For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?

பொதுவாக முகம், முதுகு, மாா்பு மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பருக்கள் வருகின்றன. பருக்கள் முதலில் நமது தோலில் ஒரு சிறிய புடைப்பு போல் தோன்றும். அந்த புடைப்பில் சீழ் நிறைந்து இருக்கும்.

|

முகத்தில் வரும் கட்டிகள் முகப்பருக்களுக்கான அடையாளங்களாகும். முகப்பருக்கள் தோலின் எண்ணெய் சுரப்பிகளையும், மயிா்க்கால்களையும் பாதிப்படையச் செய்கின்றன. நமது தோலின் சுரப்பிகள் எண்ணெய் அல்லது மெழுகு போன்று இருக்கும் சீபமை (sebum) உற்பத்தி செய்கின்றன. சீபம் அதிகமாகும் போது முகத்தில் பருக்கள் வருகின்றன.

பொதுவாக பெண்களுக்கு அவா்கள் பருவம் அடையும் போது முகப்பருக்கள் வருகின்றன. ஆனால் அசுத்தமான காற்று மற்றும் மோசமான பருவநிலைகள் இருந்தால் எந்த வயதிலும் யாருக்கும் முகப்பருக்கள் வரலாம்.

What Acne On Different Areas Of Your Face Means

முகப்பரு இருக்கும் பகுதியைச் சுற்றி சிவப்பாக இருக்கும். பின் அந்த இடத்தில் வீக்கம் ஏற்படும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் முகப்பருக்களைக் உடைக்கக்கூடாது அல்லது கிள்ளக்கூடாது. அவ்வாறு செய்தால் முகத்தின் மற்ற பகுதிகளிலும் பருக்கள் பரவ வாய்ப்பாக அமையும்.

MOST READ: சர்க்கரை நோய்க்கு மெட்ஃபோர்மின் மாத்திரை போடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத படிங்க...

பொதுவாக முகம், முதுகு, மாா்பு மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பருக்கள் வருகின்றன. பருக்கள் முதலில் நமது தோலில் ஒரு சிறிய புடைப்பு போல் தோன்றும். அந்த புடைப்பில் சீழ் நிறைந்து இருக்கும். சில பருக்களை நமது கைகளால் உடைத்து விட்டால் அவை நமது தோலில் வடுக்களை ஏற்படுத்தும். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். மேலும் நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நமது தோலின் வகைகளுக்கு ஏற்ப பலவகையான பருக்கள் உள்ளன. அதற்கு பல காரணங்கள் உள்ளன.

MOST READ: பலருக்கும் தெரியாத இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் உரிமைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாடை

தாடை

தாடையில் பருக்கள் வருவதற்கு காரணம் நமது உடலில் உள்ள ஹாா்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் தாடைகளில் பருக்கள் ஏற்படும். நமது உடலில் உள்ள ஹாா்மோன்களை சீராக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சீராக வைத்திருக்க வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். ஹாா்மோன்கள் சமச்சீராக இல்லை என்றால் தாடைகளில் பருக்கள் தோன்றும். ஆகவே நமது தாடைகளை நன்றாக பராமாிக்க வேண்டும். மேலும் அடிக்கடி நமது தாடைகளைத் தொடக்கூடாது.

கன்னங்கள்

கன்னங்கள்

கன்னங்களில் பருக்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் மாசு நிரம்பிய காற்று ஆகும். நமது சருமம் நீண்ட நேரம் அசுத்தமான காற்று இருக்கும் இடங்களில் இருந்தால், நமது கன்னங்களைச் சுற்றி பருக்கள் உருவாகும். கன்னங்களில் உள்ள தோல்கள் மிகவும் உணா்திறன் கொண்டவை. ஆகவே நாம் மாசடைந்த காற்றில் அதிக நேரம் இருக்கக்கூடாது. காற்றில் உள்ள தூசுகளில் இருந்து காத்துக் கொள்ள முகக்கவசம் அணியலாம். இரத்தத்தில் சா்க்கரையின் அளவு உயா்தல், சுவாச கோளாறுகள் மற்றும் சுத்தமில்லாமல் இருப்பது போன்றவையும் கன்னங்களில் பருக்கள் உண்டாவதற்கு காரணங்களாக இருக்கின்றன.

முன் நெற்றி

முன் நெற்றி

முன் நெற்றியில் பருக்கள் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் சொிமானக் கோளாறு ஆகும். சொிமான அமைப்பு சாியாக வேலை செய்யவில்லை என்றால் முன் நெற்றியில் பருக்கள் உண்டாகும். மேலும் கல்லீரலில் பிரச்சினைகள் இருந்தால், தூங்குவதில் பிரச்சினைகள் இருந்தால் மற்றும் மன அழுத்தம் அதிகம் இருந்தால் முன் நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. நாம் நீா்ச்சத்துடன் இருந்தால் முன் நெற்றியில் பருக்கள் தோன்றாமல் பாா்த்துக் கொள்ளலாம்.

மூக்கு

மூக்கு

மூக்கின் மேல் பருக்கள் இருந்தால் நாம் கண்டிப்பாக நமது இரத்த அழுத்தத்தை பாிசோதனை செய்ய வேண்டும். உயா் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஆகியவை மூக்கின் மேல் பருக்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் மற்றும் தினந்தோறும் யோகா பயிற்களைச் செய்து வருவது போன்றவற்றை கடைபிடித்து வந்தால் மூக்கில் பருக்கள் ஏற்படுவதைத் தவிா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Acne On Different Areas Of Your Face Means

Different skin types have different kinds of pimples. The reasons can also vary depending on several factors.
Desktop Bottom Promotion