Latest Updates
-
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
நீங்க தொடர்ந்து இதை செய்து வந்தால் 50 வயதுக்கு பிறகும் இளமையை தக்க வைக்கலாம்.. எப்படி தெரியுமா?
நாம் அனைவருமே இளமையாகவே இருக்க ஆசைப்படுவோம்..அகுறைந்த பட்சம் சருமத்தையாவது நன்றாக பராமரிக்க முயல்வோம்.. ஒருவரை பார்த்தால் அவர் எந்த வயது? என்று பார்த்தாலே யாருக்கும் தெரியக்கூடாது என நாம் அனைவருமே வெளியிலே போகும்போது ட்ரெஸ் பண்ணுவோம் அல்லவா?
அப்படி உங்களை பார்த்து யாரவது, பார்த்த மாதிரியே இருக்கிங்களே என சொன்னால், உங்கள் இதயத்தில் மகிழ்ச்சியை உணர்கிறீர்கள், இல்லையா? இதன் மூலம், உங்கள் தோலில் எப்போதும் வயது தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க வேண்டுமானால், இனிமேல் இவற்றை ஃபாலோ பண்ணுங்கள்...

சன்ஸ்கிரீன்
ஆரோக்கியமான சருமத்தை எப்போதும் பராமரிக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம். சன்ஸ்கிரீன் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமின்றி, சுருக்கங்கள் வராமல் தடுக்கவும், சரும பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, வெளியே செல்லும் போது மறக்காமல் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். SPF 30க்கு மேல் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள். இதேபோல், சன்ஸ்கிரீன் நீர் சார்ந்த மற்றும் கனிம அடிப்படையிலான இரண்டு வடிவங்களில் வருகிறது. உங்கள் சரும நிறத்துடன் பொருந்தக்கூடிய சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, குறிப்பாக வைட்டமின் சி நிறைந்தவை, இளமையான சருமத்தை பராமரிக்க உதவும். சுருக்கங்களைத் தடுப்பதிலும், சருமத்தின் பொலிவைத் தக்கவைப்பதிலும் இது மிகவும் நன்மை பயக்கும். எனவே, ஆரஞ்சு, அவகேடோ மற்றும் ப்ரோக்கோலி அனைத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தண்ணீர்
சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், இளமையாக இருக்கவும் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். சாதாரண நீரைக் குடிப்பது நல்லது. சர்க்கரை பானங்களை தவிர்ப்பது சரும ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும்.
முக மசாஜ்
தினமும் ஏதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது சரும செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குகிறது. இது நல்ல தோல் நிறத்தைப் பெறவும், சுருக்கங்களை நீக்கவும், சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
புரதம் புரோட்டீன் நிறைந்த உணவு
புரதம் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது தோல் தசைகளை வலுப்படுத்த உதவும். இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்க உதவும். அதேபோல இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.
ஈரப்பதமாக்குங்கள்
சருமத்தை நன்கு ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். இல்லை என்றால் சருமம் வறண்டு, சரும பிரச்சனைகள் ஏற்படும். இதனால் சருமம் முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தும்.
தூக்கம்
நல்ல ஆரோக்கியத்திற்கும் நல்ல சருமத்திற்கும் தூக்கம் அவசியம். போதுமான தூக்கம் இல்லையென்றால், சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றும். எனவே, தூக்கம் முக்கியமானது.
கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள்
1. அதிக காரமான, புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு உணவுகளை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இடையில் ஒரு நல்ல ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
2. செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் உணவுகளை முடிந்தவரை தவிர்க்கலாம்.
3. இவை சருமத்தை வறட்சியடையச் செய்யும். ரசாயனங்கள் கொண்ட தோல் பராமரிப்பு பொருட்களை தவிர்க்கவும். முடிந்தவரை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications