Just In
- 1 hr ago
சூட்டைக் கிளப்பும் பிகினியில் தாறுமாறு போஸ்களைக் கொடுத்து சூடேற்றிய வேதிகா!
- 1 hr ago
எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் ஏமாற்றுவார்கள் தெரியுமா? ஏன் ஏமாற்றுவார்கள் தெரியுமா?
- 3 hrs ago
சன்னா பட்டர் மசாலா
- 3 hrs ago
விநாயகருக்கான சதுர்த்தி தினம் பற்றியும் சடங்குகள் மற்றும் இந்த நாளின் முக்கியத்துவம் என்ன தெரியமா?
Don't Miss
- Finance
தங்க நகை வாங்க இது சரியான நேரம்.. சவரனுக்கு ரூ.712 சரிவு.. சவரன் கிட்டதட்ட ரூ.34,000.. !
- News
100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை
- Movies
குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
- Automobiles
பாதுகாப்பான காரை வாங்க சபதமெடுக்கும் இந்தியர்கள்... ராக்கெட் வேகத்தில் முன்னேறும் டாடா மோட்டார்ஸ்...
- Sports
விராட் கோலி இத மட்டும் செஞ்சா போதும்.யாரும் செய்யாத மெகா சாதனையை படைக்கலாம்..எகிறும் எதிர்பார்ப்பு
- Education
வேலை, வேலை, வேலை!! தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாயைப் பிளக்க வைக்கும் பிரியங்கா சோப்ராவின் சில செக்ஸியான தோற்றங்கள்!
பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனது திறமையால் பிரபலமானவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் ஒவ்வொரு முறை சிவப்பு கம்பள விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போதும், அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அழகான மற்றும் கவர்ச்சிகரமான உடையில் வருவார். சில சமயங்களில் இவர் அணிந்து வந்த உடையைப் பார்த்து விழாவிற்கு வந்தவர்கள் வாயைப் பிளந்ததும் உண்டு.
அதிலும் திருமணத்திற்கு பிறகு தனது கணவரான நிக் ஜோனாஸ் உடன் பல விருது விழாக்களில் பிரியங்கா சோப்ரா கலந்துள்ளார். அப்போது அவர் பெரும்பாலும் மிகவும் லோ நெக் கொண்ட மிகவும் கவர்ச்சிகரமான உடைகளையே தேர்ந்தெடுத்து அணிந்து வந்துள்ளார். இப்போது கணவர் ஜோனாஸ் உடன் விருது விழாக்களுக்கு மிகவும் கிளாமராக வந்த பிரியங்கா சோப்ராவின் சில தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கிராமி 2020
2020 கிராமி விருது விழாவில் பிரியங்கா சோப்ரா படு கிளாமரான உடையில் வந்திருந்தார். அதுவும் மிகவும் லோ நெக் கொண்ட தொப்புள் தெரியுமாறானா வெள்ளை நிற கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் இவர் கழுத்திற்கு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல், காதுகளுக்கு நீளமான காதணி மற்றும் தொப்புளில் அழகான வளையமும் அணிந்து வந்திருந்தார். இது இதுவரை இவர் அணிந்து வந்த உடைகளிலேயே மறக்க முடியாத ஒன்று எனலாம்.

வேனிட்டி ஃபேர் பார்ட்டி 2019
கடந்த வருடம் நடந்த வேனிட்டி ஃபேர் பார்ட்டியில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மிகவும் கிளாமரான உடையில் வந்திருந்தார். இந்த கருப்பு நிற மின்னும் உடை மிகவும் லோ நெக் கொண்டிருந்ததுடன், ஒருபக்க தொடை முழுவதும் தெரியுமாறு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இந்த உடையில் பிரியங்கா சோப்ரா மிகவும் போல்ட்டாக காட்சியளித்தார்.

பில்போர்டு விருதுகள் 2019
பிரியங்கா சோப்ரா 2019 ஆம் ஆண்டின் பில்போர்டு விருது விழாவிற்கு அற்புதமான உடையில் தனது கணவர் ஜோனாஸ் உடன் வந்திருந்தார். 'V' நெக்லைன் கொண்ட இந்த வெள்ளை நிற மின்னும் உடை பிரியங்கா சோப்ராவின் அழகை அதிகரித்துக் காட்டியது. அதிலும் இந்த உடைக்கு இவர் 3 அடுக்கு வைர நெக்லேஸ் அணிந்து வந்தது, அவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

ஆஸ்கர் பார்ட்டி 2019
பிரியங்கா சோப்ரா 2019 ஆம் ஆண்டின் ஆஸ்கர் பார்ட்டிக்கு மிகவும் லோ நெக் கொண்ட கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தார். ஹால்டர் நெக் கொண்ட இந்த கருப்பு உடையானது, பிரியங்காவை அற்புதமாக காட்டியது. மேலும் இந்த உடைக்கு பிரியங்கா அணிந்து வந்த காதணி மற்றும் மின்னும்படியான ஐ-ஷேடோ மேக்கப் போன்றவை அழகை அதிகரித்து காட்டியது.

டிவி நிகழ்ச்சி
பிரியங்கா சோப்ரா விருது விழாக்களில் மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் கவர்ச்சிகரமான மிகவும் லோ நெக் கொண்ட பேண்ட்சூட் உடை அணிந்து வந்திருந்தார். இதுவரை இப்படியொரு உடை அணிந்து எந்த ஒரு நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை எனலாம்.

2018 இல் பிரியங்காவின் ஹாட் போட்டோசூட்
பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு சிவப்பு நிற மின்னும் உடை அணிந்து போட்டோசூட் ஒன்றை எடுத்தார். இந்த உடையானது மிகவும் லோ நெக் கொண்டிருந்ததோடு, ஒரு தொடை முழுவதும் தெரியுமாறு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.