For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகம் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை நைட் டைம்-ல போடுங்க...

உங்கள் முகம் பொலிவிழந்து அசிங்கமாக காட்சியளிப்பது போல் உணர்ந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்திற்கு பயன்படுத்துங்கள்.

|

எப்போதும் அழகாக இருக்க வேண்டுமானால், சருமத்தில் சரியான பராமரிப்புக்களை தவறாமல் கொடுக்க வேண்டும். அதுவும் காலநிலை மாறுவதற்கு ஏற்ப நாம் நமது சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்து வர வேண்டும். சரும பராமரிப்பு என்று வரும் போது, பலரும் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதை விட, இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பது தான் நல்லது.

Natural Face Masks That Will Make The Face Shiny And Fair

நீங்கள் உங்கள் முகம் பொலிவிழந்து அசிங்கமாக காட்சியளிப்பது போல் உணர்ந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்திற்கு பயன்படுத்துங்கள். இதனால் முகம் பளிச்சென்று பொலிவோடும், வெள்ளையாகவும் மாறி காட்சியளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் மற்றும் குங்குமப்பூ

மஞ்சள் மற்றும் குங்குமப்பூ

மஞ்சள் பொலிவிழந்த சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும். மறுபுறம், குங்குமப்பூ சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் குங்குமப்பூவை எடுத்து, பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

தேன் சருமத்தை நீரேற்றத்துடனும், ஊட்டமளித்து அழகாகவும் வைத்துக் கொள்ளும். அதேப் போல் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது முகத்தை பொலிவாக்கும். அதற்கு ஒரு பௌலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு 10 நிமிடம் ஊற வைத்து நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா ஸ்கரப்

பேக்கிங் சோடா ஸ்கரப்

பேக்கிங் சோடா ஒரு நல்ல எக்ஸ்போலியேட்டர். இது சருமத்துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்கும். இதனால் கரும்புள்ளி பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அதோடு இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான கருமையைப் போக்க உதவும். அதற்கு கருமையாக இருக்கும் பகுதியை நீரில் நனைத்து, பேக்கிங் சோடா பயன்படுத்தி அப்பகுதியை மென்மையாக மசாஜ் செள்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவி, நன்கு உலர்த்திய பின் அப்பகுதியில் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். இதேப் போல் வாரத்திற்கு ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி மற்றும் நேச்சுரல் AHA உள்ளது. இந்த ஆரஞ்சு தோலை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை ஐஸ் க்யூம் ட்ரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து கழுவி வந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Face Masks That Will Make The Face Shiny And Fair

Here are some natural face masks that will make the face shiny and fair. Read on...
Story first published: Wednesday, April 6, 2022, 19:32 [IST]
Desktop Bottom Promotion