட உடை அணிந்து வந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடையின் வடிவமைப்பாளர் கௌரவ் குப்தா. இந்த உடைக்கு இவர் ப்ரக்சி ஃபைன் ஜூவல்லரியில் இருந்து சில நகைகளை அணிந்து வந்திருந்தார்.

ராய் லட்சுமி
நடிகை ராய் லட்சுமி டீப் லோ நெக் கொண்ட அடர் நீல நிற செக்ஸியான கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் கண்களுக்கு நீல நிற ஐ-ஷேடோ போட்டு, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து வந்திருந்தார்.

பூர்ணா
நடிகை பூர்ணா சைமா விருது விழாவிற்கு மிகவும் அழகாக கோல்டன் ஜரிகை கொண்ட சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் பொருத்தமாக கழுத்தில் பெரிய நெக்லேஸ் மற்றும் காதுகளில் பெரிய காதணியை அணிந்து வந்திருந்தது, அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.

அக்ஷரா ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசனின் சகோதரியும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் டிசைனர் கவுரவ் குப்தா வடிவமைத்த கருப்பு கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் அடர் மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். ஹேர் ஸ்டைல் பற்றி கூற வேண்டுமானால், ப்ரீ ஹேர் விட்டு முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்திருந்தார்.

ரெஜினா கேசன்ட்ரா
சைமா விருது விழாவிற்கு நடிகை ரெஜினா கேசன்ட்ரா மிகவும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்கும் டீப் V-நெக்லைன் கொண்ட மின்னும் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் ஹை-நாட் போனிடைல் போட்டு, அளவான மேக்கப் போட்டு வந்திருந்தது, இவரை அழகாக காட்டியது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
சைமா விருது விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் அழகான ஃபுல் ஸ்லீவ் கொண்ட லெஹெங்கா அணிந்து வந்திருந்தார். இந்த உடைக்கு இவர் பொருத்தமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலை மேற்கொண்டு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications