Latest Updates
-
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் இட்லி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூன் 2026: ஜூன் மாத முதல் நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா?
பனைமரம் போல உங்க முடி கிடுகிடுன்னு நீளமா வளர... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா போதுமாம்..!
இன்றைய நாளில் முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனையாக உள்ளது. வலுவிழந்த முடி, நரை முடி, பிளவு முடி, வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற பலவேறு முடி பிரச்சனைகளை நாம் தினமும் சந்திக்கிறோம். இந்நிலையில், முடி வளர்ச்சியை பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை.
இருப்பினும், நீளமான அடர்த்தியான பளபளப்பான கூந்தலை பெற வேண்டும் என்று நம் அனைவருக்குள்ளும் ஆசை இருக்கிறது. முடி வளர்ச்சியை எவ்வாறு அதிகரிப்பது என்று நீங்கள் யோசித்தால், இதற்கு சில டிப்ஸ்களும் இயற்கை வைத்தியமும் உள்ளன.

சந்தையில் விற்கப்படும் பல இராசயனங்கள் கலந்த முடி பராமரிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் தலைமுடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர, உங்கள் தினசரி முடி பராமரிப்பு முறையை மேம்படுத்தி, சில இயற்கை சிகிச்சைகளை முயற்சி செய்யுங்கள். அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி?
உங்கள் உடலைப் போலவே, உங்கள் தலைமுடியையும் வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. உங்கள் தலைமுடி வேகமாக வளர தேவையான ஊட்டச்சத்தை வீட்டு வைத்தியம் வழங்கினாலும், முறையான முடி பராமரிப்பு வழக்கமானது முடி உதிர்தல் பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும்.
முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் குறிப்புகள்
உச்சந்தலையில் மசாஜ்
வழக்கமாக உச்சந்தலையில் மசாஜ் செய்வது, உங்களுக்கு தளர்வாக உணரவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடியின் வேரில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சி அதிகரிக்க உதவும்.
சரியான ஷாம்பூவை பயன்படுத்துங்கள்
உங்கள் முடி வகைக்கு ஏற்ற ஷாம்பூவைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஒருவருக்கு உச்சந்தலையில் எண்ணெய் அதிகம் இருந்தால், அவர்கள் தெளிவுபடுத்தும் ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்கு உச்சந்தலையில் வறட்சி இருந்தால், அவர்கள் ஈரப்பதமூட்டும் ஷாம்பூவைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும் ஒருவருக்கு நன்றான முடி இருந்தால், அவர்களுக்கு மென்மையான மற்றும் வலுப்படுத்தும் ஷாம்பு தேவைப்படும்.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
எப்பொழுதும் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ஆரோக்கியமான மற்றும் நன்கு சமநிலையான உணவு முடியின் வேர்களை வலுப்படுத்தி நன்றாக வளர ஊக்குவிக்கும். பின்னர் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கும்.
ஸ்டைலிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும்
ஸ்டைலிங் செய்யும்போது, உங்கள் தலைமுடிக்கு அதிக வெப்பம் கொடுக்கபடுகிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கூந்தலுக்கு அதிக வெப்பம் கொடுப்பது, முடியை உடையக்கூடியதாகவும், வறண்டதாகவும் மாற்றும். இது நீரிழப்புக்கும் வழிவகுக்கலாம். இதனால் முடி உடைப்பு மற்றும் முடி உதிர்தல் அதிகரிக்கும். வெப்பம் கெரட்டின் எனப்படும் புரதத்தை முடியில் இருந்து நீக்குகிறது. இது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உச்சந்தலையை சுத்தமாக வைத்திருங்கள்
சுத்தமான, ஆரோக்கியமான உச்சந்தலையானது நல்ல முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் மற்றும் அதிக வியர்வை இருந்தால், அதை தினமும் மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும். உங்கள் உச்சந்தலையில் உலர்ந்த சருமம் இருந்தால், வாரத்திற்கு இரண்டு முறை கழுவ வேண்டும். இது உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களைப் பாதுகாக்கவும், எரிச்சலைத் தடுக்கவும் உதவும்.
முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் வீட்டு வைத்தியம்
வெங்காயச் சாறு
வெங்காயச் சாறு உங்கள் தலைமுடிக்கு ஒரு மந்திரப் பொருளாக செயல்படுகிறது. வெங்காயச் சாற்றில் உள்ள சல்பேட் முடி வளர்ச்சியை அதிகரித்து முடி உதிர்தல் பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது. வெங்காயச் சாற்றை தொடர்ந்து, உங்கள் தலைமுடியில் பயன்படுத்தி வந்தால், நீளமான கூந்தலை பெறலாம்.
கற்றாழை (அலோ வேரா)
கற்றாழை மிகவும் சத்தான ஜெல் ஆகும். இது பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள கொழுப்பு அமிலக் கூறுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அவை உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைத் தீர்த்து, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட உதவுகின்றன. மேலும், இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரை கொண்டு உங்கள் உச்சந்தலையை சுத்தம் செய்ய வேண்டும். pH சமநிலையை பராமரிக்க உங்கள் உச்சந்தலையில் ஸ்க்ரப் தேவை. இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமின்றி முடிக்கு நல்ல பளபளப்பை கொடுக்கும்.
காபி
முடி வளர்ச்சியை அதிகரிக்க காபி லீவ்-இன் கண்டிஷனராக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பைட்டோஸ்டெரால்கள், உச்சந்தலையில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இது முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாது, முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்க உதவும். மேலும், காபியில் உள்ள காஃபின், முடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
வெந்தயம்
வெந்தயம், மெத்தி விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் சமையல் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாக வெந்தயம் உள்ளது. இந்த விதைகளில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் முக்கியமான கூறுகள் அதிகம் உள்ளன. இது முடி வளர்ச்சியை ஊட்டவும் ஊக்குவிக்கவும் உதவும்.
அனைத்து இயற்கை பொருட்களும் பாதுகாப்பானதாக இருந்தாலும், அவை அனைத்து உச்சந்தலை வகைகளுக்கும் பொருந்தாது. சில சமயங்களில், இது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, எப்போதும் ஒரு பேட்ச் சோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications


