நீண்ட நாட்களுக்கு பின் 'சாகுந்தலம்' ட்ரைலர் வெளியீட்டிற்கு அழகான புடவையில் தேவதைப் போன்று வந்த சமந்தா!

சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் என்னும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா தனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார்.

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை நடித்து, ஏராளமான ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்தவர். அடுத்தடுத்து பல வித்தியாசமான படங்களில் நடித்து, சினிமாவின் மீதுள்ள காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். சமந்தா எப்போதும் ஃபிட்டாக இருக்க, பல கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார். அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டு, தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Actress Samantha In Ivory Organza Saree At Shakuntalam Movie Trailer Launch

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் அரிய வகை நோயான மயோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதையும், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே சமந்தா இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும் சமந்தா தனக்கு உள்ள நோயால் நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கு கொள்ளாமல் இருந்தார்.

ஆனால் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் என்னும் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா தனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார். அப்போது அந்த விழாவில் படத்தின் இயக்குநர் பேசும் போது, அவரது பேச்சால் சமந்தா உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே அழுதார். இந்த விழாவில் கலந்து கொள்ளும் போது, சமந்தா அட்டகாசமான புடவையில் வந்திருந்தார். கீழே சாகுந்தலம் திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் எடுத்த சமந்தாவின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐவரி புடவை

ஐவரி புடவை

சாகுந்தலம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகை சமந்தா ஐவரி புடவை அணிந்து வந்திருந்தார். இந்த புடவையானது ட்ராண்ஸ்பரண்ட்டாக இருந்ததோடு, புடவையின் இரண்டு ஓரங்களிலும் அழகாக எம்பிராய்டரி வேலைபாடு செய்யப்பட்டிருந்தது.

அழகான ஜாக்கெட்

அழகான ஜாக்கெட்

சமந்தா இந்த செக்ஸியான புடவைக்கு மேட்ச்சான ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். இந்த வித்தியாசமான டிசைனைக் கொண்ட ஜாக்கெட், சமந்தாவின் தோற்றத்தையே மிகவும் க்யூட்டாக வெளிக்காட்டியது.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

சமந்தா இந்த வெள்ளை நிறைய ட்ராண்ஸ்பரண்ட் புடவைக்கு கை, கழுத்துகளில் ஆபரணங்கள் அதிகம் அணியவில்லை. காதுகளில் வைர வளையங்களை மட்டும் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார். இது இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

மேக்கப்

மேக்கப்

சமந்தா இந்த புடவைக்கு ஏற்றவாறு அளவான மேக்கப் போட்டு வந்திருந்தார். அதில் கன்னங்களில் பிங்க் பிளஷ், உதடுகளில் நியூட் லிப்ஸ்டிக், கண்களுக்கு அளவான மேக்கப் மற்றும் அழகான கண்ணாடி போன்றவை குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக சமந்தா இந்த புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு வந்திருத்து, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக காட்டியது.

படத்தின் நாயகன் தேவ் மோகன்

படத்தின் நாயகன் தேவ் மோகன்

சாகுந்தலம் திரைப்படத்தின் கதாயகன் தேவ் மோகன். இவர் இந்த திரைப்பட ட்ரெய்லர் விழாவிற்கு வெள்ளை நிற உடை அணிந்து, கால்களில் கருப்பு நிற பூட்ஸ் அணிந்து வந்திருந்தார்.

படக்குழுவினருடன் சமந்தா

படக்குழுவினருடன் சமந்தா

இது சாகுந்தலம் படக்குழுவினர்களான நடிகர் தேவ் மோகன், டைரக்டர் குணசேகர், தில் ராஜூ மற்றும் தயாரிப்பாளர் நீலிமா குணா ஆகியோருடன் சேர்ந்து சமந்தா எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion