For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்த கண் இமைகளை பற்றி உங்களுக்குத் தெரியுமா? எப்படி உபயோகிப்பது?

நீண்ட, அடர்த்தியான மற்றும் புல்லாங்குழல் போன்ற கண் இமைகள் வேண்டும் என்று தான் எல்லா பெண்களுக்கும் ஆசை. காந்தக் கண் இமைகள் என்று பெயரில் குறிப்பிடுவதுபோல இந்த கண் இமைகளில் காந்தங்கள் உள்ளன. இந்த இமைகளை

|

நீண்ட, அடர்த்தியான மற்றும் புல்லாங்குழல் போன்ற கண் இமைகள் வேண்டும் என்று தான் எல்லா பெண்களுக்கும் ஆசை. ஏனெனில் இவை கண்களின் அழகையும் அவர்களின் தோற்றத்தையும் உயர்த்திக் காட்டும். சிலருக்கு இயற்கையாக அடர்த்தியான மற்றும் நீண்ட புருவங்கள் இருக்கும் சிலருக்கு அத்தகைய புருவங்கள் இருக்காது. எனவே உங்களுக்காக செயற்கையான காந்தக்கண் இமைகள் உள்ளன.

What Are Magnetic Eyelashes? Here Is How To Wear Them

இவற்றை மேக்கப் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் அழகு குருக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த காந்த கண் இமைகளை அப்ளை செய்து உங்களின் இமைகளை மற்றவர்களை ஈர்க்குமாறு மாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்த கண் இமைகள்

காந்த கண் இமைகள்

காந்தக்கண் இமைகள் என்று பெயரில் குறிப்பிடுவது போல இந்த கண் இமைகளில் காந்தங்கள் உள்ளன. இந்த இமைகளை உங்கள் கண்களில் ஒட்டிக் கொள்ள பசை தேவையில்லை. நேரடியாக இந்த ஜோடி இமைகளை உங்கள் கண்களில் ஒட்டிக்கொள்ளலாம். இதனை மிக எளிதாக எடுக்கவும் செய்யலாம். ஒவ்வொரு கண்களுக்கும் இரண்டு இமைகள் இருக்கும். அதாவது மேல் கண் இமை மற்றும் கீழ் கண் இமை. நடுவில் உங்கள் கண்கள் அழகாக காட்சியளிக்கும். காந்தங்கள் உங்கள் கண்களை நன்றாக பிடித்துக் கொள்ளும். அவை விழுந்து விடுமோ என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை. இமைகளில் உள்ள காந்தம் உங்களின் கண்களில் இருந்து காந்த இமைகள் விழாமல் பார்த்துக் கொள்ளும்.

காந்தக்கண் இமைகள் அணிதல்

காந்தக்கண் இமைகள் அணிதல்

காந்த கண் இமைகள் அணிவது மிகவும் கடினமான விஷயம் இல்லை. ஆனால் அவற்றை அணிவதற்கு உங்களுக்கு சில பயிற்சிகள் தேவை. எல்லா காந்தக்கண் இமைகளும் எப்படி அணிய வேண்டும் என்ற குறிப்புகளுடன் தான் கொடுக்கப்படும். அதனை பின்பற்றி அணியுங்கள். ஒவ்வொரு கண் இமைகளும் இரண்டு ஜோடிகளாக இருக்கும். அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும். அவற்றை முதலில் தனியாக பிரித்து தான் கண்களில் அப்ளை செய்ய வேண்டும்.

அணியும் முறை

அணியும் முறை

உங்கள் கண் இமைகளின் நீளத்திற்கு ஏற்ப முதலில் கிளிப் செய்துக் கொள்ளுங்கள். உங்கள் மஸ்காராவை பயன்படுத்தி கண் இமைகளில் அழகாக வரைந்து கொள்ளுங்கள். காந்த இமைகளில் உள்ள மேல் கண் இமைகளை எடுத்து உங்கள் மேல் கண் இமைகளுக்கு எதிராகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது காந்த இமைகளில் உள்ள கீழ் கண் இமைகளை எடுத்து உங்கள் கண்களின் கீழ் இமைகளுக்கு எதிராக வைத்து பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது இரண்டு காந்த இமைகளும் உங்கள் கண்களில் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.

அகற்றுதல்

அகற்றுதல்

காந்தக்கண் இமைகள் உங்களுக்கு முழுவதுமாக ஒட்டிக் கொள்ளுவதற்கு, உங்கள் கண்களுக்கு பழகுவதற்கும் சிறிது நேரம் ஆகும். ஆனால் அவை ஒட்டிக் கொண்டப் பிறகு உங்கள் கண்களுக்கு மிகவும் அழகான தோற்றத்தினைத் தரும். இவற்றை லேசாக பிடித்து இழுத்தாலே எளிமையாக அகற்றி விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are Magnetic Eyelashes? Here Is How To Wear Them

Long, thick and fluttery eyelashes are the new obsession and magnetic eyelashes are the latest way to quench this obsession in a rather effortless way. From false eyelashes to eyelash extension, we have seen and tried different ways to get dreamy eyelashes. Although, false eyelashes have been the most popular technique used by the make-up artists and beauty gurus across the globe.
Story first published: Saturday, October 5, 2019, 17:50 [IST]
Desktop Bottom Promotion