Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
காதலர் தினத்தன்று பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை இன்னிக்கு நைட் போடுங்க...
Valentines Day 2025: காதலர் தினம் வரப்போகிறது. காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவருடன் வெளியே செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். அப்போது உங்கள் முகம் பளிச்சென்று இல்லாவிட்டால் நன்றாக இருக்குமா என்ன? இல்லை தானே. அதே சமயம் உங்களுக்கு பார்லர் சென்று உங்கள் முகத்தை பிரகாசமாக்கும் சரும பராமரிப்புக்களை மேற்கொள்ளும் அளவில் நேரமில்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம்.
வீட்டில் உள்ள ஒருசில எளிமையான பொருட்களைக் கொண்டு, காதலர் தினத்துக்கு முந்தைய தினம் இரவு போட்டாலே போதும், முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னும். அதுவும் உங்கள் முகம் பொலிவிழந்து கருமையாக காணப்பட்டால், வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். கீழே முகத்திற்கு உடனடி பொலிவையும், நிறத்தையும் தரும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

1. வாழைப்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை ஒரு பௌலில் எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை எந்த ஒரு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கு முன்பு பயன்படுத்தினால், முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும்.
2. தக்காளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் அல்லது தக்காளி ஜூஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு முதலில் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த வெள்ளரிக்காய் பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும்.
* 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த சிம்பிளான ஃபேஸ் பேக்கை போடுவதால், சரும செல்கள் புத்துணர்ச்சி அடைந்து, சருமம் ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் இருக்கும்.
4. காபித் தூள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* மசாஜ் செய்த பின் 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் இருக்கும்.
5. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சிறிது பப்பாளியை எடுத்து மசித்தக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1/2 டீஸ்பூன் சந்தனப் பவுடர், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் 1/2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் அனைத்தும் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், சருமத்தில் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. முக்கியமாக காதலர் தினத்திற்கு முந்தைய தினம் அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கு முன் இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தினால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications