Miss World 2024: 71வது உலக அழகி போட்டியில் ஆசியாவில் இருந்து கலந்து கொள்ளும் டாப் 10 அழகிகள்!

71st Miss World Pageant: 71 ஆவது உலக அழகி போட்டி இந்தியாவில் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுவும் இந்த போட்டியானது மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த உலக அழகி போட்டியானது சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் நடக்கவுள்ளது.

கடைசியாக இந்தியாவில் உலக அழகி போட்டியானது 1996 ஆம் ஆண்டு நடைபெற்றது. உலக அழகி போட்டிகள் 1951 ஆம் ஆண்டு முதலாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு, உலக அழகி பட்டத்தை வென்றார்.

71st Miss World: List Of Contestants From The Top 10 Asian Countries In The World In Tamil

இந்த உலக அழகி போட்டியில் சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் ஒரு மாத காலம் இந்த போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த ஒரு மாத காலம் இந்தியாவின் பல நகரங்களில் உலக அழகியை தேர்ந்தெடுக்கும் பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன.

வெறும் அழகினால் மட்டுமின்றி, திறமை, புத்திசாலித்தனம் என அனைத்திலும் சிறந்த ஒருவரை இந்த போட்டியின் மூலம் உலக அழகியாக தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒவ்வொரு அழகிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். இப்போது ஆசியா கண்டத்தில் உள்ள டாப் 10 நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும் அழகிகள் யார்யார் என்பதைக் காண்போம்.

ஷம்மி இஸ்லாம் நிலா - பங்களாதேஷ்

உலக அழகி பங்களாதேஷ் வெற்றியாளர் ஷம்மி இஸ்லாம் நிலா இந்த 71 ஆவது உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இவருக்கு வயது 21 தான். இவர் ஆசிய டெலிவிஷன் நெட்வொர்க் ஒளிபரப்பிய விழாவிற்குப் பிறகு, தனது திறமையால் 9 இறுதிப் போட்டியாளர்களை வெளியேற்றி வெற்றி பெற்றார்.

வெனனிதா ஆங்காங் - மலேசியா

மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வெனனிதா ஆங்காங் 71 வது உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இவர் கோலாலம்பூரில் உள்ள தரவு ஆய்வாளர் ஆவார். சிறந்த நேர மேலாண்மை திறன்களைக் கொண்டுள்ளார். சமூக மாற்றத்தை உருவாக்குவதில் வலுவான நம்பிக்கை கொண்ட வெனனிதா, மலேசிய ஆட்டிஸ்டிக் சமூகத்தின் விழிப்புணர்வு, ஏற்றுக்கொள்ளல் மற்றும் சேர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார். குறிப்பாக இவர் ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கான ஹிப்போதெரபியில் ஆர்வமாக உள்ளார்.

பிரியங்கா ராணி ஜோஷி - நேபாளம்

நேபாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாடல் அழகி பிரியங்கா ராணி ஜோஷி பங்கு கொள்கிறார். இவர் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளார் மற்றும் டிவி தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் எனப் பணியாற்றியுள்ளார். அவர் தற்போது தனது குடும்ப வணிகத்தை ஆதரிக்கிறார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான தூதராக மாற விரும்புகிறார். டிரைவிங் ஸ்போர்ட்ஸ், ஸ்கேட்டிங், எழுத்து மற்றும் திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட பல பொழுதுபோக்குகளில் பிரியங்கா ஈடுபட்டுள்ளார்.

ஓ வெய் குய் - சிங்கப்பூர்

சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தி மாடல் அழகி ஓ வெய் குய் கலந்து கொள்ளவிருக்கிறார். இவர் வடிவமைப்பு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது சொந்த நீச்சலுடை பிராண்டை வைத்திருக்கிறார், மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் கலை ஆசிரியராகவும் பணிபுரிகிறார். ஃபேஷன் டிசைன் மற்றும் மீடியாவில் ஒரு பின்புலத்துடன், அவர் முனைவர் பட்டம் முடிப்பது, கலைக் கல்வி மையத்தை உருவாக்குவது மற்றும் தனது ஃபேஷன் பிராண்டை விரிவுபடுத்துவது போன்ற லட்சியங்களைக் கொண்டுள்ளார். இவருக்கு வரைதல், ஓவியம், ஆடை வடிவமைப்பு மற்றும் தையல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

கவிந்தி நேத்மினி - இலங்கை

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாடல் அழகி கவிந்தி நேத்மினி கலந்து கொள்கிறார். நிதித்துறையில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்த இவர், ஆராய்ச்சி எழுத்தாளராகவும் வணிக ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். மேலும் இவர் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ஏரோபிக்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கண்டிய நடனம் மற்றும் டிரம்ஸ் பாடங்களை எடுக்கிறார். இவர் ஃப்ரீலான்ஸ் மாடலாகவும் பணிபுரிந்துள்ளார்.

லிஜின் கிம் - தென் கொரியா

தென் கொரியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மாடல் அழகி லிஜின் கிம் கலந்து கொள்கிறார். இவர் ஏர்லைன் கேபின் சர்வீஸ் மேனேஜ்மென்ட்டில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பைலேட்ஸ் பயிற்றுவிப்பாளராக உள்ளார். விளையாட்டு அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இளம் தலைமுறையினர் விளையாட்டை ரசிக்க ஒரு ஆதரவான சூழலை உருவாக்க குளோபல் ஸ்போர்ட்ஸ் ஏஜென்சியின் CEO ஆக அவர் விரும்புகிறார். இவருக்கு யோகா, பைலேட்ஸ் மற்றும் கே-பாப் நடனங்களில் ஆர்வம் அதிகம்.

தாரினா போட்ஸ் - தாய்லாந்து

தாய்லாந்து நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி மாடல் அழகி தாரினா போட்ஸ் கலந்து கொள்கிறார். இவர் தற்போது வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தலில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார், மேலும் அவர் தனது ஆடை பிராண்டையும் நடத்தி வருகிறார். இவர் கனவு வேலை அடுத்த ஓப்ரா வின்ஃப்ரே ஆவதானாம். அவருக்கு பாரம்பரிய தாய் நடனம், டென்னிஸ் விளையாடுதல், ஓவியம் வரைதல் மற்றும் ஃப்ரீடைவிங் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். இவரால் நீருக்கடியில் 2 நிமிடம் 39 வினாடிகள் கூட மூச்சு விடாமல் இருக்க முடியும்.

கே சூ சின் - சீனா

உலக அழகி சீனா கே சூ சின், இந்த ஆண்டு உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இவர் ஒரு பட்டதாரி, அவர் தனது மாறுபட்ட ஆர்வங்களை பிரதிபலிக்கும் பல்வேறு பொழுதுபோக்குகளில் ஈடுபடுவார்.

சினி ஷெட்டி - இந்தியா

உலக அழகி போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மாடல் அழகி சினி ஷெட்டி கலந்து கொள்கிறார். இவர் கணக்கியல் மற்றும் நிதித்துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மிஸ் இந்தியா 2022 வெற்றியாளர் CFA படிப்பதாகத் கூறப்படுகிறது. சினி ஷெட்டி மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் படிப்பைத் தவிர, இந்தியாவின் பாரம்பரிய நடனமாடுவதிலும் சிறந்தவர். இவர் 14 வயதில் பரதநாட்டியத்தில் அரங்கேற்றம் முடித்துள்ளார்.

ஆட்ரி வனேசா - இந்தோனேசியா

இந்தோனேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மாடல் ஆட்ரி வனேசா கலந்து கொள்கிறார். இவர் வணிகத்தில் முதல் பட்டமும், வங்கி மற்றும் நிதித்துறையில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார். இவர் தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும், தொழில்முனைவோராகவும், மாடல் மற்றும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு கோல்ஃப், டைவிங், கூடைப்பந்து, பியோனோ, வயலின் மற்றும் பாரம்பரிய இந்தோனேசிய இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.

Image Courtesy: Instagram

Story first published: Sunday, February 18, 2024, 14:44 [IST]
Desktop Bottom Promotion