Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
ஐ மேக்கப் அழகா போடணுமா? அப்போ இந்த 10 மேக்கப் ப்ரஷ்கள் உங்க கையில் இருக்கணும்...
Eye Makeup Brushes: உங்கள் கண்களை நீங்கள் அழகாக காட்டுவதில் ஐ மேக்கப் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த ஐ மேக்கப்பை நீங்கள் திறம்பட செய்ய உங்கள் கைகளில் ஐ மேக்கப் ப்ரஷ்கள் இருப்பது நல்லது. இந்த ஐ மேக்கப் ப்ரஷ்கள் வெவ்வேறு வடிவங்களில் வருகிறது.
உங்கள் கண்களின் தோற்றத்திற்கு ஏற்ப இந்த ஐ மேக்கப் ப்ரஷ்களை தேர்ந்தெடுத்து நீங்கள் பயன்படுத்தி வரலாம். ஐ மேக்கப் ப்ரஷ்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று செயற்கை ப்ரஷ், மற்றொன்று இயற்கை ப்ரஷ் ஆகும்.

இதில் இயற்கையான ப்ரஷ் அணில், ஆடு மற்றும் சேவல் இவற்றின் தூரிகைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதுவே செயற்கை ப்ரஷ் என்றால் டக்லான் மற்றும் நைலான் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. உங்கள் ஐ மேக்கப்பை திறம்பட செய்ய இந்த ஐ மேக்கப் ப்ரஷ்கள் உதவுகிறது. சரி வாங்க உங்கள் ஐ மேக்கப்பை முழுமையாக மற்றும் அழகாக போட அவசியம் வைத்திருக்க வேண்டிய 10 ஐ மேக்கப் பிரஷ்கள் குறித்து காண்போம்.
ஐ ப்ரோ ப்ரஷ்
உங்கள் கண்கள் மற்றும் புருவங்களின் தோற்றத்தை மேம்படுத்துவதில் ஐ ப்ரோ ப்ரஷ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் புருவத்தில் உள்ள முடியை ஒன்று போல இழுக்க தட்டையான மற்றும் கோண வடிவ தூரிகை ப்ரஷ்களை பயன்படுத்துங்கள். அதே மாதிரி உங்கள் புருவங்களை நிரப்ப சாய்ந்த தூரிகை ப்ரஷ்களை பயன்படுத்தி வாருங்கள். பிறகு சீப்பு கொண்டு சீவி அதை ஒழுங்குபடுத்துங்கள்.
பென்சில் ப்ரஷ்
இந்த பென்சில் ப்ரஷ்யை கொண்டு ஐ லைனரை நன்றாக பரப்பி விடலாம். அப்புறம் உங்கள் ஐ ஷேடோவை பரப்புகிறது. நீங்கள் பயன்படுத்தும் ப்ரஷ் விறைப்பாகவும், தடினமானதாகவும் மற்றும் மெல்லியதாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு ஸ்மோக்கி ஐ மேக்கப் தேவை என்றால் அதற்கு பென்சில் ப்ரஷ் சிறந்த ஒன்றாக இருக்கும்.
ஸ்மட்ஜ் ப்ரஷ்
உங்கள் கண்களுக்கு மென்மையான தோற்றத்தை அளிக்க ஸ்மட்ஜ் ப்ரஷ் உங்களுக்கு உதவி செய்யும். இந்த ஸ்மட்ஜ் ப்ரஷ் குட்டையான முடிகளுடன் தனித்துவமான மற்றும் தட்டையான வடிவங்களில் வருகிறது. இது கண்ணிமைக்கு ஆழமான லுக்கையும், வண்ணத்தையும் சேர்க்கிறது.
ஐ ஷேடோ ப்ரஷ்
ஐ ஷேடோ ப்ரஷ் உங்கள் கண் இமைகளுக்கு சரியான தோற்றத்தை அளிக்கிறது. இந்த ஐ ஷேடோ ப்ரஷ் தட்டையாகவும், வட்டமாகவும், நுனியில் அடர்த்தியாகவும் இருக்கும். பல்வேறு வகையான ஐ ஷேடோ ப்ரஷ்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
பவுண்டேஷன் ப்ரஷ்
நீங்கள் திரவ மேக்கப்பை செய்யும் போது விரல்களுக்கு பதிலாக பவுண்டேஷன் ப்ரஷ்களை பயன்படுத்துவது நல்லது. பவுண்டேஷன் பவுடர் அல்லது திரவத்தை பயன்படுத்தும் போது பவுண்டேஷன் ப்ரஷ்கள் உங்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். பவுண்டேஷன் ப்ரஷ்கள் அடர்த்தியானவை மற்றும் தட்டையான தூரிகைகள் வடிவில் வருகிறது.
மஸ்காரா ப்ரஷ்
உங்கள் கண்களுக்கு சரியாக மஸ்காராவை அப்ளை செய்வதில் மஸ்காரா ப்ரஷ் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மஸ்காரா ப்ரஷ்யை தனியாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் கழுவ வேண்டும். உங்கள் புருவங்கள் மற்றும் இமைகளை மென்மையாகவும் சீராகவும் மாற்ற மஸ்காரா ப்ரஷ் உதவுகிறது.
ஆங்கிள் ஐ ஷேடோ ஷேடர் பிரஷ்
பொதுவாக ஐ மேக்கப் என்றாலே மேல் இளமையை மட்டுமே அழகுபடுத்த நினைப்போம். ஆனால் இந்த ஆங்கிள் ஐ ஷேடோ ஷேடர் பிரஷ் உங்கள் கீழ் இமைகளையும் அழகுபடுத்த உதவுகிறது. கீழ் இமைகளுக்கு ஐ ஷேடோ கோட்டிங் கொடுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வெளிப்புற கண்ணுக்கு ஒரு ஸ்மோக்கி ஐ தோற்றத்தை கொடுப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
லைனர் ப்ரஷ் /ஆங்கிள்டு ப்ரஷ்
லைனர் ப்ரஷ் அல்லது ஆங்கிள்டு ப்ரஷ் சாய்ந்த தூரிகைகளைக் கொண்டது. இதன் மூலம் ஐ லைனரை நீங்கள் துல்லியமாக பயன்படுத்த முடியும். புருவங்களை வரையறுக்கவும், இமைகளில் ஐ லைனரை சரியாக பயன்படுத்தவும் முடியும்.
மஸ்காரா ஃபேன் ப்ரஷ்
இந்த மஸ்காரா ஃபேன் ப்ரஷ் விசிறி வடிவம் கொண்டது. இது கீழ் மற்றும் மேல் இமைகள் இரண்டிலும் மஸ்காராவை துல்லியமாகவும் கட்டிகள் இல்லாமல் பயன்படுத்தவும் உதவுகிறது.
ஐ லைனர் ப்ரஷ்
இந்த ஐ லைனர் ப்ரஷ் ஜெல், க்ரீம் அல்லது திரவ ஐ லைனரை பயன்படுத்த உதவுகிறது. திரவ ஐ லைனரை துல்லியமாக பயன்படுத்த சிறந்த ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications