Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
Trisha Birthday: 42 வயதை எட்டிய நடிகை திரிஷாவின் அழகு ரகசியம் என்ன தெரியுமா? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..
Actress Trisha's Beauty Secret: "அழகே பொறாமை கொள்ளும் பேரழகு" என முன்னணி நடிகை திரிஷாவின் அழகை பற்றியும் வசீகரமான தோற்றத்தை பற்றியும் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். இந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள திரிஷா, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மூலம் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளார்.
42 வயதை எட்டிய நடிகை திரிஷா பேரழகுடன் இன்றும் 20 வயது பெண்ணை போல இளமையாக தோற்றமளிக்கிறார், ஜொலிக்கிறார். எல்லாருக்கும் வயது அதிகரிக்கும்போது, இளமையும் அழகும் குறைய ஆரம்பிக்கும். ஆனால், திரிஷா விஷயத்தில் அது பொய்யாகிபோனது. வயதாக வயதாக இன்னும் இளமையாக ஜொலிக்கிறார் திரிஷா.

அழகை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. உடல் எடை, உடலைமப்பு மற்றும் இளைமையான அழகாக தோற்றத்தை பெற கடினமாக உழைக்க வேண்டும். பெரும்பாலும், நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி அதிக கவனமாக இருப்பார்கள். அந்த வகையில், திரிஷா தன் உடல் மற்றும் அழகு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்.
நடிகை த்ரிஷா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 1999இல் ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா, தன் திறமையான நடிப்பாலும், அழகாலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார். கில்லி, திருப்பாச்சி, விண்ணைதாண்டி வருவாயா, 96 முதல் அவரது சமீபத்திய படமான பொன்னியின் செல்வன் வரை, அவர் சமமான உடற்தகுதியுடன் இருக்கிறார்.
இதற்கு திரிஷா என்ன செய்கிறாள் என்று நம்மில் பலர் ஆச்சரியப்படுகிறார்கள். இதற்கான ரகசியத்தை தெரிந்துகொள்ள எல்லா பெண்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இன்று நடிகை திரிஷாவின் பிறந்தநாள் என்பதால், இப்போது திரிஷாவின் பொலிவான தோற்றத்திற்கான அழகு ரகசியங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
திரிஷா இயற்கையான அழகையே என்றும் விரும்புவார். அதனால், இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை கொண்டே தனது சருமத்தை கவனித்துக்கொள்கிறாள். மேக்-அப் இல்லாமல் இயற்கையான அழகுடன் இருக்கவே திரிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும்.
திரிஷா, வைட்டமின் சி நிறைந்த உணவுகளையே அதிகம் உட்கொள்கிறார். சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், வைட்டமின் சி நிறைந்த உணவுகள் சரும பிரச்சனைகளை சரிசெய்து, எப்போதும் அழகாகவும் பொலிவாகவும் இருக்க உதவும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளை அவர் அருந்துகிறார்.
பாதிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த சருமத்தை சரிசெய்வது முக்கியம் என்பதால், தினமும் புதிய மாதுளை சாறு குடிப்பதை திரிஷா விரும்புவார். அவர் தன்னை நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் தண்ணீர் அதிகம் குடிக்கிறார். உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மேலும், சருமம் பிரகாசமாக ஜொலிக்கும்.
திரிஷாவின் சருமம் மட்டுமில்லாமல் அவரது கூந்தலும் பளபளப்பாக மின்னுகிறது. தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் பூசுவது தான் அவரது பளபளப்பான கூந்தலுக்கான ரகசியம். மேலும், தனது தலைமுடியை அழகுபடுத்த ஒரு சிறப்பு ஆயுர்வேத சீரமை அவர் பயன்படுத்துகிறார்.
நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் தங்கள் உணவில் திரிஷா சேர்த்துக்கொள்கிறார். ஆரோக்கியமான சமச்சீரான உணவு அவரது சருமத்தை குறைபாடற்றதாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்கும் திரிஷா, காலையில் பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார்.
தினசரி யோகா, உடற்பயிற்சி மற்றும் தியானங்களை செய்வதால், அவருடைய முகத்தில் இயற்கையான பிரகாசம் இருக்கிறது. இதன் மூலம் உடலமைப்பையும் சரியாக கவனித்து, அனைவரையும் கவரும் தோற்றத்தையும் அழகையும் கொண்டிருக்கிறார்.
42 வயதை எட்டிய திரிஷா, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துளார். உலகம் முழுவதும் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன்-1 மற்றும் பொன்னியின் செல்வன் பாகம்-2-விலும் தன் தனித்துவ வசீகர தோற்றத்தால், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இதில் 20 வருடங்களுக்கு முன்பு பார்த்த திரிஷா, இன்றும் பளபளப்பான சருமத்துடன் அதே அழகுடனும் ஜொலிப்பது அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











