Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
57 வயதிலும் 'ஜவான்' ஷாருக்கானின் ஹேர் ஸ்டைல் கெத்தாவும் மாஸாவும் இருக்க 'இதுதான்' காரணமாம்..!
Shah Rukh Khan Hair Style In Tamil: 57 வயதான ஷாருக்கான் இந்திய திரைத்துறையின் Icon- னாக வலம் வருகிறார். பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக், 30 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் புகழ்பெற்று விளங்குகிறார்.
ஷாருக்கான், தனது அசாதாரணமான நடிப்புத் திறமை, ஸ்டைலான தோற்றம் மற்றும் பிரகாசிக்கும் அழகால் மில்லியன் கணக்கான மக்களை ரசிகர் படையாக கொண்டிருக்கிறார்கள். இவரின் அழகிற்கும் மில்லியன் கணக்கான பெண்கள் அடிமையாக இருக்கிறார்கள். அன்றும் இன்றும் ஷாருக்கானின் அழகும் முடியின் தோற்றமும், உடலும் அப்படியே இளமையாகதான் இருக்கிறது.

ஷாருக்கானின் ஹேர்ஸ்டைல் மிகவும் பிரபலமானது. மென்மையான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான தலைமுடிக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்று யோசித்து இருக்கிறீர்களா? அவர் தனது தலைமுடியில் எந்த செயற்கை பொருட்களையும் பயன்படுத்துவதில்லை. இயற்கையான பொருட்களை மட்டுமே தலைமுடி பராமரிப்பில் பயன்படுத்தி வருகிறார்.
பல்வேறு இரசாயன அடிப்படையிலான முடி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சேதத்தைத் தடுக்க, ஷாருக்கான் தனது முடி பராமரிப்பு முறையை இயற்கையாகவே பராமரிக்கிறார். அதனால, இராசயனங்கள் கலந்த ஷாம்பை அவர் பயன்படுத்துவதில்லை, வெறும் தண்ணீரில் தலைமுடியை அலசுகிறார்.
ஷாருக் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஸ்டைல்களில் நடிக்கிறார். தற்போது பான் இந்தியா படமாக வெளிவந்து இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜவான்" படத்தில் 4 மற்றும் 5 பாத்திரங்களில் நடித்திருக்கிறார் ஷாருக்.
தனது கதாபாத்திரத்திற்காக வித்தியாசமான தோற்றங்களில் ரசிகர்களை மிரட்டி வருகிறார். அது எளிமையான தாடி தோற்றம், அல்லது பொன்னிறமாக மின்னும் முடி அல்லது முற்றிலும் மாறுப்பட்ட தோற்றம் என தன் சருமம் மற்றும் தலைமுடியை கதராபாத்திரத்திற்கு ஏற்ப தத்ரூபமாக மாற்றுகிறார். ஷாருக்கானின் இயற்கையான முடியும் அவரது சரியான ஸ்டைலும் அவரது அன்றாட வழக்கத்தில் சேர்க்கப்படும் மூலிகை ஷாம்புகள் மற்றும் இயற்கை எண்ணெய் கண்டிஷனர்களின் விளைவால் தோற்றமளிக்கிறது.
இரசாயன அடிப்படையிலான ஷாம்பூக்களை கைவிடுவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் இயற்கையான, வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துங்கள். இயற்கையான ஹேர் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சீயக்காய் இயற்கை ஷாம்பு
சீயக்காயை ஹெர்பல் ஹேர் ஷாம்புவாகப் பயன்படுத்தலாம். இதை ஷாம்பூவாகப் பயன்படுத்த எளிதான வழி, சியக்காய் பொடியை உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் கலக்க வேண்டும். நீங்கள் ரீத்தா அல்லது சோப்நட்ஸ் தூள் போன்ற இன்னும் சில மூலிகை பொருட்களையும் அதில் சேர்க்கலாம்.
ரீத்தா பொடியை எடுத்து அதனுடன் சியக்காய் பொடி மற்றும் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். தண்ணீர் குளிர்ந்தவுடன் உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலச வேண்டும். உங்கள் தலைமுடியின் வகைக்கு ஏற்ப பல்வேறு சியக்காய் ஹேர் பேக்குகள் மற்றும் ஷாம்புகளை நீங்கள் செய்யலாம்.
இயற்கை எண்ணெய் கண்டிஷனர்
இயற்கையான கண்டிஷனருக்கு, ஒரு நாளுக்கு முன்பு உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயாக இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான எண்ணெயைப் பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் நன்றாகப் பயன்படுத்துங்கள்.
எண்ணெயின் ஈரப்பதமூட்டும் விளைவுக்கு, உங்கள் தலைமுடியை சூடான துண்டில் சில நிமிடங்கள் போர்த்தி மூடி விடுங்கள் அல்லது உங்கள் தலைமுடியை ஷவர் கேப் மூலம் மூடி வைக்கவும். பிறகு, மறுநாள் காலை உங்கள் வழக்கமான ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும். அந்த தலைமுடியின் மேனி பட்டுப்போல மின்னும். நீங்களும் ஷாருக்கான் போன்ற ரம்மியமான தலைமுடியை பெறலாம்.



Click it and Unblock the Notifications
