Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வியர்க்குரு ரொம்ப அரிக்குதா? உடனடி நிவாரணம் பெற இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
Summer Prickly Heat Rashes: வெயில் காலம் வந்துவிட்டாலே, அளவுக்கு அதிகமாக வியர்ப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் அளவுக்கு அதிகமாக வியர்ப்பவர்கள் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் வியர்க்குரு. இந்த வியர்க்குருவானது சிவப்பு நிற புள்ளிகளாக உடலின் முதுகு, கழுத்து, நெற்றி மற்றும் சிலருக்கு முகத்தில் அதிகம் காணப்படும். முக்கியமாக குழந்தைகள் வியர்க்குருவால் அதிகம் அவதிப்படுவார்கள்.
வியர்க்குருக்கள் ஒருவருக்கு கடுமையான அரிப்புக்களை உண்டாக்குவதோடு, எரிச்சல் மற்றும் ஊசியால் குத்துவது போன்று மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். வியர்க்குரு பிரச்சனைக்கு பலரும் வியர்க்குரு பவுடரை வாங்கி பயன்படுத்துவோம்.

ஆனால் ஒருசில இயற்கை வழிகள் வியர்க்குருவைப் போக்குவதோடு, வியர்க்குருவால் சந்திக்கும் அசௌகரியங்களையும் தடுக்கும். இப்போது அந்த வழிகள் என்னவென்பதைக் காண்போம்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டிசெப்டிக் பண்புகள் அதிகளவில் உள்ளன. இது பல்வேறு சரும பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக வியர்க்குருவால் அவதிப்படும் போது, கற்றாழை ஜெல்லை வியர்க்குருவின் மீது தடவினால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, விரைவில் வியர்க்குருவும் மறையும்.
ஐஸ் பேக்
வியர்க்குருவால் ஏற்படும் அரிப்புக்கள் மற்றும் எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணத்தை வழங்கும் ஒரு வழி தான் ஐஸ் பேக் ஒத்தடம் கொடுப்பது. அதற்கு ஐஸ் கட்டியை ஒரு காட்டன் துணியில் வைத்து, அந்த துணியால் வியர்க்குருக்கள் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் வியர்க்குருவால் ஏற்படும் எரிச்சலும், அரிப்புக்களும் குறையும்.
வேப்பிலை பேஸ்ட்
வேப்பிலையில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே நற்பதமான வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ, வியர்க்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி சரும அழகை மேம்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு அழகு பராமரிப்பு பொருள். இந்த முல்தானி மெட்டி வியர்க்குரு பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும் என்பது தெரியுமா? ஆம், முல்தானி மெட்டி வியர்க்குருவால் ஏற்படும் அரிப்புக்களை நீக்கி, சரும எரிச்சலைத் தணிக்கும். அதற்கு முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து வியர்க்குரு உள்ள சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து கொண்டது மட்டுமின்றி, குளிர்ச்சியானதும் கூட. இந்த வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, ஃப்ரீசரில் 1/2 மணிநேரம் வைத்து, பின் அதை வியர்க்குரு உள்ள இடத்தில் 15 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இதனால் வியர்க்குருவால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்.
சந்தனப் பவுடர்
சந்தன பவுடர் குளிர்ச்சியானது என்பதை அனைவரும் அறிவோம். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண பண்புகளும் உள்ளன. எனவே இவற்றை வியர்க்குரு உள்ள இடத்தில் தடவினால் வலியும், அரிப்புக்களும் குறையும். அதற்கு சந்தனப் பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வியர்க்குரு மீது தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்ய நல்ல நிவாரணம் உடனடியாக கிடைக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகள் அனைத்தும் அரிக்கும் மற்றும் குத்தும் வியர்க்குரு பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இருப்பினும் வியர்க்குரு பிரச்சனையைத் தவிர்க்க, கோடையில் வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்ப்பதோடு, தளர்வான காட்டன் ஆடைகளை அணிந்து, உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.



Click it and Unblock the Notifications


