Just In
- 5 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 7 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
Don't Miss
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உங்க கழுத்து அழுக்கு நிறைந்து கருப்பா இருக்கா? இதோ அதைப் போக்கும் எளிய வழிகள்
கழுத்துப் பகுதியில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை தினமும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், கருமையாக இருக்கும் கழுத்து விரைவில் பளிச்சென்று சுத்தமாகவும், வெள்ளையாகவும் மாறும்.
நமது உடலிலேயே கழுத்துப் பகுதியில் உள்ள சருமத்தில் கொலாஜன் அளவு குறைவு மற்றும் அப்பகுதியில் எண்ணெய் சுரப்பிகளும் குறைவு. அதனால் தான் முகத்தை விட கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள், சரும கருமை, வறட்சி மற்றும் கருமையான திட்டுக்கள் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடுகிறது. அழகு என்று வரும் போது முகத்தை தவிர, கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கழுத்துப் பகுதியில் சேரும் அழுக்குகளை அவ்வப்போது நீக்காமல் விட்டுவிட்டால், அது அப்பகுதியில் கருமையான கறைகளாக படிந்து, கழுத்தின் அழகையே கெடுத்துவிடும்.
கழுத்துப் பகுதியில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை தினமும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், கருமையாக இருக்கும் கழுத்து விரைவில் பளிச்சென்று சுத்தமாகவும், வெள்ளையாகவும் மாறும். இப்போது கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி வாய்ந்த இயற்கை வழிகள் என்னவென்பதைக் காண்போம்.
MOST READ: கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் போகமாட்டீங்குதா? இதோ அதைப் போக்கும் வழிகள்.!
பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர்
பேக்கிங் சோடாவில் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதை கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுத்துப் பகுதியை தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கழுத்து நன்கு சுத்தமாகவும், விரைவில் வெள்ளையாகவும் மாறும்.
அரிசி மாவு மற்றும் பால்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவை பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வர நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தக்காளி கூழ்
தக்காளியை துண்டுகளாக்கி, அரைத்து, அந்த கூழை கழுத்துப் பகுதியைச் சுற்றி தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் பத்து நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, கழுத்து அழுக்கின்றி இருக்கும்.
எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள்
ஒரு சிறு பௌலில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து விட்டு, பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்ப வாரத்திற்கு 2-3 முறை செய்து வர கழுத்து சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை
பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுத்து பகுதியில் தடவி மென்மையாக சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி 2-3 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், கழுத்து சுத்தமாக அழுக்கின்றி இருக்கும்.