For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹீரோயின் மாதிரி வெள்ளையாவும் அழகாவும் புத்துணர்ச்சியுடன் இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

நிறைய தண்ணீர் குடிக்கவும். தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் அழகுக்கும் உடல் நலத்திற்கும் நல்லது. வியர்வை மூலம் நீர் நிறைய நச்சுக்களை வெளியேற்றும். நார்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

|

ஆரோக்கியமான ஒளிரும் சருமம் இருப்பது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம். சருமத்தை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க ஒருவர் அவர்களின் தோல் வகையின் அடிப்படையில் சரியான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும். சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல், டோனிங் (சிஎம்டி) தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஆரோக்கியமான சருமத்திற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பொலிவான அழகான சருமம் இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம்.

Tips to Keep Your Skin Fresh and Beautiful in Tamil

அதற்காக பல விஷயங்களை மேற்கொண்டிருக்கலாம். அதனால், பிளான் இல்லாமலும் இருக்கலாம். உங்களில் பெரும்பாலோர் பின்பற்றும் இந்த அடிப்படைகளைத் தவிர, சுத்தமான உணவும் புதிய சருமத்திற்கு முக்கியமானதாகும். இந்த பருவத்தில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் ஆரோக்கியமான சருமத்திற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிப்படை விதிகளை பின்பற்றவும்

அடிப்படை விதிகளை பின்பற்றவும்

உங்கள் தோல் வகையின் அடிப்படையில் தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். வெயிலில் செல்லும் போது நல்ல சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துங்கள். ஒப்பனையுடன் படுக்கைக்குச் செல்லாதீர்கள், ஒரு க்ளென்ஸர் மூலம் அதை முழுவதுமாக அகற்றி, கழுவவும், பிறகு நைட் கிரீம் தடவவும். சருமத்தை மோசமாக பாதிக்கும் கடுமையான ரசாயனங்களிலிருந்து விலகி இருக்க, எப்போதும் குறைவான ஒப்பனை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். சருமத்தையும் சுவாசிக்க விடுங்கள். முகம் மற்றும் உடலுக்கு தனி மாய்ஸ்சரைசர், எக்ஸ்ஃபோலியேட்டிங் க்ரீம்களைப் பயன்படுத்துங்கள். முகத்திற்கு லேசான ஸ்க்ரப் பயன்படுத்தவும். தோல் வகைக்கு ஏற்ப எப்போதும் நல்ல ஃபேஸ் வாஷால் முகத்தைக் கழுவவும். முகப்பரு பிரச்சினைகள் இருந்தால் முகத்திற்கு தனி டவலை பயன்படுத்தவும்.

MOST READ: மழைக்காலத்திலும் உங்க சருமத்தை பொலிவாவும் அழகாவும் வைத்திருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

ஹைட்ரேட்

ஹைட்ரேட்

நிறைய தண்ணீர் குடிக்கவும். தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் அழகுக்கும் உடல் நலத்திற்கும் நல்லது. வியர்வை மூலம் நீர் நிறைய நச்சுக்களை வெளியேற்றும். நார்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்

வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்

வறுத்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிகப்படியான டிரான்ஸ் கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சரும ஆரோக்கியத்திற்கு மோசமானவை.

சர்க்கரை மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கவும்

சர்க்கரை மற்றும் இனிப்புகளைத் தவிர்க்கவும்

அதிகப்படியான சர்க்கரை கொலாஜனைக் குறைக்கிறது மற்றும் முன்கூட்டிய வயதானதை மெல்லிய கோடுகளை உருவாக்குவதன் மூலம் அதிகரிக்கிறது. ஏனெனில், இது குளுக்கோஸ் கிளைசேஷன் என்ற செயல்முறையைத் தூண்டுகிறது, அதாவது முன்கூட்டிய வயதாவதை தடுக்கிறது.

MOST READ: 'இந்த' சத்து நிறைந்த உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்குமாம்!

அதிக விதைகளை உண்ணுங்கள்

அதிக விதைகளை உண்ணுங்கள்

சூரியகாந்தி, பூசணி, ஆளி விதைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள்

வைட்டமின் சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள்

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், பெர்ரி, மொசாம்பி ஆகிய பருவகால பழங்களை சாப்பிடுங்கள். இந்த ப்லாங்க்ள் உங்கள் சருமத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

MOST READ: உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க 'இந்த' ஜூஸை காலையில் குடிச்சா போதுமாம்...!

நட்ஸ்கள் மற்றும் உலர்ந்த பழங்களை சாப்பிடுங்கள்

நட்ஸ்கள் மற்றும் உலர்ந்த பழங்களை சாப்பிடுங்கள்

வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள், பாதாம், முந்திரி, திராட்சை, அத்தி ஆகியவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பொதுவாக இவை உங்கள் சருமத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.

அதிக புரதத்தை சாப்பிடுங்கள்

அதிக புரதத்தை சாப்பிடுங்கள்

நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் பருப்பு வகைகள், பனீர், டோஃபு ஆகியவற்றை அதிகம் சாப்பிடுங்கள். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் முட்டை, மீன் சாப்பிடுங்கள். அதிக புரோட்டீன் சாப்பிடுவதால் சருமம் இறுக்கமாக இருக்கும். புரதத்தை உணவில் சேர்க்கும்போது கொலாஜன் உருவாக்கம் அதிகம். இதனால், உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to Keep Your Skin Fresh and Beautiful in Tamil

Here we sharing the Beauty Tips to Keep Your Skin Fresh and Beautiful in Tamil.
Desktop Bottom Promotion