Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
காதலர் தினத்தன்று அழகா ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடுங்க..
Valentines Day 2025: காதலர் தினம் வரப்போகிறது. இந்த காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் துணையுடன் அவுட்டிங் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்போது நீங்கள் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா? ஆனால் உங்களால் அழகு நிலையங்களுக்கு சென்று அழகை மெருகேற்றும் அளவில் நேரம் இல்லையா? அப்படியானால் உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்களைக் கொண்டு, இப்போதிருந்தே ஃபேஸ் பேக் போட்டு வாருங்கள்.
அதுவும் சருமத்தில் நல்ல மாயத்தை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்ட ஒரு அற்புதமான பொருள் தான் காய்ச்சாத பச்சை பால். இந்த பாலில் உள்ள வைட்டமின்கள், புரோட்டீன்கள், லாக்டிக் அமிலம் போன்றவை சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை திறம்பட வெளியேற்றி, சருமத்தின் பொலிவை மேம்படுத்துவதோடு, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். இப்படிப்பட்ட பாலைக் கொண்டு பல ஃபேஸ் பேக்குகளைப் போடலாம். இப்போது பாலைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்குகளைப் போடலாம் என்பதைக் காண்போம்.

1. மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்த கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
2. தேன் மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊறு வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வறண்ட சருமத்தினருக்கு ஏற்றது. இதை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், சரும வறட்சி கட்டுப்படுவதோடு, சருமம் பளிச்சென்று மின்னும்.
3. ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.
4. கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்திய பின் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
5. பப்பாளி மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் மசித்த பப்பாளி கூழை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications