For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க அந்தரங்க பகுதியில 'இத' செஞ்சத்துக்கு அப்புறம் நீங்க இந்த விஷயங்கள செய்யக்கூடாதாம் தெரியுமா?

இறுக்கமான பேன்ட் அல்லது உள்ளாடைகளை அணிவது மெழுகு பகுதியைச் சுற்றி அரிப்பு மற்றும் சிவப்பு தடிப்புகளை ஏற்படுத்தும். நீங்கள் வேக்சிங் செய்த பிறகு சில நாட்களுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கும் உள்ளாடைகளை அணிய வேண்டாம்.

|

மென்மையான பளபளப்பான சருமத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆண், பெண் இருவரும் அனைவரையும் ஈர்க்க கூடியது மிருதுவான சருமத்தை கொண்டிருக்க விரும்புகிறார்கள். எவ்வளவு தான் அழகு சாதனங்கள் கொண்டு சருமத்தை அழகுப்படுத்தினாலும், சிறிய அளவில் உள்ள முடிகள் உங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்துவிடும். எனவே அனைவரும் அத்தகைய முடிகளை நீக்கவே விரும்புவர். அதற்காக உபயோகிக்கும் முறை தான், மெழுகினால் முடி நீக்கம் செய்யபடும் வேக்சிங்.

Things not to do after a bikini wax

வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும். ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை பிடிக்கும். வேக்சிங்கை தேர்வுசெய்த பிறகு நாம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி நம்மில் பலர் கவலைப்படுவதில்லை. இது தோல் ஒவ்வாமை, பருக்கள், தடிப்புகள் மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கிறது. ஆதலால், பிகினி வேக்சிங் செய்த பிறகு நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேக்சிங் செய்யப்படும் முறை

வேக்சிங் செய்யப்படும் முறை

சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் மீது, முடி வளரும் திசையை நோக்கி மெழுகை ஒரு மெல்லிய அடுக்காக பரப்ப வேண்டும். பின்பு ஒரு துணி அல்லது காகித துண்டு கொண்டு மெழுகு மேல் அழுத்தி, முடி வளரும் திசைக்கு எதிரான திசையில் மிக விரைவாக நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மெழுகு முடியை பற்றி இழுத்து, முடியை நீக்கி மென்மையான சருமத்தைப் பெற வைக்கிறது.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா உங்களுக்கு வராம தடுக்க நீங்க 'இத' ஃபாலோ பண்ணா போதுமாம்!

இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்

இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்

இறுக்கமான பேன்ட் அல்லது உள்ளாடைகளை அணிவது மெழுகு பகுதியைச் சுற்றி அரிப்பு மற்றும் சிவப்பு தடிப்புகளை ஏற்படுத்தும். நீங்கள் வேக்சிங் செய்த பிறகு சில நாட்களுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கும் உள்ளாடைகளை அணிய வேண்டாம். தளர்வான ஆடைகள் மற்றும் மேக்சிஸைத் தேர்வுசெய்ய வேண்டும். ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸ் சில நாட்களுக்குப் பிறகு அணிந்துகொள்ளுங்கள்.

தீவிரமான உடற்பயிற்சிகளையும் தவிர்க்கவும்

தீவிரமான உடற்பயிற்சிகளையும் தவிர்க்கவும்

நீங்கள் வொர்க்அவுட்டை செய்யும்போது உங்களுக்கு அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறதா? அப்படியென்றால், இது தோல் எரிச்சல் மற்றும் தடிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் வேக்சிங் செய்த சில நாட்கள் வரை தீவிர பயிற்சிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் வழக்கமான பயிற்சி அமர்வில் இருந்து ஓய்வெடுக்கக்கூடிய நேரம் இது.

முதல் இரண்டு நாட்களுக்கு உடலுறவைத் தவிர்க்கவும்

முதல் இரண்டு நாட்களுக்கு உடலுறவைத் தவிர்க்கவும்

உங்கள் அந்தரங்க பகுதியில் வேக்சிங் செய்த முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உடலுறவில் ஈடுபட முயற்சி செய்ய வேண்டாம். ஏனெனில், செக்ஸ் உராய்வுக்கு வழிவகுக்கிறது மற்றும் சாஃபிங்கை ஏற்படுத்துகிறது. இது உங்கள் அந்தரங்கப்பகுதியில் வலியையும், மென்மையான தோலைச் சுற்றி சிவப்பு தடிப்புகளையும் ஏற்படுத்தும்.

MOST READ: கொரோனா வராம தடுக்க உங்க நோயெதிர்ப்பு சக்தியை இந்த ஈஸியான வழிகள் மூலம் எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா?

சோப்பு அல்லது பாடி வாஷை தவிர்க்கவும்

சோப்பு அல்லது பாடி வாஷை தவிர்க்கவும்

மணம் கொண்ட சோப்புகள் மற்றும் பாடி வாஷ் ஆகியவை ரசாயனங்களைக் கொண்டுள்ளன. அவை உங்கள் அந்தரங்கப்பகுதியில் பயன்படுத்தும்போது, சருமத்தில் சிவந்து அல்லது அரிப்பு ஏற்படக்கூடும். அதற்கு பதிலாக தேயிலை மர எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்தவும்.

சூடான குளியல் எடுக்க வேண்டாம்

சூடான குளியல் எடுக்க வேண்டாம்

சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் நீங்கள் குளிக்கும்போது, உங்கள் அந்தரப்பகுதியிலும் சூடான நீர் பயன்படுத்துவீர்கள். இதனால், புதிதாக அகற்றப்பட்ட முடியைச் சுற்றி பருக்கள் அல்லது சிவப்பு தடிப்புகள் ஏற்படலாம். வேக்சிங் செய்த சில நாட்களுக்கு பிறகு குளிர் அல்லது மந்தமான தண்ணீரில் குளிக்க அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things not to do after a bikini wax

Here we are talking about things not to do after a bikini wax.
Story first published: Thursday, May 6, 2021, 19:06 [IST]
Desktop Bottom Promotion