Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
டாட்டூ கலாச்சாரம் இன்றைய தலைமுறையினர் இடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு விருப்பமான டிசைனை உங்கள் உடம்பில் எங்கே வேண்டுமானாலும் பச்சை குத்திக் கொள்ளலாம்
செலிபிரிட்டிகள் முதல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வரை எல்லாரும் விரும்பி வரைவது இந்த டாட்டூ தான். இந்த டாட்டூ கலாச்சாரம் இன்றைய தலைமுறையினர் இடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு விருப்பமான டிசைனை உங்கள் உடம்பில் எங்கே வேண்டுமானாலும் பச்சை குத்திக் கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சம். ஆனால் இதை குத்திக் கொள்வதை விட அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்கள் குறித்து என்றாவது நீங்கள் கவலைப்பட்டது உண்டா?

இந்த டாட்டூவை உங்கள் தோலில் வரையும் போது சிறிய ஊசியில் மை நிரப்பி அதைக் கொண்டு மெதுவாக வரைவார்கள். போடும் போது அந்தளவுக்கு வலி தெரியாது ஆனால் போட்டு முடித்த பிறகு சருமத்தில் எரிச்சல் உண்டாக வாய்ப்புள்ளது. மேலும் சரியான பராமரிப்பு இல்லையென்றால் சரும தொற்று ஏற்பட அதிகமாகவே வாய்ப்புள்ளது. எனவே இதை ஒழுங்காக பராமரித்து சீக்கிரம் ஆற விட வேண்டும். அதற்குத் தான் நாங்கள் சில டிப்ஸ்களை இங்கே கூற உள்ளோம்.

பராமரிப்பு வழிகள்
* எப்பொழுதும் நம்பகமான டாட்டூ ஆர்டிஸ்டிடம் செல்லுங்கள். நல்ல சுகாதாரமான டாட்டூ பார்லரை அணுகுவது சிறந்தது. இது உங்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்கும்
* அதே மாதிரி டாட்டூ குத்த பயன்படுத்தும் ஊசி புதியதா, பாக்கெட்டில் இருந்து புதிதாக எடுக்கப்படுகிறதா என்பதை சோதித்து கொள்ளுங்கள்.
* டாட்டூ போட்ட பிறகு அதன் மேல் பெட்ரோலியம் ஜெல்லி யை தடவி பேண்டேஜ் போடுகிறார்களா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.
* பேண்டேஜை உடனே ரிமூவ் செய்ய கூடாது. உங்கள் டாட்டூ ஆர்டிஸ்ட் சொல்லும் வரை அப்படியே வைத்து இருங்கள்.
* பிளாஸ்டிக் பேண்டேஜை ரிமூவ் செய்த பிறகு மைல்டு ஆன்டி பயாடிக் சோப்பு போட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து துடையுங்கள்.
* புண் ஆறும் வரைக்கும் அப்பகுதியைத் தேய்க்க கூடாது. ஏனெனில் உங்கள் சருமம் சென்ஸ்டிவ் ஆக இருந்தால் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
* ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஆன்டி பயாடிக் களிம்புகளை அப்ளே செய்து வாருங்கள். இது புண்கள் சீக்கிரம் ஆற உதவி செய்யும்.
* டாட்டூ பகுதியை சாதாரண சோப்பு கொண்டு கழுவ கூடாது. மைல்டு மில்க் சோப்பு மட்டுமே பயன்படுத்துங்கள். நுரையை கொண்டு சுத்தம் செய்வது போதுமானது.

டாட்டூ ஆறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
* நீங்கள் டாட்டூ போட்ட பிறகு சூரிய ஒளியில் சென்றால் ஒரு காட்டன் துணியால் புண் ஆறும் வரை மறைத்து செல்லுங்கள். இது உங்கள் சருமத்தில் நேரடியாக சூரிய ஒளி படுவதை தடுக்கும்.
* புண்கள் ஆறாத சமயத்தில் அதன் மேல் சன்ஸ்க்ரீன் லோசனை பயன்படுத்தாதீர்கள்.
* டாட்டூ புண்கள் முழுவதுமாக ஆறுவதற்கு முன் அதன் தோலை பிய்த்து எடுக்காதீர்கள்
* புண் கொஞ்சம் கொஞ்சமாக ஆறும் போது அரிப்பு ஏற்படும். அவசரப்பட்டு சொறிய வேண்டாம்
* டாட்டூ பகுதியில் காற்று புகாதவாறு இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள். இது மேலும் தொற்றுகளை உண்டாக்கும்.
* புண் ஆறும் வரை தண்ணீரில் விளையாட வேண்டாம்
* எதாவது தொற்றோ, கொப்புளமோ, வலியோ ஏற்பட்டால் உடனே தோல் மருத்துவரை அணுகுங்கள்

பக்க விளைவுகள்
பொதுவாக டாட்டூ மை உங்களுக்கு எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. ரொம்ப சென்ஸ்டிவ் ஆன சருமம் உடையவர்கள் மட்டுமே கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். மற்றபடி நீங்கள் உங்கள் சருமத்தை சரியாக பராமரித்தாலே போதுமானது.

சரும நோய்த் தொற்று
உங்களுக்கு பயன்படுத்தப்படும் டாட்டூ ஊசி முறையாக ஸ்டெர்லைஸ் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் இரத்தத்தில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு டாட்டூ போட்ட பிறகு தேவையில்லாத அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்

அலர்ஜி
ஒரு வேளை டாட்டூ மை உங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் மட்டுமே தோலில் அலற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
மேற்கண்ட டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இனி டாட்டூ போடப்படும் போது இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் கொண்டு செயல்படுங்கள்.



Click it and Unblock the Notifications