Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தமன்னா வெள்ளையா இருக்க.. இந்த நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க் தான் காரணமாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க..
பொதுவாக நடிகைகளை மேக்கப் போடாமல் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் மேக்கப் போடாமலேயே நல்ல பால் போன்ற நிறத்தில் அழகாக காட்சியளிப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற ஒரு விவகாரமான வெப் சீரியஸில் நடித்து, பல விமர்சனங்களுக்கு ஆளானார். அதோடு, இந்த வெப் சீரியஸில் நடித்த நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தமன்னா ஒரு நல்ல நடிகை மட்டுமின்றி, டான்சரும் கூட. இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'ஜெயிலர்' படத்தின் "காவாலா" என்ற ஒரு பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடியுள்ளார். தற்போது அந்த பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
33 வயதிலும் சிக்கென்று அழகான உடலமைப்பை பராமரித்து வரும் தமன்னா இப்படி பால் போன்ற நிறத்தில் இருக்க காரணம் அவர் சிறு வயதில் இருந்தே பயன்படுத்தி வரும் ஒருசில நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்குகள் தான் என்று வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். உங்களுக்கு தமன்னாவின் அழகிற்கு காரணமான அந்த நேச்சுரல் ஃபேஸ் மாஸ்க்குகளை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
சந்தனம், காபி, தேன் ஸ்கரப்
நடிகையாக இருப்பதால் தமன்னா பலவிதமான மேக்கப்பை போட வேண்டியிருக்கும். இப்படி மேக்கப்பை அதிகம் போடுவதால், முகத்தில் இறந்த செல்கள் அதிகம் சேரும். இப்படி சேரும் இறந்த செல்களை நீக்க தமன்னா மூன்று பொருட்களைக் கொண்ட ஒரு நேச்சுரல் ஃபேஸ் ஸ்கரப்பை பயன்படுத்துவாராம். இந்த ஃபேஸ் ஸ்கரப் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பட்டுப் போன்று வைத்துக் கொள்ளும்.
இந்த ஸ்கரப்பிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டீஸ்பூன் காபித் தூள் மற்றும் ஆர்கானிக் தேன் ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
கடலை மாவு, தயிர், ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
மேக்கப் போடுவதால் சருமம் அதிகம் வறண்டு போகும். இப்படி சருமம் வறண்டு போவதைத் தடுக்க தமன்னா நேச்சுரல் ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுவாராம். அதுவும் இந்த ஃபேஸ் பேக்கை கடலை மாவு, தயிர், ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் கொண்டு போடுவாராம். இதில் உள்ள ரோஸ் வாட்டர் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றைத் தடுக்கும். தயிர் சருமத்தை ஆழமாக ஈரப்பதமூட்டும் மற்றும் கடலை மாவு சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கரப் மற்றும் ஃபேஸ் பேக்கை தமன்னா அடிக்கடி பயன்படுத்துவாராம். சொல்லப்போனால், அவரது அழகின் ரகசியம் என்றால், அது இவ்விரண்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார். எனவே நீங்களும் தமன்னா போன்று அழகான மற்றும் சுத்தமான சருமத்தைப் பெற விரும்பினால், இந்த ஸ்கரப் மற்றும் ஃபேஸ் பேக்கை உங்களின் அழகு பராமரிப்பிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications