Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உங்ககிட்ட இந்த 5 பழக்கங்கள் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க.. எச்சரிக்கும் சரும நிபுணர்..
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருமே நல்ல அழகான, பட்டுப் போன்ற சருமத்தையே பெற விரும்புவோம். அதற்காக சருமத்திற்கு பலவிதமான பராமரிப்புக்களையும் கொடுத்து வருவோம். சிலர் சருமத்தில் சிறு பிரச்சனை வந்தாலும், அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்று கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று நிறைய பணத்தை செலவழித்து பராமரிப்பு கொடுப்பார்கள்.
அப்படி அவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுத்து பாதுகாத்து வரும் சருமத்தை, நமது ஒருசில பழக்கவழக்கங்களால் நம்மை அறியாமல் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியுமா? இதுக்குறித்து தோல் மருத்துவரான மோகனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சருமத்தை மோசமாக சேதப்படுத்தும் 5 பழக்கவழக்கங்கள் குறித்து கூறியுள்ளார். அவை என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "ஒருவரது சருமத்தை சேதப்படுத்தும் 5 விஷயங்கள் உள்ளன. அதில் முதலாவது, சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை நிறுத்துவது தான். என்ன தான் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் வீட்டு ஜன்னல்கள் வழியாக சருமத்தை பாதிக்கும். எனவே எப்போதும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதை தவிர்க்காதீர்கள்" என்று கூறினார்.
அடுத்ததாக, "தலையணை கவரை சீரான இடைவெளியில் மாற்றாமல் இருப்பது. சருமத்திற்கு முதல் எதிரியே நீங்கள் பயன்படுத்தும் தலையணை உறை தான். எனவே அந்த தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள்.
மூன்றாவது அடிக்கடி முகத்தை கைகளால் தொடுவது. ஏனெனில் கைகளை கண்ட இடங்களில் வைத்து விட்டு, பின் நேரடியாக முகத்தைத் தொடும் போது, பாக்டீரியாக்கள் மற்றும் பிற கிருமிகள் கைகளில் இருந்து சருமத்திற்கும் சென்று, சரும பிரச்சனைகளை அதிக சந்திக்க நேரிடும்.
நான்காவது, அளவுக்கு அதிகமாக முகத்தைக் கழுவுவது. அதுவும் கெமிக்கல்கள் நிறைந்த சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ்களைக் கொண்டு முகத்தை அடிக்கடி கழுவும் போது, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அதன் விளைவாக சருமம் வறண்டு போகும், சருமத்தில் அரிப்பு, எரிச்சல், முகப்பரு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
கடைசியாக, ஆனால் முக்கியமான ஐந்தாவது விஷயம் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது. உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால், சருமம் பொலிவிழந்தும், வறண்டும், முதுமைக் கோடுகளுடனும் காணப்படும். சருமம் நன்கு பொலிவாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்க உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதற்கு தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்." என்றும் டாக்டர் மோகனலட்சுமி கூறினார்.
என்ன நண்பர்களே! இதுவரை சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுத்தும் சரும பிரச்சனைகள் எந்த காரணத்தினால் வருகிறது என்பது இப்பொழுது புரிகிறதா? எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்கள் இதுவரை உங்களிடம் இருந்தால், அழகாக இருக்க விரும்பினால் உடனே இந்த பழக்கங்களை தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
