Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
கோடை வெயிலால் முடி சேதமடையாம இருக்கணுமா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்குகளை அடிக்கடி போடுங்க..
Summer Hair Care Tips In Tamil: கோடைக்காலம் வந்தாலே அனைவரும் தங்கள் சருமத்திற்கு தான் அதிக பராமரிப்புக்களைக் கொடுப்பார்கள். ஆனால் எப்படி வெயிலால் சருமம் சேதமடைகிறதோ, அதேப் போல் தலைமுடியும் தான் சூரியக்கதிர்களின் கடுமையான தாக்கத்தால் சேதமடையும்.
இதைத் தவிர்த்து, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் விரும்பினால், அதற்கு தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். அதுவும் கோடையில் அதிகமாக வியர்ப்பதால், தலையில் அழுக்குகள் அதிகம் தேங்கி, அதன் விளைவாக பொடுகுத் தொல்லையாலும், தலைமுடி உதிர்வாலும் அவதிப்பட நேரிடும்.

இன்னும் சிலருக்கு தலைமுடி வறண்டு போய், தலைமுடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படக்கூடும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், தலைமுடிக்கு ஹேர் மாஸ்க்குகளைப் போட வேண்டும். இப்போது கோடையில் முடியின் ஆரோக்கியத்திற்கு போட வேண்டிய சில கோடைக்கால ஹேர் மாஸ்க்குகளைக் காண்போம்.
1. ஈரப்பதமூட்டும் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து, அதை ஒரு துணியில் போட்டு வடிகட்டி சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை தலையில் தடவி 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
2. ஆரோக்கியமான மற்றும் பட்டுப்போன்ற தலைமுடிக்கான ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 1 முட்டையை எடுத்து பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1/2 கப் தயிரை ஊற்றி, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை தலைமுடியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* அந்த ஹேர் மாஸ்க் தலைமுடிக்கு ஒரு பளபளப்பைத் தரும்.
3. பொடுகைப் போக்கும் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 3-4 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து நீரில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அந்த ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, அத்துடன் 1 கப் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும்.
4. முடி வளர்ச்சியைத் துண்டும் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 3-4 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 1 கப் தயிரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன்பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் பொடுகைப் போக்குவதோடு, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications