Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள்
தனது நீண்ட நாள் காதலரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலா பால் - இதோ திருமண போட்டோக்கள்!
Amala Paul Wedding Photos: தென்னிந்திய நடிகையான அமலா பால் 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த 'மைனா' என்னும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
அதுவும் விஜய் நடித்த 'தலைவா' மற்றும் சியான் விக்ரம் நடித்த 'தெய்வ திருமகள்', சூர்யாவின் 'பசங்க 2', தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' போன்ற திரைப்படங்களில் நடித்ததோடு, தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களையும் பெற்றார்.

நடிகை அமலா பால் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார். அடிக்கடி தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருப்பார். சுந்திரப் பறவைப் போன்று சுற்றிக் கொண்டிருந்த அமலா பால் தொழிலதிபரும், தனது நீண்ட நாள் நண்பருமான ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.
மேலும் சில நாட்களுக்கு முன் நடிகை அமலா பால் தனது நீண்ட நாள் காதலரான ஜகத் தேசாய் என்னும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருடன் கோவாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதோடு இன்ஸ்டா பக்கத்திலும் இவர் அந்த நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டும் இருந்தார்.
இந்நிலையில் நடிகை அமலா பால் தனது காதலரான ஜகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை திடீரென்று நேற்று வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கேரளாவின் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் கொச்சி போல்காட்டியில் திருமணம் நடந்தது.
அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் தங்களது திருமணத்தின் போது லாவண்டர் நிற ஆடைகளை அணிந்திருந்தனர். அதுவும் அமலா பால் இந்த லாவெண்டர் நிற ஆடையில் தேவதை போன்று இருந்தார் என்றே சொல்லாம். இந்த திருமண வாழ்க்கை இருவருக்கும் சிறப்பாக இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்.
நடிகை அமலா பால் ஏற்கனவே பிரபல இயக்குநரான ஏ.எல். விஜய் என்பவரை காதலித்து 2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின் அமலா பால் நடிப்பதில் விஜய்க்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2016 ஆம் ஆண்டில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். 2017 ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications