Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
உங்க தலைமுடியில் முட்டை நாத்தம் அடிக்குதா? அப்ப அத நீக்கவும் முடியை பளபளப்பா மாற்றவும் 'இத' பண்ணுங்க!
Egg Smell From Hair In Tamil: பொதுவாக எல்லா மக்களுக்கும் தலைமுடி பிரச்சனை இருக்கிறது. முடி உதிர்தல், பொடுகு தொல்லை, நரை முடி, வறண்ட மற்றும் வலுவிழந்த முடி போன்ற பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை நாம் தினந்தினம் சந்திக்கிறோம். ஆனால், தலைமுடியில் துர்நாற்றம் வீசும் பிரச்சனையை பற்றி நாம் பெரும்பாலும் பேசுவதில்லை.
பளபளப்பான முடியை பெற விரும்பி, பலர் முட்டை ஹேர் மாஸ்க்கை பய்னபடுத்துகிறார்கள். அதற்கான பலன்களை நீங்கள் பெற்றாலும், தலைமுடியில் முட்டையை தடவி, ஒரு விரும்பத்தகாத வாசனையுடன் இருப்பது உங்களுக்கு அசெளகரியமாக தோன்றலாம். அந்த முட்டை துர்நாற்றம் உங்களை கவலையடைச் செய்யலாம்.

உங்கள் கூந்தலில் இருந்து வரும் முட்டை வாசனையை அகற்ற உதவும் சில பயனுள்ள உதவிக் குறிப்புகள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த எளிய தீர்வுகள் மூலம், உங்கள் புதிய மற்றும் மணம் கொண்ட முடியை எப்போதும் நீங்கள் பெறலாம்.
எலுமிச்சை சாறு
உங்கள் தலைமுடியில் இருந்து வரும் முட்டை வாசனையைப் போக்க ஒரு எளிய மற்றும் இயற்கையான வழியாக எலுமிச்சை சாறு உள்ளது. இதைக் கொண்டு முடியை அலசுங்கள். எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை துர்நாற்றத்தை நீக்கி, உங்கள் தலைமுடிக்கு புதிய வாசனையையும் பளபளப்பையும் அளிக்கும்.
ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றை ஒரு கப் தண்ணீரில் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள். ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியை அலசிய பின் கடைசியாக எலுமிச்சை தண்ணியை கொண்டு முடியை அலச வேண்டும். இது முட்டை துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமல்லாமல், உங்கள் தலைமுடிக்கு அழகான பளபளப்பையும் சேர்க்கும்.
வினிகர்
வினிகர் பிடிவாதமான துர்நாற்றங்களை அகற்றும் திறனுக்காக அறியப்படுகிறது. மேலும் இது உங்கள் தலைமுடியில் வரும் முட்டை வாசனையையும் போக்க உதவுகிறது. வினிகர் மற்றும் தண்ணீர் கலவை சம பாகங்களாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஷாம்பு கொண்டு உங்கள் தலைமுடியை அலசிய பின்பு, இந்த வினிகர் நீரை பயன்படுத்தவும். வினிகர் துர்நாற்றத்தை நடுநிலையாக்குகிறது. உங்கள் தலைமுடியை சுத்தமாகவும் புதியதாகவும் வைத்திருக்க உதவும். கூடுதலாக, இது உங்கள் உச்சந்தலையின் pH சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பேக்கிங் சோடா மாஸ்க்
பேக்கிங் சோடா ஒரு அற்புதமான வாசனை உறிஞ்சி மற்றும் உங்கள் முடியில் இருந்து முட்டை வாசனையை அகற்ற உதவுகிறது. பேக்கிங் சோடா பவுடர் மென்மையான நிலைத்தன்மையை அடையும் வரை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
உங்கள் ஈரமான கூந்தலில் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள், வாசனை அதிகமாக இருக்கும் பகுதிகளில் நன்றாக கவனம் செலுத்தி தடவுங்கள். பின்னர், 10-15 நிமிடங்கள் கழித்து முடியை தண்ணீரில் நன்றாக அலச வேண்டும்.
அத்தியாவசிய எண்ணெய்கள்
அத்தியாவசிய எண்ணெய்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுவது மட்டுமல்ல, தேவையற்ற நாற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் சிறந்தவை. லாவெண்டர், ரோஸ்மேரி அல்லது தேயிலை மர எண்ணெய் போன்ற உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெயின் சில துளிகளை உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சேர்த்து பயன்படுத்தவும்.
இந்த எண்ணெய்களில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை முட்டை வாசனையைக் குறைக்க உதவுகின்றன. அதே நேரத்தில் உங்கள் தலைமுடிக்கு நல்ல வாசனையையும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பளபளப்பான முடியையும் பெறலாம்.
தக்காளி சாறு
உங்கள் தலைமுடியில் வீசும் முட்டை துர்நாற்றத்தை போக்க தக்காளி சாற்றை பயன்படுத்தலாம். இது வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றினாலும், தக்காளிச் சாறு முடியில் இருந்து முட்டை வாசனையை நீக்குவதற்கு ஒரு ஆச்சரியமான மற்றும் பயனுள்ள தீர்வாகும்.
தக்காளியின் இயற்கையான அமிலத்தன்மை, முட்டையின் நீடித்த வாசனை உட்பட நாற்றத்தை போக்க உதவுகிறது. தக்காளி சாற்றை உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் கழித்து நன்கு அலச வேண்டும்.



Click it and Unblock the Notifications
