Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
கோடைகாலத்தில் சரும அழகை மேம்படுத்தணுமா? இந்த சிம்பிள் டிரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்..!
Summer Beauty Tips In Tamil: இந்த கோடைகாலத்தில் கொஞ்ச நேரம் வெயிலில் போயிட்டு வந்தாலே போதும் சரும எரிச்சல், வியர்க்குரு, சருமம் கருத்து போதல் போன்ற பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடலாம்.
எனவே மற்ற நாட்களைப் போல் இல்லாமல் இந்த கோடை காலத்தில் சரும அழகை பராமரிக்க நாம் ஸ்பெஷலான டிப்ஸ்களை பின்பற்ற வேண்டியிருக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தியே இந்த டிப்ஸ்களை செய்ய முடியும்.

இதன் மூலம் கோடை காலத்திலும் உங்கள் சரும அழகை மேலும் மேலும் மெருகேற்ற முடியும் மற்றும் கோடை கால சரும பிரச்சனைகளுக்கும் நம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும், கோடை காலத்தில் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பட்டு போன்று மென்மையாக இருக்கவும் இப்படி பல வகையான நன்மைகளை இதன் மூலம் நீங்கள் பெறலாம். சரி வாங்க கோடைகாலத்தில் உங்கள் சரும அழகை எப்படி மேலும் மேலும் மெருகேற்றலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
கற்றாழை ஜெல் ஐஸ் கட்டிகள்
கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து அதன் சாற்றை உங்கள் வீட்டு ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கலாம். இந்த ஐஸ் கட்டியை கொண்டு உங்கள் முகத்திற்கு மசாஜ் செய்து வாருங்கள். வெயிலால் ஏற்படும் சரும எரிச்சல் போன்றவற்றை போக்க இது உதவுகிறது.
லிப்ஸ்டிக்கில் இருந்து லிப் கிளாஸ் தயாரியுங்கள்
இந்த கோடை காலத்தில் நீங்கள் லிப்ஸ்டிக் போட்டு சென்றால் கூட அது சீக்கிரமே உருகி விடுவது உண்டு. எனவே நீங்கள் போடும் லிப்ஸ்டிக் நாள் முழுவதும் அழியாமல் இருக்க உருகிய லிப்ஸ்டிக்கில் இருந்து லிப் கிளாஸாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த லிப் கிளாஸ்யை தேவைப்படும் போது அப்ளை செய்து கொள்ளலாம்.
கோடை காலத்தில் பவுடர் வேண்டாம்
நிறைய பேர் கோடை காலத்தில் தங்களுக்கு ஏற்படும் வியர்வையை தடுக்க முகத்திற்கு பவுடரை அப்ளை செய்வது உண்டு. ஆனால் பவுடர் சீக்கிரமே அழிந்து போவதோடு சரும துளைகளையும் அடைத்து உங்களுக்கு முகப்பரு பிரச்சினைகளை உண்டாக்கும். எனவே சரும துளைகள் அடைபடாமல் இருக்க எண்ணெய் தடுப்பு பேப்பர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வியர்வை துர்நாற்றத்தை போக்கும் லெமன் ஜூஸ்
இந்த கோடை காலத்தில் வியர்வை துர்நாற்றம் என்பது பெரிய பிரச்சினையாக இருக்கும். எனவே வியர்வை துர்நாற்றத்தை போக்க துணியை துவைப்பதற்கு முன்பு துணியில் லெமன் ஜூஸை ஸ்ப்ரே செய்து விடலாம். இது உங்கள் துணிக்கு நறுமணத்தை அளிக்கும்.
SPF கண்டிஷனரை பயன்படுத்துங்கள்
கோடைகாலத்தில் கூந்தல் சீக்கிரமாகவே வறண்டு போய் விடும். எனவே முடியின் நிறத்தை பாதுகாக்க SPF கண்டிஷனரை பயன்படுத்தி வரலாம். இந்த SPF கண்டிஷனர் சூரிய ஒளியின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்கள் கூந்தலை பாதுகாக்கும்.
உதடுகளுக்கும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்
பொதுவாக கோடை காலத்தில் வெளியே செல்வதற்கு முன்பு சருமத்திற்கு சன்ஸ்க்ரீனை பயன்படுத்துவது உண்டு. உங்கள் உதடுகளுக்கும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்த மறக்காதீர்கள். SPF 30 என்ற சன்ஸ்க்ரீனை பயன்படுத்தி வரலாம். இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை முழுவதுமாக பாதுகாக்கும்.
தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
இந்த கோடைகாலத்தில் தக்காளி ஜூஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து அதை முகத்திற்கு ஸ்கரப்பாக பயன்படுத்தி வரலாம். இது சருமத்தை புதுப்பிப்பதோடு சூரிய ஒளியால் ஏற்படும் சரும பிரச்சனைகளை களைய உதவுகிறது.
கழுத்தின் பின்புறத்தில் டியோடரண்ட்டை பயன்படுத்துங்கள்
கோடைகாலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையை தடுக்க கழுத்தின் பின்புறத்தில் சிறிது டியோடரண்ட்டை அப்ளை செய்யுங்கள். இது உங்கள் உடம்பை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் இது அதிகப்படியான வியர்வையையும் தடுக்கிறது.
புதினா லோசனை பயன்படுத்துங்கள்
இந்த கோடை காலத்தில் உங்கள் சருமம் மேலும் கூலாக இருக்க புதினா லோசனை பயன்படுத்துங்கள். இது வியர்க்குரு மற்றும் சரும எரிச்சலில் இருந்து நல்ல குளிர்ச்சியான தன்மையை கொடுக்கும்.



Click it and Unblock the Notifications