Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...
பொதுவாக பெண்கள் திருமணமாகி குழந்தை பிறந்த பின், தங்களது இளமையைத் தொலைத்துவிடுவார்கள். ஆனால் கரீனா கபூர் குழந்தை பிறந்த பின்னரும் அழகாக காட்சியளிக்கிறார். மேலும் இவர் பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் தான்
கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே அழைப்பர். இவர் பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்த இவர், 2012 இல் நடிகர் சயிப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளான்.
பொதுவாக பெண்கள் திருமணமாகி குழந்தை பிறந்த பின், தங்களது இளமையைத் தொலைத்துவிடுவார்கள். ஆனால் கரீனா கபூர் குழந்தை பிறந்த பின்னரும் சுருக்கமில்லாத பொலிவான சருமத்துடன் அழகாக காட்சியளிக்கிறார். மேலும் இவர் மற்ற நடிகைகளைப் போல் அடிக்கடி மேக்கப் போடமாட்டார். பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் தான் இருப்பாராம்.

மொத்தத்தில் மேக்கப் போடாமல் அழகாக காட்சியளிக்கும் ஓர் பாலிவுட் நடிகை என்றால் அது கரீனாவாகத் தான் இருக்கும். உங்களுக்கு கரீனா கபூரின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

தண்ணீர்
பாலிவுட் நடிகைகள் அனைவரும் தவறாமல் பின்பற்றும் ஓர் செயல் தான் நீரை அதிகம் குடிப்பது. கரீனாவும் தினமும் குறைந்தது 4-6 பாட்டில் நீரைக் குடிப்பாராம். அதுவும் இவர் மினரல் வாட்டரைக் குடிக்கமாட்டார், சாதாரண நீரைத் தான் குடிப்பாராம். சொல்லப்போனால், அவரது சரும அழகிற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் காரணமே அந்த சாதாரண நீர் தானாம்.

மாய்ஸ்சுரைசர்
நீர் உடலின் உட்பகுதியை வறட்சி அடையாமல் தடுக்கும். அதே சமயம் சருமத்தின் வெளிப்பகுதியை நல்ல மாய்ஸ்சுரைசர் வறட்சி அடையாமல் தடுக்கும். கரீனா கபூர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவாராம். இவர் எங்கு சென்றாலும், தனது கைப்பையில் எப்போதுமே ஒரு மாய்ஸ்சுரைசரை வைத்திருப்பாராம்.

பாதாம் எண்ணெய்
கரீனா கபூரின் ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கிய காரணம் பாதாம் எண்ணெய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோடு, அப்போதெல்லாம் பாதாம் எண்ணெய் கொண்டு தனது சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்வாராம். இந்த பழக்கம் அவரது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தேன் மசாஜ்
தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் கரீனாவைப் போன்று யாரும் தேனை சருமத்திற்கு பயன்படுத்தமாட்டார்கள். இவர் தினமும் தேனைக் கொண்டு சருமம் முழுவதும் தடவி மசாஜ் செய்வாராம். இதனால் தான் மேக்கப் போடாமலும் இவர் அழகாக தெரிவதாகவும் கூறுகிறார்.

நேச்சுரல் ஃபேஸ் பேக்
கரீனா கபூர் இயற்கை பொருட்களை மட்டுமே தங்களது சருமத்திற்கு பயன்படுத்துவாராம். கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு எவ்வித பராமரிப்புக்களையும் கொடுக்கமாட்டாராம். அதிலும் இவர் முகத்திற்கு மூலிகைப் பொருட்களைக் கொண்டு தான் ஃபேஸ் பேக் போடுவாராம். இவர் ஃபேஸ் கிளின்சராக தயிர் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து பயன்படுத்துவாராம். தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கிவிடும்.

உடற்பயிற்சி
கரீனா கபூர் பிரசவத்திற்கு பின் எடையைக் குறைக்க மேற்கொண்ட பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் இவர் தனது பழைய உடலமைப்பைப் பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கரீனா கபூர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கும் காரணமாக இருந்தது உடற்பயிற்சி என்று நம்புகிறார். மேலும் இவர் எப்போதுமே தனது உடற்பயிற்சியை செய்யும் பழக்கத்தை கைவிட்டதே இல்லையாம்.

கரீனாவின் சரும பராமரிப்பில் இருந்து பின்பற்ற வேண்டியவைகள்:
* தினமும் குறைந்தது 6-8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.
* குறைந்த அளவில் மேக்கப் போடுவதோடு, தூங்குவதற்கு முன் மேக்கப் முழுவதையும் நீக்க மறக்க வேண்டாம்.
* சருமத்தைப் பராமரிக்க ஹெர்பல் பொருட்களை மட்டும் பயன்படுத்தவும்.
* சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக நேச்சுரல் ஃபேஸ் பேக் அல்லது மாஸ்க் பயன்படுத்தவும்.



Click it and Unblock the Notifications











