ஷீர் புடவைகளுக்கான சில அசத்தலான ஜாக்கெட் டிசைன்கள்!!!

By Babu

பெண்கள் புடவைகளுக்கு அழகைக் கொடுப்பதே உடுத்தும் ஜாக்கெட் தான். அதிலும் தற்போது பல்வேறு டிசைனில் புடவைகள் வந்துள்ளதால், அந்த மாதிரியான புடவைகளுக்கு சற்று ஃபேஷனாக ஜாக்கெட் அணிந்தால் நச்சென்று இருக்கும். இங்கு அப்படி புடவை வகைகளில் ஒன்றான ஷீர் புடவைகளுக்கு நச்சென்று லுக்கைக் கொடுக்கும் சில ஜாக்கெட் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் பிடித்த டிசைனில் ஜாக்கெட் அணிந்து அசத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்

செக்ஸியான தோற்றத்தில் காணப்பட வேண்டுமானால், ஸ்ரேயா அணிந்திருப்பது போல் ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணியலாம்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்

மாதுரி தீட்சித் அணிந்திருப்பது போல், எம்பிராய்டரி செய்யப்பட்ட ஷீர் புடவைக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தால் சூப்பராக இருக்கும்.

முக்கால் கை கொண்ட ஜாக்கெட்

முக்கால் கை கொண்ட ஜாக்கெட்

நல்ல பாரம்பரிய தோற்றத்திலும், அதே சமயம் ஸ்டைலாகவும் காணப்பட வேண்டுமானால், சோனாக்ஷி சின்ஹா அணிந்திருப்பது போல் முக்கால் கை கொண்ட லேஸ் ஜாக்கெட் அணிந்து கொள்ளலாம்.

முழு கழுத்து கொண்ட ஜாக்கெட்

முழு கழுத்து கொண்ட ஜாக்கெட்

ஷீர் புடவை ஏற்கனவே புடவை ஷீர் என்பதால், ஜாக்கெட்டும் அப்படி அணிந்தால் நன்றாக இருக்காது. ஆகவே கரீனா கபூர் அணிந்திருப்பது போல், கழுத்து முழுவதும் மறைவது போல் உள்ள கழுத்திற்கு மட்டும் ஷீர் கொண்டவாறான ஜாக்கெட் அணியலாம்.

பிகினி ஜாக்கெட்

பிகினி ஜாக்கெட்

இன்னும் கவர்ச்சியாக காணப்பட வேண்டுமானால், தீபிகா படுகோனே அணிந்திருப்பது போல் பிகினி ஜாக்கெட் அணியலாம்.

ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்

ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட்

சிலருக்கு முழுக்கை உடை அணிய மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் அணியலாம். ஏனெனில் தற்போது ஃபுல் ஸ்லீவ் தான் ஃபேஷன்.

சோளி கட் ஜாக்கெட்

சோளி கட் ஜாக்கெட்

மாதுரி தீட்சித் இநத் கருப்பு நிற ஷீர் புடவைக்கு அணிந்திருப்பது, ஒருவகையான சோளி கட் கொண்ட ஜாக்கெட். இந்த மாதிரி சோளி கட் ஜாக்கெட்டை ட்ரான்ஸ்பரண்ட் புடவைக்கு அணிந்தால், அது படு செக்ஸியான லுக்கைக் கொடுக்கும்.

லேஸ் நெக் ஜாக்கெட்

லேஸ் நெக் ஜாக்கெட்

ஷீர் புடவையின் தோற்றத்தையே வித்தியாசப்படுத்தி, அதே சமயம் ஸ்டைலாக வெளிப்படுத்த வேண்டுமானால், சோனம் கபூர் அணிந்திருப்பது போல் லேஸ் நெக் ஜாக்கெட் அணியலாம்.

கயிறு மாடல் ஜாக்கெட்

கயிறு மாடல் ஜாக்கெட்

இன்னும் ஸ்டைலாக ஷீர் புடவையை அணிய நினைத்தால், ஸ்ரேயா அணிந்திருப்பது போல் கயிறு மாடல் ஜாக்கெட்டை அணியலாம்.

ஒற்றை தோள்பட்டை கொண்ட ஜாக்கெட்

ஒற்றை தோள்பட்டை கொண்ட ஜாக்கெட்

சோனம் கபூர் அணிந்துள்ளவாறு ஒற்றை தோள்பட்டை கொண்டவாறு ஜாக்கெட் அணிந்தால், இது இன்னும் வித்தியாசமான லுக்கைக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ஷீர் புடவைகளுக்கான சில அசத்தலான ஜாக்கெட் டிசைன்கள்!!!

Sheer sarees can make a bold style statement. You have to wear the right blouse with a sheer saree. Check out these saree blouse designs for sheer sarees.
Desktop Bottom Promotion