Latest Updates
-
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம் -
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
ஆடி மாத ராசிபலன் 2026: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா?
ஸ்ரீதேவி அவ்வளவு இளமையாக இருந்ததற்கு அதுதான் காரணம்.. நீங்களும் ஃபாலோ பண்ணா சூப்பரா இருக்கும்
சென்னை: நடிகை ஸ்ரீதேவி இந்திய அளவில் ஃபேமஸான நடிகையாக திகழ்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டிய நடிகைகளில் அவர் முதன்மையானவர். தன்னுடைய கரியர் பீக்கில் இருக்கும்போதே தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். போனி கபூருக்கு ஸ்ரீதேவி இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற மகள்கள் இருக்கிறார்கள். அவர்களும் சினிமா துறையில் ஜொலித்துவருகிறார்கள்.
சிவகாசியை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் வந்தவர். சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் படங்களில் நடித்த அவர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க; வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் வந்தன. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த அவருக்கு 16 வயதினிலே திரைப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் பட்டித்தொட்டியெங்கும் ரீச் ஆக; தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார்.
முன்னணி நடிகை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு வரிசையாக ஜோடி போட்டு நடித்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறினார். தமிழில் எப்படி கலக்கினாரோ அதேபோல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது கொடியை உயர பறக்க வைத்தார். எப்படியாவது ஸ்ரீதேவியுடன் ஒரு படத்திலாவது நடித்திட வேண்டும் என்று ஹீரோக்கள் ஏங்கிய காலமெல்லாம் உண்டு. தொடர்ந்து இங்கு பிஸியாக இருந்த அவர் பாலிவுட்டிலும் நுழைந்து அங்கும் தனக்கான மார்க்கெட்டை உயர்த்தினார்.

போனி கபூருடன் திருமணம்: அங்கு ஃபுல் ஃபார்மில் அவர் இருந்தபோது தயாரிப்பாளர் போனி கபூருடன் காதல் மலர்ந்தது. போனி ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் காதல் கண்ணை மறைக்க அவரையே திருமணமும் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. அவர்களுக்கு குஷி கபூர், ஜான்வி கபூர் என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தமிழில் புலி படத்தில் மட்டும் நடித்தார். சூழல் இப்படி இருக்க துபாய்க்கு சென்றிருந்தபோது கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
ஸ்ரீதேவியின் இளமை ரகசியம்: இதற்கிடையே ஸ்ரீதேவியை யார் எப்போது பார்த்தாலும் அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருந்தார் என்ற கேள்வி தவறாமல் எழுந்துவிடும். அவர் தனது அழகில் ரொம்பவே கான்ஷியஸாக இருந்தவர். இந்நிலையில் தனது தாயின் இளமை ரகசியம் குறித்து ஜான்வி கபூர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த ஒரு பேட்டியில், "எங்கள் வீட்டின் காலை உணவில் கண்டிப்பாக பழங்கள் தவறாமல் இடம்பெறும். பிறகு சாப்பிடாமல் மீதம் இருக்கும் பழங்களை ஜூஸாக்கி முகத்தில் அம்மா தேய்த்துக்கொள்வார்.
பளீச்சென்று ஆகிவிடும்: பழங்களை ஜூஸாக்கி முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளீச்சென்று மாறிவிடும். அந்த பழ ஜூஸ் முகத்தின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கும். இறந்த செல்களை ஸ்க்ரப் செய்து உதிரவும் வைக்கும். அதனால்தான் முகம் பளீச்சென தோன்றுகிறது. இதனை எல்லாம் அம்மா தவறாமல் பின்பற்றிவந்தார். அவரது பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இவைத்தான் என்னுடைய அம்மா இளமையாக இருந்ததற்கான சீக்ரெட்ஸ்" என்றார்.



Click it and Unblock the Notifications