Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் கலக்கிய ஈவ்லின் சர்மா!!!
மும்பையில் நடக்கும் இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில், ராகவேந்திரா ரத்தோரைத் தொடர்ந்து, ஏஸ் டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் அவர்களது கலெக்ஷன்கள் வெளிவந்தன. இவர்களது கலெக்ஷன்களில் லெஹெங்கா முதல் கவுன்கள் வரை அனைத்தும், கண்களை பறிக்கும் வகையில் இருந்தன. அதுமட்டுமின்றி, இவர்கள் வடிவமைத்த ஆடைகள் பெரும்பாலும் லேஸ், ஷீர் அல்லது அதிகப்படியான எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும்.
மேலும் இவர்களது கலெக்ஷன்களில் கோல்டன், பவளம், பீச், பிங்க், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் அதிகம் இருக்கும். அதிலும் இவர்கள் வடிவமைத்த லெஹெங்காக்களிலேயே பல அழகான லெஹெங்காக்கள் உள்ளன. டெல்லியில் நடைபெற்ற இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் நேகா தூபியாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தவர்கள், இந்த வருடம் ஈவ்லின் சர்மாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்துள்ளனர்.
சரி, இப்போது ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் அவர்களின் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

சிவப்பு லெஹெங்கா
இந்த ஸ்ட்ராப்லெஸ் சிவப்பு நிற லெஹெங்கா அதிகப்படியான கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்டது.

க்ரீம் லெஹெங்கா
இது தான் க்ரீம் மற்றும் பீச் கலந்த, கோல்டன் எம்பிராய்டரி போடப்பட்ட லெஹெங்கா. இந்த லெஹெங்கா நெட்டட் துப்பட்டாவைக் கொண்டது.

சிவப்பு மற்றும் கோல்டன் லெஹெங்கா
இந்த சிவப்பு நிற லெஹெங்கா அதிகப்படியான கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பதோடு, காலர் ஜாக்கெட் கொண்டுள்ளது.

சிவப்பு நிற லேஸ் லெஹெங்கா
இது மற்றொரு பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும் சிவப்பு நிற லேஸ் லெஹெங்கா.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
இந்த மாடல் அணிந்திருக்கும் இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனை ஏற்கனவே ஃபல்குனி மற்றும் ஷேன் வெளியிட்டுவிட்டனர். இருப்பினும் மீண்டும் இந்த உடையை இந்த முறையும் வெளியிட்டுள்ளனர்.

பிங்க் மற்றும் சில்வர் கவுன்
இந்த மாடல் அணிந்திருக்கும் இந்த பிங்க் நிற கவுனில், ஆங்காங்கு சில்வர் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கவுன் லேஸ் துப்பட்டாவை, அத்துடன் இணைத்திருக்கும்.

லேஸ் கவுன்
இந்த க்ரீம் நிற கவுன் அதிகப்படியான லேஸ் எம்பிராய்டரி செய்யப்பட்டு, ஆங்காங்கு பூக்கள் ஒட்டப்பட்டு, மிகவும் க்யூட்டாக உள்ளது.

மெட்டாலிக் மெர்மெயிட் கவுன்
இந்த கவுன் முழுவதும் மெட்டாலிக் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதோடு, தோள்பட்டையில் ஷீர் கொண்டு, இடுப்பில் மெட்டாலிக் பெல்ட் இணைக்கப்பட்டிருக்கும்.

கருப்பு நிற அனார்கலி
இது ஏற்ற இறக்கத்துடன் அதிகப்படியான ப்ரில் கொண்ட கருப்பு நிற அனார்கலி. இந்த அனார்கலி அதிகப்படியான எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட்டைக் கொண்டிருக்கும்.

லேஸ் அனார்கலி
க்ரீம் நிற அனார்கலியில் லேஸ் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, ஏற்ற இறக்கத்துடன் கூடிய ப்ரில் கொண்டு, முனைகளில் கோல்டன் பைப்பிங் கொடுக்கப்பட்டிருக்கும்.

பவள நிற அனார்கலி
இந்த பவள நிற அனார்கலி பார்ப்பதற்கு கவுன் போன்று, நெட், ப்ரில் மற்றும் கோல்டன் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

க்ரீம் புடவை
ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக கலெக்ஷன்களில் ஒன்று தான் க்ரீம் நிற புடவை. இந்த புடசையின் ஸ்பெஷல் என்னவென்றால், அது பார்டர் மற்றும் முனைகளில் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மேலும் இந்த நெட்டட் புடவை கண்ணாடி வேலைப்பாடுகளையும் கொண்டு, அழகான லுக்கைக் கொடுக்கும்.

பீச் நிற லேஸ் புடவை
இது மற்றொரு கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லேஸ் புடவை.

ஈவ்லின் சர்மா
ஈவ்லின் சர்மா, ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்த அழகான கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சிவப்பு நிற லெஹெங்காவில் தேவதைப் போன்று, ராம்ப் வாக் நடந்து வந்தார்.



Click it and Unblock the Notifications