Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உங்க சருமத்தை பராமரிக்க இந்த கிச்சன் பொருட்களை ஒருபோதும் சேர்க்க கூடாதாம்... ஏன் தெரியுமா?
எலுமிச்சையை சரியான கவனிப்பு இல்லாமல் பயன்படுத்தினால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதாலும் ஆன்டி-ஆக்ஸிடேட்டிவ் பண்புகள் இருப்பதாலும் சருமத்தை பிரகாசமாக்க உதவும்
சமீபகாலமாக இயற்கை வைத்தியம் மற்றும் பாரமப்பரிய வைத்திய முறைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இயற்கை வழிகளில் சரும பராமரிப்பு முறைகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அதில் பலர் பாரம்பரிய வைத்தியத்திற்காக தங்கள் சமையலறை அலமாரிகளை நாடுகிறார்கள். ஆனால் அனைத்து இயற்கை பொருட்களும் உங்கள் சருமத்திற்கு நல்லதல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவை இயற்கையாக இருப்பதால் அவை பாதுகாப்பானவை என்று அர்த்தமல்ல.

உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப நீங்கள் தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், உங்கள் சரும பராமரிப்பு வழக்கத்தில் தவிர்க்க வேண்டிய சில இயற்கை பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

தோல் பராமரிப்பு பொருட்கள்
ஒவ்வொரு இயற்கை மூலப்பொருளும் ஒரே மாதிரியாக இருக்காது. சமையலறைப் பொருட்கள் 'இயற்கையாக' இருப்பதால், சந்தையில் கிடைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை விட சருமத்திற்குச் சிறப்பாகச் செயல்படும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள சமையலறை பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் தோல் வகையை அறிந்து கொள்வது அவசியம்.

எலுமிச்சை
எலுமிச்சையை சரியான கவனிப்பு இல்லாமல் பயன்படுத்தினால் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதாலும் ஆன்டி-ஆக்ஸிடேட்டிவ் பண்புகள் இருப்பதாலும் சருமத்தை பிரகாசமாக்க உதவும். இருப்பினும், அதிகப்படியான எலுமிச்சை சாற்றை உங்கள் தோலில் பயன்படுத்தினால் தோல் எரிச்சல், சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் வறட்சி ஏற்படலாம். உங்கள் சருமத்தில் எலுமிச்சையைப் பயன்படுத்திய பிறகு வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். அது உங்கள் சருமத்தில் அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்.

வினிகர்
வினிகரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தபோதிலும், ஆப்பிள் சைடர் வினிகர் சருமத்தின் pH அளவை மாற்றும். இது உங்கள் சருமத்தை அதிகமாக உரிக்கலாம். வினிகரை சருமத்தில் அதிகமாக பயன்படுத்தினால் எரிச்சல் மற்றும் வறட்சி ஏற்படும். நீங்கள் காண்டாக்ட் டெர்மடிடிஸ் அல்லது அடோபிக் டெர்மடிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தோல் பராமரிப்பு முறையிலிருந்து வினிகரை முற்றிலும் தவிர்ப்பது முக்கியம்.

தேங்காய் எண்ணெய்
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் நீங்கள் எண்ணெய்களைப் பயன்படுத்தக்கூடாது, அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வறண்ட மற்றும் நீரிழப்பு ஏற்படும் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க நீங்கள் எண்ணெய்களை குறைவாகப் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் சருமம் எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புக்குள்ளானால், நீங்கள் அதிக சரும பாதிப்பை பெறுவீர்கள். மேலும், இது மோசமான முகப்பரு வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

பற்பசை
பற்பசை முகப்பருவை குணப்படுத்தும் என்று கூறப்பட்டாலும், அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பற்பசை பல ஆண்டுகளாக ஒரு ஸ்பாட் சிகிச்சையாக சந்தைப்படுத்தப்பட்டாலும், அது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமத்தில் உள்ள முகப்பருவை மேலும் மோசமாக்கும் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு தோலில் புண்ணை ஏற்படுத்தலாம். ஆதலால், சரும பாதுகாப்பு குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சமையல் சோடா
அதிக கார பண்புகளைக் கொண்ட பேக்கிங் சோடா, ஆசிட் மேன்டில் எனப்படும் சருமத்தின் பாதுகாப்பு எண்ணெய் அடுக்கை பாதிக்கிறது. மேலும், அதன் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தை தோலிலிலிருந்து நீக்கி, சரும பாதுகாப்பு அடுக்கை சீர்குலைக்கிறது. இதன் விளைவாக சருமத்தில் கொப்புளங்கள், வறட்சி, சிவத்தல் மற்றும் வீக்கம் ஆகியவற்றால் உங்கள் தோல் மேலும் எரிச்சலடையக்கூடும்.

இறுதிக்குறிப்பு
உங்கள் தாய் மற்றும் பாட்டிக்கு ஒரு குறிப்பிட்ட குடும்பச் சருமப் பராமரிப்புச் செய்முறை இருந்திருக்கலாம், இருப்பினும், நீங்கள் நவீன வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், அதற்கான பலன்களை நீங்கள் அடைய முடியாது. உங்கள் தோல் வகையை மதிப்பிடுவதற்கு தோல் பராமரிப்பு நிபுணரை அணுகுவது கட்டாயமாகும். இது உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப சரும பராமரிப்பு குறிப்புகளை பின்பற்ற உதவும்.



Click it and Unblock the Notifications