Latest Updates
-
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிக்கன் குருமா சுவையில் தக்காளி குருமா- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
சந்திர காந்தா கல் அணிந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? இத்தனை நாள் தெரியாம போச்சே..
Moonstone Benefits In Tamil: ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட ரத்தின கற்கள் உள்ளன. இந்த ரத்தினக் கற்கள் ஒவ்வொன்றும் பலவீனமாக இருக்கும் அந்தந்த கிரகங்களின் வலிமையை அதிகரிக்கும். அந்த வகையில் நிலா கல் என்று அழைக்கப்படும் சந்திர காந்தா கல் வெள்ளை நிறத்திலான ரத்தின கல்லாகும். இந்த கல் சந்திரனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் இந்த சந்திர காந்தா கல் சந்திரனுடன் தொடர்புடையது. அதோடு இந்த கல் உள்ளுணர்வு மற்றும் அமைதியான ஆற்றலை மேம்படுத்துகிறது. நவரத்தினங்களிலேயே நிலா கல்லான சந்திர காந்தா கல் மிகவும் அழகானதாக மற்றும் கவர்ச்சிகரமானதாக கருதப்படுகிறது. இந்த கல்லை மோதிரமாகவோ அல்லது பென்டெண்ட் போன்றோ அணியலாம். அதுவும் இந்த கல்லின் அழகை இன்னும் மெருகேற்ற வெள்ளியுடன் சேர்த்து அணியலாம்.

விலைக்குறைவில் சந்திர காந்தா கல்லை வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் பண்ணுங்க..
இந்த சந்திர காந்தா கல்லானது சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட் கொண்ட கனிமம் ஆகும். இப்படிப்பட்ட நிலாக்கல் ரத்தினத்தை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் எந்த நாளில் அணிய வேண்டும் என்பன பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
சந்திர காந்தா கல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்
* சந்திர காந்தா கல்லை அணிவது மன அழுத்தம், பதட்டம் மற்றும் அமைதியின்மையை குறைக்க உதவுகிறது.
* இந்த சந்திர காந்தா கல் கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் குறைக்க உதவுகிறது.
* சந்திர காந்தா கல்லை அணிவதன் மூலம் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும்.
* பண இழப்புக்கள் எதுவும் ஏற்படாது. வருமானத்தில் உயர்வும், நிறைய பணத்தை சம்பாதிக்கவும் முடியும்.
* காதலுக்கும் சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால், இந்த சந்திர காந்தா கல்லை அணிந்தால், காதல் கை கூடும். திருமண உறவில் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
* சந்திர காந்தா கல்லை அணிவதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, மனநிலை தெளிவாக இருக்கும்.
* நிலாக் கல்லை அணிவதன் மூலம் படைப்பாற்றல் அதிகரிப்பதோடு, தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக உள்ளுணர்வு அதிகரிக்கும்.
* தூக்கமின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள் இந்த நிலாக் கல்லை அணிந்து கொண்டாலோ அல்லது அந்த கல்லை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினாலோ, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
நிலா கல்லை எப்படி அணிய வேண்டும்?
* நிலா கல்லை அணிய நினைத்தால், அதை தொடர்ந்து அணிந்திருக்க வேண்டும். அப்படி அணிந்தால் மட்டுமே அதன் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் அதன் விளைவுகளை பெற முடியும்.
* நிலா கல்லை அணியும் முன் கங்கை நீரில் அல்லது சுத்தமான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, அதில் போட்டு சில மணிநேம் ஊற வைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
* நிலா கல்லின் ஆற்றலை அதிகரிக்கவும், செயல்படுத்தவும், அதை அணியும் முன் "ஓம் சோமாய நமஹ" என்னும் மந்திரத்தை 11 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
* சந்திரனின் ஆற்றலுடன் ஒத்துப்போக, நிலாக் கல் மோதிரத்தை உங்கள் வலது கையின் சுண்டு விரலில் வைக்கவும். இது அமைதியையும் உணர்ச்சி சமநிலையையும் ஊக்குவிக்கிறது.
எந்த நாளில் சந்திர காந்தா கல்லை அணிய வேண்டும்?
ஜோதிடத்தின் படி, சந்திர காந்தா கல்லை அணிய சிறந்த நாள் திங்கட்கிழமை. ஏனெனில் திங்கள் சந்திரனுடன் தொடர்புடையது. அதுவும் இந்த சந்திர காந்தா கல்லை அணிபவர்கள் திங்கட்கிழமை அதிகாலையில் குளித்துவிட்டு, பூஜை அறையில் வைத்து அணிய வேண்டும்.
இப்படிப்பட்ட சந்திர காந்தா கல்லை வாங்க நினைத்தால், அதை ஆஸ்ட்ரோடாக் தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இதன் உண்மையான விலை ₹4,099. ஆனால் தற்போது ஆஃபரில் ₹2,849 விலைக்கு விற்கப்படுகிறது. மிஸ் பண்ணாம உடனே வாங்கி போடுங்க...
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











