Latest Updates
-
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்!
Summer Skincare: சம்மரில் எந்த சரும பிரச்சனையும் வராம முகம் பிரகாசமா ஜொலிக்க இந்த ஃபேஸ் பேக்கை யூஸ் பண்ணுங்க!
கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனி நாம் ஒவ்வொருவரும் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், கோடை வெயில் உங்கள் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

கோடைகாலத்தில் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சரியான இயற்கை பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
கோடையில் சருமத்தில் எண்ணெய் உற்பத்தி மிகவும் அதிகமாக இருப்பதால், சருமம் எரிச்சலாகவும் ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். வெப்பத்தைத் தாங்க முடியாத சருமம் உள்ளவர்களுக்கும், பிசுபிசுப்பான சருமம் உள்ளவர்களுக்கும் சரியான ஃபேஸ் மாஸ்க்காக மஞ்சள் மற்றும் தயிர் கலந்த பேக் உள்ளது.
கோடை காலத்திற்கான மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
மஞ்சள் மற்றும் தயிர் இரண்டும் உங்கள் சருமத்திற்கு நல்லது. அவை இரண்டும் இணையும்போது, அவை உங்கள் சருமத்திற்கு அதிசயங்களை செய்யும். மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், முகப்பருக்களைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் முக்பருக்களை கட்டுப்படுத்தி, வெயிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.
ஃபேஸ் பேக்கின் நன்மைகள்
ஆரோக்கிய சக்தியாக இருக்கும் மஞ்சளில், குர்குமின் எனப்படும் ஒரு சேர்மமும் உள்ளது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை பிரகாசமாகவும், முகப்பருவைக் குணப்படுத்தவும், கருவளையங்களைக் குறைக்கவும், மந்தமான சருமத்தை ஜொலிக்க வைக்கவும் உதவும். மேலும், முன்கூட்டிய வயதாவதைத் தடுக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.
தோல் பராமரிப்புக்கு தயிரின் நன்மைகள்
பண்டைய காலம் முதல் தயிர் சரும பராமரிப்பில் ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உடலையும் சருமத்தையும் ஈரப்பதமாக்குகிறது. மேலும், முகப்பருவைத் தடுக்கவும், சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்கவும், கருவளையங்களை போக்கவும், சரும துளைகள் இறுக்குவதற்கும் மற்றும் முன்கூட்டிய வயதைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
உங்களுக்கு மஞ்சள் ஒவ்வாமை இல்லை என்றால், நீங்கள் அதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். தயிரை ஃபேஸ் பேக் வடிவில் தினமும் முகத்தில் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் தோல் வகைக்கு ஏற்ப அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள் தயிருடன் தேனுடன் சேர்த்தும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பருப்பு மாவு அல்லது முல்தானி மிட்டியுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- தயிர்
- மஞ்சள்
செய்முறை: மஞ்சளை நன்றாக பொடியாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் குளிர்ந்த தயிர், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, 15-20 நிமிடங்கள் அல்லது அது காய்ந்து போகும் வரை முகத்தில் அப்படியே வைத்திருக்கவும். பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி உலர வைக்கவும். நல்ல பலன்களை பெற வாரத்திற்கு 1-2 முறை இந்த பேக்கை பயன்படுத்தலாம்.
இறுதிக்குறிப்பு
மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும். ஆனால் எல்லா தோல்களும் வித்தியாசமானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, உங்கள் சரும வகைக்கு மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் சரியாக இருக்கிறதா? என்பதை அறிய எப்போதும் முதலில் பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம். இது உங்கள் முகப்பருவைக் கட்டுப்படுத்தாவிட்டாலும், கோடை வெப்பத்திலிருந்து ஓரளவு நிவாரணம் அளிக்கும்.



Click it and Unblock the Notifications


