Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...
பியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா அட்டகாசமான ஐ மேக்கப்பைப் பாருங்கள். அதுபற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
தற்போதைய அவரது லுக்கை பார்க்கும் போது ப்ரியங்கா சோப்ரா கல்யாணத்திற்கு பிறகு ஒரு ரிட்டன் பேக் என்றே கூறலாம்.அவரது ஆடை வடிவமைப்பு, ஸ்டைல், மேக்கப் எல்லாமே எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது என்றே கூறலாம். ஆமாங்க தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த பியூட்டி கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய புதிய தோற்றத்தை காண்பித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான செலிபிரிட்டிகள், பிராண்ட் ஓனர்கள், ரசிகர்கள் என்று எல்லாரும் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் நம்ம ப்ரியங்கா சோப்ரா தான் அழகே. அவருடைய அழகான மேக்கப் விஷயங்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.

மயக்கிய சோப்ரா
இந்த ஆண்டு ப்ரியங்கா சோப்ரா அவர்கள் கலந்து கொண்டு எல்லோரையும் மயக்கி உள்ளார். திருமணத்திற்கு பிறகும் இளமையாகவே தோற்றமளிக்கிறார். வெள்ளை நிற பேன்ட் ஷூட்டுடன், கருப்பு நிற மெஸ் டாப் அணிந்து அசத்தி இருந்தார். கழுத்தில் அணிந்திருந்த கருப்பு நிற காலர் அவருக்கு இன்னும் கூடுதல் அழகை சேர்த்தது.
அவருடைய ஆடை மட்டுமல்ல அவருடைய கண்களும் எல்லாரையும் கொள்ளையடித்து விட்டதே என்று கூறலாம். புஷியா பிங்க் மற்றும் ப்ளாக் கலர் கலந்த ஐ மேக்கப், பிங்க் நிற உதடுகள், நேர்த்தியான போனிடெயில் உடன் அவர் மேடையில் அமர்ந்திருந்தது எல்லார் பார்வையும் அவர் மேல் தான்.

மேக்கப் டிப்ஸ்கள்
நீங்களும் ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஜொலிக்கனுமா இதோ அந்த மேக்கப் டிப்ஸ்கள்
தேவையான பொருட்கள்
ப்ரைமர்
பவுண்டேஷன்
கண்சீலர்
ப்ளஷ்
பிஷியா பிங்க்
மெட்டாலிக் ஐ ஷேடோ
ப்ளாக் ஐ ஷேடோ
ப்ளாக் ஐ லைனர்
ஐ ப்ரோ பென்சில்
பிங்க் லிப்ஸ்டிக்
மஸ்காரா
பியூட்டி ப்ளண்டர்
ஐ ஷேடோ ப்ரஷ்
ப்ளஷ் ப்ரஷ்
செட்டிங் பவுடர்
செட்டிங் ப்ரே
டிரான்ஸ்பரண்ட் ஸ்டிக்கி டேப்.

செய்முறை
ப்ரைமரை T வடிவில் உங்கள் முகத்தில் அப்ளே செய்து விரல்களை கொண்டு நன்றாக பரப்பி கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடி ஸ்மூத் சருமத்தை கொடுக்கும்.
பவுண்டேஷனை முகத்தில் அப்ளே செய்து நன்றாக பரப்பி விடுங்கள்
கண்களை அழகாக்க கண்சீலரை பயன்படுத்துங்கள். கண்சீலரை கண்களுக்கு கீழே அப்ளே செய்து பரப்பி விடுங்கள்.

எப்படி மேக்அப் போட வேண்டும்?
கண்சீலர் போட்ட உடனே செட்டிங் பவுடர் கொண்டு செட்டில் செய்துவிடுங்கள்.
ஐ ப்ரோ பென்சிலைக் கொண்டு புருவங்களை நேர்த்தியாக்குங்கள்
இமைகளின் மேல் கூட கண்சீலரை அப்ளே செய்து பரப்பி விடுங்கள்
வளைவு போன்ற கண்களை பெற கண்களின் இமைகளின் நுனியில் டேப் வைத்துக் கொண்டு ஐ லைனர் போட தயாராகுங்கள்
பாதி இமைக்கு ப்ளாக் கலர் ஐ ஷேடோவும் மீதி இமைக்கும், கண்களின் கார்னர் பகுதிக்கும், நடுப்பகுதி இமைக்கும் பிங்க் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். ஐ ஷேடோ ப்ரஷ் கொண்டு பயன்படுத்துங்கள்.
ப்ல்ஃவி பிரஷ் கொண்டு நன்றாக பரப்பி விடுங்கள்
கன்னெலும்புகளில் ப்ளஷ்யை அப்ளே செய்யுங்கள்
எல்லாம் முடிந்த பிறகு லிப்ஸ்டிக் அப்ளே செய்யுங்கள்
மேக்கப் முடிந்த பிறகு செட்டிங் ப்ரே அப்ளே செய்யுங்கள். இது உங்கள் மேக்கப் நாள் முழுவதும் களையாமல் இருக்க உதவும்.



Click it and Unblock the Notifications