Just In
- 9 hrs ago
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- 20 hrs ago
வார ராசிபலன் (11.04.2021-17.04.2021) - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- 21 hrs ago
இன்றைய ராசிப்பலன் (11.04.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென செலவுகள் அதிகரிக்கும்…
- 1 day ago
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
Don't Miss
- News
கொரோனா தடுப்பூசி திருவிழா.. முதல் நாளில் 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி.. மத்திய அரசு தகவல்!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Automobiles
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிகினி முதன் முதலில் போட்டது யாரு தெரியுமா? இந்த பிகினி ஆடைக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?
பிக்னி, கடந்த நூறு ஆண்டுகளில் கடற்கரைக்கு செல்லும் பெண்கள் கனமான கம்பளி ஆடைகளை மட்டுமே அணிந்து சென்றனர். நிச்சயமாக இந்த காலம் திரும்பி வர போவது இல்லை. இப்போது பிக்னி அனைவரும் விரும்பக் கூடிய ஆடையாக மாறிவிட்டது. இந்த ஆடையை நாம் கைக்குட்டை வைக்கும் பர்சில் கூட வைத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு சிறியதாக இருக்கும். இந்த ஆடைக்கு ஏன் இப்படி பெயர் வந்தது என்று தெரியுமா?
பண்டைய ரோமானிய ஜிம்னாஸ்டுகள் ஆரம்ப காலத்தில் பிக்னி அணிந்து இருந்தார்கள். இந்த ஆடை அப்போது பிகினி என்று அழைக்கப்படவில்லை. மேலும் நான்காம் நூற்றாண்டில் ஒலிம்பிக் பங்கு பெரும் பெண்கள் இந்த ஆடையை அணிந்து இருந்தனர். பொழுதுபோக்கு நீச்சல் 19 ஆம் நூற்றாண்டு வரை தொடங்கவில்லை என்பதால், பெண்களுக்கு நீச்சலுடை அணிவதற்கு அப்போது காரணமில்லை.

ஹாலிவுட்டின் பொற்காலம்
1930 கள் மற்றும் 1940 களில் ஹாலிவுட்டின் பொற்காலத்தில் கார்ட்னர் மற்றும் ரீட்டா ஹேவொர்த் போன்ற நட்சத்திரங்கள் இறுதியாக ஒரு இரண்டு-துண்டு (டூ பீஸ்) குளியல் முறையை அறிமுகப்படுத்தினர். எல்லோரும் அடையாளம் காணும்படி தோன்றினார்கள். ஆனால் அவர்கள் அணிந்து இருந்த பிகினி தொப்புளை மறைத்த ஆடையாக இருந்தது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கஜோல், புடவைகளை கட்டி அசத்தி கொண்டிருக்கும் புகைபடங்கள் உள்ளே

பிகினி அறிமுகம்
இரண்டாம் உலகப் போரின் போது, பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர்கள் இரண்டு பேர்கள் உலகிலேயே மிக சிறிய பிகினி ஆடை ஒன்றை வடிவமைத்தனர். இது 30 அங்குலம் மட்டுமே இருந்தது. இந்த ஆடையை விளம்பரப்படுத்த எந்த ஒரு மாடலும் முன் வரவில்லை. பின்பு நடனக் கலைஞரான "மைக்கேலின் பெர்னார்டினி" என்பவரை வைத்து ஆடையை ஜூலை 5,1946 ஆம் ஆண்டு விளம்பரப்படுத்தினர். இது இன்று வரையிலும் பிகினி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆடையானது பழைய காலத்தில் செய்தித்தாள் அச்சடிக்கப்படும் துணியால் செய்யப்பட்டிருந்தது. ஏனெனில் அப்போதுதான் தலைப்புச் செய்திக்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்ததனர்.

பிகினி எதிர்ப்பு
தொப்புள்களை வெளிப்படுத்தும் பிகினி அறிமுகமான பிறகு பல சர்ச்சைகளுக்கு உள்ளது. இது இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் தடை செய்யப்பபட்டது. 1951 இல் நடந்த அழகி போட்டியில் முதல் முறையாக அழகிகள் பிகினி ஆடைகளை அணிந்து இருந்தனர்.ஆனால் பிரெஞ்சு நாடுகளில் மட்டும் பிகினி ஆடை தடை செய்யப்படவில்லை. மேலும் 1953 ஆம் ஆண்டு தி கேர்ள் இன் தி பிகினி என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நடிகை பிகினி உடையை அணிந்து நடித்துயிருந்தார். பின்னர் 1960களில் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பிகினி ஆடை தடை நீக்கப்பட்டது.

ஹோலிவுட் பிகினி
1960 க்கு பின்பு பிகினி உடை ஹோலிவுட்டில் மிகவும் பிரபலமானது. எந்த நடிகையும் தொப்புள்களை மறைத்து நடிக்கவில்லை. நம் அனைவரும் அறிந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிகைகள் பிகினி ஆடையில் வருவதை பார்த்து இருப்போம். அதன் பின்பு அனைத்து படங்களிலும் பிகினி வலம் வரத் தொடங்கிவிட்டது.

விளையாட்டுகளில் பிகினி
பண்டைய காலத்தில் ரோமானியர்கள் விளையாட்டில் பிகினியை பயன்படுத்தியது போல ஒலிம்பிக்கில் பீச் வாலிபால் விளையாட்டில் சீருடையாக பிகினி ஆடையை அணிய அறிவித்தனர். ஏனெனில் மணலில் விளையாடும் போது இந்த ஆடை மிகவும் வசதியாக இருக்கும் என்பதால் இதனை பீச் வாலிபால் சீருடையாக அறிவித்துள்ளனர்.
பிரியங்கா சோப்ரா, நிக் ஜான்ஸ் என்ன டிரஸ் போட்டு இருக்காங்க பார்த்திங்களா?

இன்று பிகினி
பிகினியை இன்று வரை பல நடிகைகள் போட்டு அசத்தி உள்ளார்கள். ஆனால் நம் விருப்பமான நடிகைகள் அணிந்த பிகினி தான் நமக்கு பிடித்த ஒன்றாக இருக்கும். பிகினியில் பல வகைகள் உள்ளன. இவற்றுள் எது உங்கள் உடலுக்கு ஏற்றது என்பதை தேர்வு செய்து நீங்களும் உங்கள் விடுமுறை நாட்களை நீச்சல் உடையில் கொண்டாடுங்கள்.