Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
குதிகால் வெடிப்பு அதிகமா இருக்குதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க..
Cracked Heels Remedies In Tamil: பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு ஒருவரது அழகை கெடுப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் மிகுந்த வலியையும், வேதனையையும் தரும். குதிகால் வெடிப்பு வரத் தொடங்கினால், ஆரம்பத்திலேயே அதை கவனித்து பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், பின் அந்த வெடிப்பு தீவிரமாகி, பிளவுகள் அதிகரித்து தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். குதிகால் வெடிப்பு ஒருவருக்கு வர பல காரணங்கள் உள்ளன. அதில் உடல் பருமன், நீண்ட நேரம் நிற்பது, வறண்ட சருமம், பொருத்தமற்ற காலணிகள் மற்றும் முறையான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு எத்தனையோ க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆயினும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் அதற்கு நல்ல தீர்வை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன. இப்போது குதிகால் வெடிப்பை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. வாழைப்பழம்
* முதலில் நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பாதங்களில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு குறைந்தது 2 முறை, இரவு தூங்கும் முன் பயன்படுத்தி வந்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
2. தேன்
* முதலில் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் 1 கப் தேனை சேர்த்து கலக்க வேண்டும்.
* பின் பாதங்களை நன்கு கழுவிவிட்டு, அதில் பாதங்களை வைத்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து பாதங்களை வெளியே எடுத்து சுத்தமான நீரில் கழுவி உலர்த்த வேண்டும்.
* பிறகு மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன், சில வாரங்கள் செய்ய வேண்டும்.
3. வெஜிடேபிள் ஆயில்
* இதற்கு முதலில் பாதங்களை நன்கு சுத்தமாக கழுவி, உலர்த்திக் கொள்ள வேண்டும்.
* பின்பு பாதங்களில் வெஜிடேபிள் ஆயிலை நன்கு தடவ வேண்டும்.
* பிறகு சுத்தமாக சாக்ஸை கால்களில் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மறைவதைக் காணலாம்.
4. வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு
* இதற்கு முதலில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை வெளியே எடுத்து உலர்த்த வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் 1 ஸ்பூன் வாஸ்லினை எடுத்து, அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை பாதங்களில் தடவி, சுத்தமான சாக்ஸை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் பாதங்களை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மாயமாய் மறைவதைக் காணலாம்.
5. அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்
* இதற்கு முதலில் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை உலர்த்த வேண்டும்.
* அதன் பின் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை பாதங்களில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வர குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications