Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சம்மரில் பொடுகு மற்றும் அரிப்பு தொல்லை ஏற்படாமல் இருக்க... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
கொளுத்தும் கோடை வெயிலில் உங்கள் தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். கோடைக்காலம் என்றாலே, அதிகப்படியான வியர்வையால் பொடுகுத் தொல்லை உருவாகி, உங்கள் உச்சந்தலையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், முடி உதிர்தல், வறண்ட மற்றும் வலுவிழந்த முடியை நீங்கள் பெறலாம்.
அதிகப்படியான வியர்வை மற்றும் உச்சந்தலையின் அதிகப்படியான வறட்சியின் காரணமாக, தூசி மற்றும் அழுக்கு குவிந்து, உங்கள் உச்சந்தலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பூஞ்சை தொற்று, தோல் அழற்சி மற்றும் உச்சந்தலையில் அரிப்பு ஆகியவற்றுடன் பொடுகு பிரச்சனை மிகவும் பொதுவானது.

கோடையில் உங்கள் உச்சந்தலையை பராமரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்றாகக் கட்டுப்படுத்தலாம். உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான முடி பராமரிப்பு வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும் சில பயனுள்ள வழிகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தலைமுடியை தவறாமல் அலச வேண்டும்
கோடையில் உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதற்கான வழிகளில் முக்கியமானது இது. சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் சென்று வந்த பிறகு தினமும் உங்கள் தலைமுடியை அலச வேண்டும்.
அதிக வியர்வையால் உச்சந்தலையில் அழுக்கு படிந்திருக்கும், அதை அலசாமல் இருந்தால் பொடுகு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆதலால், உங்கள் தலைமுடியை வாரத்திற்கு மூன்று முறை தவறாமல் அலச வேண்டும்.
கடுமையான ஷாம்பூவைத் தவிர்க்கவும்
வறண்ட காலநிலை மற்றும் வெப்ப காற்றால் உங்கள் தலைமுடி விரைவில் வறண்டு போகலாம். கடுமையான ராசயனங்கள் கொண்ட ஷாம்பூவை தினமும் அல்லது அடிக்கடி உபயோகிப்பது உங்கள் தலைமுடியை மேலும் உடையக்கூடியதாக மாற்றும். இதன் விளைவாக பிளவு முடி மற்றும் முடி உதிர்தல் ஏற்படலாம். கடுமையான இரசாயனங்கள் இல்லாத லேசான ஷாம்புகள் அல்லது இயற்கை ஷாம்புகளை கொண்டு முடியை அலசுங்கள்.
முடியை நன்றாக உலர்த்த வேண்டும்
உங்கள் தலைமுடியை காற்றில் உலர்த்த வேண்டும் என்பது இந்த கோடை காலத்திற்கான மிக முக்கியமான முடி பராமரிப்பு குறிப்பாகும். வெப்பக் கருவிகளை கொண்டு முடியை உலர்ந்த வேண்டாம். ஏனெனில், அது உங்கள் உச்சந்தலையையும் முடியையும் சேதப்படுத்தும்.
உங்கள் தலைமுடியை நன்கு உலர்த்திய பின்னரே பின்ன வேண்டும். கோடையில் ஈரமான தலைமுடியை கட்டுவது பொடுகு, அழுக்கு மற்றும் மாசுக்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஸ்டைலிங் தயாரிப்புகளை குறைக்கவும்
ஸ்டைலிங் தயாரிப்புகள் உங்கள் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் உச்சந்தலைக்கும் தீங்கு விளைவிக்கும். கோடை காலத்தில் ஸ்டைலிங் சிகிச்சைகள் எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இதனால் உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். ஆதலால், இந்த கோடைகாலத்தில் ஸ்டைலிங் தயாரிப்புகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
எண்ணெய் மசாஜ்
தலைமுடியில் எண்ணெய் மசாஜ் செய்வது உங்கள் முடி மற்றும் உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மாசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த தேர்வு. உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் உடல் சூடு குறையும் மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும். அந்த வகையில், ஒவ்வொருவரும் இந்த கோடை காலத்தில் தவறாமல் எண்ணெய் மசாஜ் செய்துகொள்ளுங்கள்.
நீரேற்றம்
எப்போதும் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது உடல், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது. நீரேற்றமாக இருக்க ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் உச்சந்தலையை நீரேற்றமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. நீரேற்றமாக இருப்பது கோடை மாதங்களில் உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும்.



Click it and Unblock the Notifications


