Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்க கழுத்து கருப்பா இருக்கா? இத வாரத்துக்கு 3 முறை யூஸ் பண்ணுங்க.. வெள்ளையாயிடும்...
கீழே கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் ஒருசில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் கழுத்துப் பகுதி கருப்பாக அசிங்கமாக உள்ளதா? நிறைய பேருக்கு உடலின் மற்ற பகுதிகளை விட கழுத்துப் பகுதி சற்று கருப்பாக இருக்கும். சில சமயங்களில் கழுத்துப்பகுதி கருப்பாக இருப்பதற்கு ஹார்மோன்கள் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். சிலருக்கு கழுத்துப் பகுதியில் உள்ள மடிப்புக்களில் அழுக்குகள் அதிகம் சேர்ந்தாலும் கருப்பாக காட்சியளிக்கும். இப்படி அழுக்குகளால் கருமையான கழுத்தை நமது வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே போக்கலாம்.

உங்கள் கழுத்தும் கருப்பாக இருந்தால், அந்த இயற்கை வழிகளை தினமும் பயன்படுத்தி வந்தால் விரைவில் அந்த கருமையைப் போக்கலாம். கீழே கழுத்துப் பகுதியில் உள்ள கருமையைப் போக்கும் ஒருசில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்
சமையலறையில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் கடலை மாவு. இந்த கடலை மாவு சருமத்தில் உள்ள கருமையை போக்க மற்றும் சரும அழகை மேம்படுத்த பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கடலை ஒரு டீஸ்பூன் எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள கழுத்துப் பகுதியில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை காணாமல் போகும்.

தேன் மற்றும் எலுமிச்சை
கழுத்தில் உள்ள கருமையைப் போக்க தேன் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தலாம். அதற்கு எலுமிச்சை சாற்றியில் சிறிது தேனை சேர்த்து கலந்து, கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்துப் பகுதி பளிச்சென்று அழகாக காட்சியளிக்கும்.

தயிர்
ஆம், நமது வீட்டு சமையலறையில் உள்ள தயிர் கூட சரும கருமையைப் போக்குவதில் சிறந்தது. இதற்கு தயிரில் உள்ள இயற்கை நொதிகள் தான் காரணம். அந்த தயிருடன் அசிட்டிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை சாற்றினை சேர்த்து பயன்படுத்தும் போது இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தயிருடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கு சாற்றில் சரும நிறத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே அந்த உருளைக்கிழங்கு சாற்றினை கருமையாக இருக்கும் கழுத்துப் பகுதியில் தடவி 10-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.

பப்பாளி மற்றும் தயிர்
கழுத்தில் உள்ள அழுக்கை நீக்க பப்பாளி காய் மற்றும் தயிரைப் பயன்படுத்தினால் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு பப்பாளி காயை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கழுத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய கழுத்தில் உள்ள கருமை விரைவில் நீங்கும்.



Click it and Unblock the Notifications