Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
தீபாவளிக்கு ஷாப்பிங் செஞ்சே களைச்சு போய்டீங்களா? உங்களை பிரஷ்ஷாக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க...
திருவிழா, பண்டிகை, திருமண விழா இப்படி வந்துவிட்டாலே போதும் வேலையும் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் களைப்பும் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் முகத்தை பிரஷ்ஷாக வைத்திருப்பது என்பது கடினம்
திருவிழா, பண்டிகை, திருமண விழா இப்படி வந்துவிட்டாலே போதும் வேலையும் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் களைப்பும் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான நேரங்களில் நம் முகத்தை பிரஷ்ஷாக வைத்திருப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கும். ஓடி ஓடி வேலை செய்யும் நேரத்தில் சரும பராமரிப்புக்கு என்று நேரம் ஒதுக்குவது முடியாத காரியம்.

அந்த நேரத்தில் ப்யூட்டி பார்லர், சலூன் நிலையம் என்று தேடி அலைஞ்சுகிட்டு இருக்க முடியாது. அதற்காகத் தான் உங்களை நாள்தோறும் ப்ரஷ்ஷாக வைப்பதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை தருகிறோம். அதுவும் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே எப்படி பொலிவை அதிகரிப்பது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி அழகாக மாறுங்கள்.

எண்ணெய் சருமம் நீங்க...
தேவையான பொருட்கள்:
* 4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
* 2 டேபிள் ஸ்பூன் தேன்
* 3 டேபிள் ஸ்பூன் சுண்டக்காய்ச்சிய பால்
* 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி கொள்ளுங்கள். பிறகு அதை ஆற வைத்து கொள்ளுங்கள்.
* அதில் ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* அதில் கோதுமை மாவை கலந்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
* இப்பொழுது முகத்தை கழுவி விட்டு, முகத்தில் இந்த மாஸ்க்கை தடவுங்கள்.
* நன்கு உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கரும்புள்ளிகளைப் போக்க...
தேவையான பொருட்கள்:
* 2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
* 3 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம்

பயன்படுத்தும் முறை:
* ஒரு பெளலை எடுத்து அதில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள்
* அதனுடன் க்ரீம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்
* பிறகு அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்
* இதை முகத்தில் தடவி காய விடுங்கள்
* பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை தினசரி செய்து வந்தால் இரண்டே வாரங்களில் நல்ல பலனை நீங்கள் காணலாம்.

சென்ஸிட்டிவ் மற்றும் அரிப்பான சருமம்...
தேவையான பொருட்கள்:
* 4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
*2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி
* 2-3 டேபிள் ஸ்பூன் பால்
* 2 டேபிள் ஸ்பூன் தேன்
* 1 கப் தண்ணீர்
* 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் இதழ்கள்
* 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

பயன்படுத்தும் முறை:
* ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதில் ரோஜாப் பூ இதழ்கள், ஆரஞ்சு தோல் பொடி சேர்க்கவும். பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
* மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடுபடுத்துங்கள். அதில் தேன் சேர்த்து கொள்ளுங்கள்.
* இதை ஒரு பெளலிற்கு மாற்றி அதில் 2 டீ ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* அதில் கோதுமை மாவை சேர்த்து பேஸ்டாக்கி கொள்ளவும்
* இதை முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் காய விடவும்
* பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

கருமையை போக்குதல்...
தேவையான பொருட்கள்:
* 4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
* 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர்

பயன்படுத்தும் முறை:
* இப்பொழுது இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்
* நல்லா கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்
* இதை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் காய வைக்கவும்.
* பிறகு குளிர்ந்த தண்ணீரை கொண்டு கழுவுங்கள். சருமத்தில் உள்ள கருமை நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.
மேற்கண்ட 4 கோதுமை பேஸ் மாஸ்க்களும் உங்கள் முகத்திற்கு சிறந்த நன்மையை அளிக்கக் கூடியது. மேலும் இதில் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. முயற்சி செய்து பாருங்க புதுப்பொலிவு பெறுங்க.



Click it and Unblock the Notifications
