Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வெயிலால் உங்க சரும நிறம் குறைஞ்சுகிட்டே போகுதா? செலவே இல்லாத இந்த வழிகளில் ஈஸியா அதை சரி பண்ணிரலாம்...!
Summer Care Tips: சூரிய வெப்பம் நம்மை முழு வேகத்துடன் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. வெயில் காலத்தை விரும்பும் மக்களும் கூட வெயின் தாக்கங்களான சரும நிறம் குறைதல் மற்றும் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளால் வெயிலைக் கண்டு அஞ்சுவார்கள்.
என்னதான் நீங்கள் நல்ல சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்தினாலும், கடுமையான வெயிலின் தாக்கம் உங்கள் சரும நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உங்கள் பொலிவைக் குறைக்கும். வெயில்காலம் வந்தால் பெரும்பாலான மக்கள் சரும பொலிவை நினைத்தே கவலைப்படுவார்கள்.

அப்படி கவலை கொள்வதில் நீங்களும் ஒருவரா? என்னதான் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து நாம் தப்ப முடியாது என்றாலும், அதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள அதிக செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காபி ஸ்க்ரப்
ஒரு தேக்கரண்டி ஃபில்டர் காபி தூளில் இரண்டு டீஸ்பூன் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் சர்க்கரை மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்த பிறகு, உங்கள் நிறம் குறைந்ததாக உணரும் உடல் பாகங்களில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்த்த நீரால் கழுவவும். வாரம் இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகள் கிடைக்கும்.
பப்பாளி மாஸ்க்
தோல் பராமரிப்புக்கான சிறந்த பொருட்களில் ஒன்று பப்பாளி. இந்த பழத்தில் இருக்கும் என்சைம்கள் சருமத்தை வெண்மையாக்கவும், சரும நிறம் குறைவதை தடுக்கவும் உதவுகிறது. கூடுதலாக தோல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் புண்களுக்கு சிறந்த தீர்வாகிறது. ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் அரை பழுத்த பப்பாளி கூழ் ஆகியவற்றை சேர்த்து, தோல் நிறத்தை மாற்ற வேண்டிய பகுதிகளில் மெதுவாக தடவி பத்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, லேசான மாய்ஸ்சரைசரை அல்லது சில துளி தேங்காய் எண்ணையை பயன்படுத்துங்கள். நல்ல பொலிவைப் பெற இதை வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்துங்கள்.
ஆயுர்வேத மாஸ்க்
இந்த ஆயுர்வேத மாஸ்க்குக்கு இரண்டு டீஸ்பூன் திரிபலா சூர்ணா, ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டரை கலந்து, அந்த கலவையை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மஞ்சள் மற்றும் கடலை மாவு பேக்
இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் பால் அல்லது தயிர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பேக் தயாரிக்கவும். சூரியனால் பாதிக்கப்பட்ட உங்கள் சரும பாகத்தில் மெதுவாக சீராக தடவி 30 நிமிடங்களுக்கு பின் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க்
நன்றாக பழுத்த வாழைப்பழத்தை ஒரு ஸ்பூன் தேன், சில துளிகள் பால் மற்றும் பாலாடையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை கருத்த உங்க உடல் பாகங்களில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் சருமம் ஒளிரும்.
மசூர் பருப்பு, கற்றாழை மற்றும் தக்காளி பேக்
நன்கு ஊறவைக்கப்பட்ட பருப்புடன், கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி விழுது சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கவும். உங்கள் உடலின் தோல் பகுதிகளில் பேஸ்ட்டை சீராக தடவி, முப்பது நிமிடங்களுக்கு பின் கழுவவும். நல்ல மாற்றத்துக்கு இதை வாரம் இரு முறை தொடர்ந்து செய்யவும்.
தேங்காய் பால்
இந்த முறை முற்றிலும் இயற்கையானது மற்றும் எளிதில் செய்யக்கூடியது. வைட்டமின் சி மற்றும் லாக்டிக் அமிலம் தேங்காய் பாலில் ஏராளமாக உள்ளதால், இது சருமத்தில் நிறம் மற்றும் தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. மேலும், இது ஈரப்பதம் மற்றும் ஊட்டமளித்து, உங்கள் சரும ஈரப்பதத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. புதிய ஆர்கானிக் தேங்காய் பாலில் பருத்தி துணியை நனைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி 15 நிமிடங்களுக்கு உலர விட்டு, பின் நீரில் கழுவவும்.
அரிசி மாவு ஸ்க்ரப்
1-2 தேக்கரண்டி அரிசி மாவை எடுத்து சிறிது பச்சை பாலுடன் கலந்து, முகம், கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் மெதுவாக மசாஜ் செய்யவும். இருபது நிமிடங்களுக்கு பிறகு, சாதாரண நீரில் கழுவவும். இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்க்ரப்பை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினால், இயற்கையான சருமப் பொலிவை பெறலாம்.



Click it and Unblock the Notifications

