Just In
- 7 hrs ago
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 23 hrs ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- 24 hrs ago
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
Don't Miss
- Sports
இவ்ளோ மோசமான பிட்ச்சா? போட்டியே வேண்டாம்.. புகழ்பெற்ற மைதானத்தில் நடந்த பரபர சம்பவம்!
- Movies
கமல் போஸ்டர் மீது சாணியடித்த விவகாரம்.. தவறாக பேசவில்லை.. திசை திருப்புகின்றனர்.. லாரன்ஸ் விளக்கம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- News
மண்டைக்கு ஏறிய கோபம்.. கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொன்ற மனைவி.. கைது!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லிப்ஸ்டிக் பயன்படுத்தினா உடனே அழிஞ்சிருதா அப்போ லிப் ஸ்டெய்ன் யூஸ் பண்ணுங்க.
நாம் எல்லாரும் அதிகமாகப் பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களில் ஒன்று லிப்ஸ்டிக் தான். மேக்கப் விரும்பாத பெண்களாக இருந்தாலும் சரி விரும்புவார்களாக இருந்தாலும் சரி அவர்களிடத்தில் கண்டிப்பாக லிப்ஸ்டிக் மட்டுமாவது இருக்கும். நம் வெளியில் செல்லும் போது அழகாகக் கிளம்பி விட்டு உதடுகளை மட்டும் அலங்கரிக்காமலிருந்தால் அது முகத்தின் அழகையே கெடுத்து விடும்.
எனவே லிப்ஸ்டிக்க்கு பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் சில பெண்கள் லிப்ஸ்டிக் கடைகளையே வீட்டில் கொண்டு உள்ளார்கள். ஆனால் லிப்ஸ்டிக் ஒரு நாள் முழுவதும் உங்கள் உதட்டில் இருக்குமென்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை. எனவே உங்களுக்காக ஒரு நல்ல தீர்வை வழங்க லிப் ஸ்டெய்ன் உதவும்.

லிப் ஸ்டெய்ன்
லிப் ஸ்டெய்ன் என்பது உங்கள் உதடுகளில் எப்போதும் ஒட்டிக்கொள்ளும் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பளபளப்பாகவும் மற்றும் நீண்ட நேரம் உதடுகளில் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் கொண்டுள்ளது. லிப் ஸ்டெய்ன் லிக்விடு மற்றும் ஜெல் வடிவத்தில் கிடைப்பதோடு வாட்டர் ப்ரூப் மற்றும் ஸ்மட்ஜ் ஃப்ரூப்பை கொண்டுள்ளது. உங்களுக்கு எந்த வடிவில் இருப்பது வேண்டுமோ அவற்றை வாங்கி பயன்படுத்துக் கொள்ளலாம்.
MOST READ: பல் துலக்க யூஸ் பண்ண கரித்துள்ள பேஷ் மாஸ்க் போடுங்க முகம் பளபளக்கும்.

லிப்ஸ்டிக்
நீங்கள் லிப்ஸ்டிக் அணியும் போது அவை ஒரு நாள் முழுவதும் உங்கள் உதட்டில் இருக்காது. அத்துடன் லிப்ஸ்டிக் நீங்கள் சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்கும் போதும் அழிவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் அடிக்கடி லிப்ஸ்டிக் உள்ளதா இல்லையா என்பதைக் கவனித்து மறுபடியும் லிப்ஸ்டிக் போட வேண்டி இருக்கும். ஆனால் லிப் ஸ்டெய்ன் அவ்வாறு இல்லை நீங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை போட்டால் போதும் தண்ணீர் குடித்தாலோ சாப்பிட்டாலோ எப்போதும் அழியாது. மேலும் இது வாட்டர் ப்ரூப் மற்றும் ஸ்மாட்ஜ் ப்ரூப் கொண்டிருப்பதால் அடிக்கடி நீங்கள் போடவோ அல்லது கவனிக்க வேண்டிய அவசியமோ இல்லை. அத்துடன் லிப் ஸ்டைன் பிங்க், பீச் மற்றும் ரெட் ஆகிய மூன்று நிறங்களில் மட்டும் தான் கிடைக்கிறது. ஏனெனில் இது உங்கள் உதட்டிற்கு இயற்கையான வண்ணத்தைக் கொடுக்க முயல்கிறது. இதில் முக்கியமான ஒன்று லிப்ஸ்டிக் என்பது உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடனும் மற்றும் மென்மையாகவும் வைக்கும். ஆனால் லிப் ஸ்டெய்ன்களில் ஆல்கஹால் கலந்து இருப்பதால் உங்கள் உதடுகளை வறண்டு போகச் செய்யும் எனவே லிப் ஸ்டைன் உபயோகிக்கும் போது சற்று கவனமாக இருங்கள்.

எக்ஸ்போலியேட்
லிப் ஸ்டெய்ன் உபயோகிக்கும் போது உங்கள் உதடுகள் வறண்டு போகக்கூடும் எனவே அவற்றைத் தடுப்பதற்காக முதலில் உங்கள் உதடுகளைத் தயார் செய்ய வேண்டும். உங்கள் உதடுகளை எக்ஸ்போலியேட் செய்யும் போது இறந்த செல்களை புத்துணர்ச்சி ஊட்டுவதோடு மட்டுமல்லாமல் உதடுகளை மென்மையானதாகவும் மாற்றுகிறது. உதடுகளை எக்ஸ்போலியேட் செய்ய ஒரு பிரஷ்சினை பயன்படுத்துங்கள்.

ஈரப்பதமாக்குதல்
உங்கள் உதடுகளை எக்ஸ்போலியேட் செய்த பிறகு ஈரப்பதமாக்குங்கள். அதாவது உதடுகளில் மாய்சரைசர் பயன்படுத்துங்கள். லிப் ஸ்டெய்ன் அப்ளை செய்வதற்கு முன்பு கண்டிப்பான முறையில் லிப் பாம் அப்ளை செய்யுங்கள். இவை உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்கி வறண்டு விடாமல் பாதுகாக்கும்.

லிப் ஸ்டெய்ன்
இப்போது உங்கள் உதடுகள் லிப் ஸ்டெய்ன் அப்ளை செய்வதற்குத் தயாராகிவிட்டன. லிப் ஸ்டாலின் எடுத்து உதடுகளில் அப்ளை செய்து இரண்டு உதடுகளையும் சேர்த்துத் தேய்த்துச் சரி செய்யுங்கள் பின்பு டிஸ்யூ பேப்பர் எடுத்து எக்ஸ்ட்ரா உள்ள ஸ்டைன்களை துடையுங்கள். இவை அனைத்தையும் நீங்கள் விரைவில் செய்ய வேண்டும். ஏனெனில் லிப் ஸ்டைன் விரைவில் காய்ந்து விடும் தன்மையைக் கொண்டுள்ளது.

நிறம்
உங்கள் உதடுகளுக்கு ஒரு லேயர் போதவில்லை என்றால் மற்றொரு லேயர் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த நேரம் போதும் என்ற வரை நீங்கள் அப்ளை செய்து கொள்ளலாம்.

பளபளப்பு
லிப் ஸ்டெய்ன் உடனடியாக காய்ந்து விடும் தன்மையை கொண்டு இருப்பதால் உதடுகள் மேட் போல இருக்கும். உங்களுக்குப் பளபளக்கும் தன்மை வேண்டுமென்றால் அதற்கு மேல் ஒரு க்ளோஸி வாங்கி பயன்படுத்திப் பளபளப்பான ரோஸி மற்றும் ஜூஸி உதடுகளைப் பெறுங்கள்.
MOST READ: பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா? எலுமிச்சை போதும்.

அகற்றுதல்
லிப் ஸ்டெய்ன் அகற்றுவதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். மிக எளிமையான வழியில் லிப் ஸ்டெய்னை அகற்றி விடலாம். சிறிதளவு வாசலின் அல்லது லிப் பாம் எடுத்து உதடுகளின் மீது தேய்த்து 2 நிமிடங்கள் விட்டு டிஸ்யூ பேப்பர் கொண்டு துடையுங்கள். லிப் ஸ்டெய்ன் அகன்று விடும். பின்பு லிப் பாம் கொண்டு ஈரப்பதமாக்குங்கள்.