மன அழுத்தம் குறைந்து நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டுமா? அப்ப இந்த பிரேஸ்லெட்டை வாங்கி போடுங்க..

Amethyst Bracelet: இவ்வுலகில் ஒருவரது வாழ்க்கையை செழிப்பாக்கும் மற்றும் நிம்மதியான வாழ்க்கையை வாழ உதவி புரியும் ஏராளமான ரத்தின கற்கள் உள்ளன. இந்த ரத்தின கற்களானது பூமிக்கு அடியில் விளையும் சக்தி வாய்ந்த கற்களாகும். இந்த ரத்தின கற்களில் பல உள்ளன. அதில் ஒன்று தான் அமிதிஸ்ட் கல் (Amethyst Stone). இதை தமிழில் செவ்வந்திக்கல் என்று அழைப்பர். இந்த செவ்வந்திக்கல் கண்களைக் கவரும்படியான ஒரு அழகான கல்லாகும்.

இந்த செவ்வந்திக்கல் அக்காலத்தில் மன்னர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் இந்த கல்லானது மன்னர்கள் அமரும் நாற்காலிகள், அரண்மனைகளில் பதிக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால் இந்த கல்லை பதித்திருப்பதை மன்னர்கள் ஒரு கௌரவமாக கருதினர்.

தரமான அமிதிஸ்ட் பிரேஸ்லெட்டை விலைக் குறைவில் வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் பண்ணுங்க..

Amazing Benefits Of Wearing Amethyst Bracelet

அதோடு போருக்கு செல்லும் வீரர்கள் இந்த கல்லை அணிந்து கொண்டு செல்வார்கள். இப்படி அணிந்து செல்வதால் போரில் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பினர். அதோடு இந்த கல்லை அணிந்திருந்தால், ஆபத்தை விளைவிக்கும் எதுவும் அண்டாது என்றும் கொண்டு சென்றனர். இப்படிப்பட்ட செவ்வந்திக் கல்லை ஒருவர் பலவாறு பயன்படுத்தலாம். முக்கியமாக இதை பிரேஸ்லெட் போன்று அணிந்தால், அது ஒருவருக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதோடு, நல்ல ஸ்டைலான தோற்றத்தையும் கொடுக்கும்.

வேத ஜோதிடத்தில் செவ்வந்திக்கல் சனி பகவானை திருப்திப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கல்லை அணிவதால் அது அணிபவரை அமைதியாக உணர வைக்கும். இப்போது அமிதிஸ்ட் பிரேஸ்லெட் அல்லது செவ்வந்திக் கல் பிரேஸ்லெட்டை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

செவ்வந்திக் கல் பிரேஸ்லெட்டின் நன்மைகள்

1. செவ்வந்தி வளைய சக்கரத்துடன் தொடர்புடையது. ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன திறன்களைத் தூண்டுகிறது. மன ரீதியான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. உள்ளுணர்வை வலுவாக்க உதவுகிறது.

2. இந்த பிரேஸ்லெட்டை அணிவதன் மூலம் மன அமைதி கிடைப்பதோடு, உணர்ச்சி சமநிலையை ஊக்குவிக்கிறது. இதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனநிலையில் ஏற்படும் ஊசலாட்டங்களை போக்க உதவுகிறது.

3. இரவு நேரத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் மற்றும் கெட்ட கனவால் தூக்கத்தை தொலைப்பவர்கள், இந்த செவ்வந்திக் கல் பிரேஸ்லெட்டை அணிவதன் மூலம் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். இந்த கல் மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.

4. அமிதிஸ்ட் பிரேஸ்லெட் மனதை குழப்பமின்றி தெளிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, ஒருவரது முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துகிறது.

5. பில்லி, சூரியம், கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றல்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இதை அணிவதன் மூலம் ஒருவித பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கிறது மற்றும் நேர்மறை உணர்வுகளையும் அதிகரிக்க உதவுகிறது.

6. செவ்வந்திக் கல் தெய்வீகத் தன்மை கொண்டது மட்டுமின்றி, மருத்துவ ரீதியாக மிகவும் நல்ல பலன்களைத் தரக்கூடியது. பெண்கள் இந்த செவ்வந்திக்கல் பிரேஸ்லெட்டை அணிவதன் மூலம், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். அதோடு கை, கால் மூட்டு வலி, முதுகு வலியை சந்திப்பவர்கள் இந்த பிரேஸ்லெட்டை அணிவதன் மூலம், அந்த வலிகள் படிப்படியாக குணமாகும்.

7. முக்கியமாக அடிக்கடி அதிகம் பயணம் செய்பவர்கள் இந்த செவ்வந்திக்கல் பிரேஸ்லெட்டை அணிந்து கொண்டால், விபத்துக்கள் எதுவும் ஏற்படாது.

எப்படி அணிய வேண்டும்?

* செவ்வந்திக் கல் பிரேஸ்லெட்டை முதன்முதலாக அணிபவர்கள் சனிக்கிழமைகளில் அணிய வேண்டும்.
* இந்த கல்லை சுத்தப்படுத்த மற்றும் அதன் ஆற்றலை அதிகரிக்க, ஒரு கிண்ணத்தில் நீரை எடுத்து, அதில் 1 சிட்டிகை இமாலயன் உப்பை சேர்த்து கலந்து, அந்த நீரில் இந்த செவ்வந்திக்கல் பிரேஸ்லெட்டைப் போட்டு, சில மணிநேரம் ஊற வைத்து, பின் அதை வெளியே எடுத்து அணிய வேண்டும்.
* முக்கியமாக இந்த செவ்வந்திக்கல் பிரேஸ்லெட்டை அணியும் போது, தெளிவாக மனதுடன் உங்கள் நோக்கங்களில் கவனம் செலுத்தி அணிய வேண்டும்.
* முக்கியமாக இந்த பிரேஸ்லெட்டை அணிவதற்கு முன் "ஓம் சாந்தி சாந்தி சாந்தி" என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து, பின் அணிய வேண்டும்.

இப்படிப்பட்ட அமிதிஸ்ட் பிரேஸ்லெட் அல்லது செவ்வந்திக்கல் பிரேஸ்லெட்டை வாங்க நினைத்தால், அதை ஆஸ்ட்ரோடாக் தளத்தில் ஆர்டர் செய்து வாங்குங்கள். இதன் விலை வெறும் ₹599 மட்டுமே. மிஸ் பண்ணாம உடனே வாங்கி அணிந்து நன்மை பெறுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion