Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
இந்தியாவில் கோடைக்காலத்திற்கு இதமாக பெண்கள் அணியக்கூடிய ஆடைகள்!!!
நீங்கள் இந்தியாவின் வெப்பத்தை உணர்ந்தவர் என்றால், கோடைக்காலத்தில் ஏன் இதமான ஆடைகளை அணிய வேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்தியா என்பது வெப்ப பிரதேசமாகும். அதனால் கோடைக்காலத்தில் வெப்பம் உச்சியில் இருக்கும். அதனால் தான் கோடைக்காலத்தில் பெண்கள் அணிய வேண்டிய உடைகள் இதமானதாகவும், அதே சமயம் ஃபேஷனாகவும் இருக்க வேண்டும்.
கோடைக்காலத்திற்கு பருத்தி ஆடைகளே சிறந்தவைகளாக விளங்கும். உங்களை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் ஆற்றலை பெற்றுள்ளதால், இந்திய பருத்தியானது உலகம் முழுவதும் பிரபலமாகும். கோடைக்காலத்தில் உங்களை இதமாக வைத்திருக்க பல வகையான இந்திய காட்டன் உடைகள் கிடைக்கின்றன.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கோடைக்காலத்தில் பெண்கள் அணிய சிறந்த துணி வகையாக விளங்குகிறது காதி. அதனை சேலையாக, சல்வார் கமீஸாக மற்றும் பாவாடையாக அணியலாம். வெப்பமான தட்ப வெப்பநிலைக்கு லூசான ஆடைகளையே அணிய வேண்டும். உடலை ஒட்டிய ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை கோடைக்காலத்திற்கு உகந்த ஆடைகள் கிடையாது.
ஹாரெம் பேன்ட் மற்றும் ஜோத்பூரீஸ் போன்ற லூசான பேன்ட் வகைகளை அணிந்து உங்கள் கால்கள் மூச்சு விட அனுமதியுங்கள். பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன் பளிச்சென வண்ணமயமாக இருக்கும். சரியான ஆடைகளை தேர்வு செய்தால் கோடைக் காலத்திற்கான ஆடைகள் இதமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஃபேஷனாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஆடைகளைப் பற்றி பார்க்கலாமா?

ஹாட் பேன்ட்
கோடைக்காலத்தில் அணிய மிகவும் இதமாக இருப்பது ஹாட் பேன்ட்கள். லேசாகவும் ஸ்ட்ரெச் செய்து கொள்ளும் வசதியுடனும் இருக்கும் இந்த பேன்ட் சட்டைகள், டி-ஷர்ட் அல்லது தியூனிக் சட்டைகளுடன் இந்த ஹாட் பேன்ட்டை அணியலாம்.

பருத்தி சேலைகள்
பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலை என்பதை நீங்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் ஆச்சரியமாக, கோடைக்காலத்தில் பெண்களுக்கு பருத்தி சேலைகளே இதமாக இருக்கும்.

நீளமான பாவாடைகள்
அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பாவாடைகளே வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும். முடிந்தால் பருத்தி பாவாடைகளை அணியுங்கள்.

லூசான பேன்ட்
இப்போதெல்லாம் லூசான பேன்ட்கள் மிகவும் பிரபலம். இவ்வகை கோடைக்கால பேன்ட்களை வாங்கி அதற்கேற்ப சட்டைகளை அணிந்து கொள்ளுங்கள்.

பருத்தி ஆடைகள்
வெப்பமயமான கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் உங்களை இதமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்கும். முழு கை சட்டைகளை அணிந்து கொண்டால், வெயிலினால் கருக்க மாட்டீர்கள்.

சல்வார் கமீஸ்
சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் கூட கோடைக்காலத்திற்கு சிறந்த ஆடைகளாக விளங்கும். லக்னோ சிகான் வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

இந்திய கவுன்கள்
இந்திய ஸ்டைல் கவுன் வகைகள் இப்போதெல்லாம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஃபேஷன் ஷோவில் கரிஷ்மா கபூர் இவ்வகை பருத்தி ஆடையை அணிந்து வந்ததை நாம் பார்த்திருப்போம். இவ்வகை ஆடைகள் கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தது.

குட்டையான ஆடைகள்
கோடைக்காலத்தில் நீண்ட நேரத்திற்கு அணிய வசதியாக இருக்கும் இந்த குட்டை ஆடைகள். ஒற்றை தோள்பட்டை ஆடை வகையான இது மிகவும் தோதாக இருக்கும்.

காதி
கையால் முரட்டு பருத்தியை நூற்ற விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் காதியை அணியலாம்.

ஹாரெம் பேன்ட்
ஹாரெம் பேன்ட் மற்றும் வேஷ்டிகளும் தற்போது நடப்பிலுள்ள ஆடைகளாகும். அவைகள் லூசாக இருப்பதால், வெப்பமான நேரத்தில் அவைகள் சிறந்த ஆடைகளாக இருக்கும். ஆனால் பருத்தி வகை ஹாரெம் பேன்ட்களை அணியுங்கள். சிந்தடிக் வகை ஆடைகள் கசகசவென இருக்கும்.



Click it and Unblock the Notifications