For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்தத்தை பெற வைக்கும் ஈர்க்கும் உதடுகளுக்கான லிப் ஸ்க்ரப்

உங்கள் உதடுகளை நீங்கள் ஸ்க்ரப் செய்து மாற்றத்தை உணர்ந்து இருக்கிறீர்களா? பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே உதடுகளை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு.

|

உங்கள் உதடுகளை நீங்கள் ஸ்க்ரப் செய்து மாற்றத்தை உணர்ந்து இருக்கிறீர்களா? பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்குமே உதடுகளை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே உதடுகளை ஸ்க்ரப் செய்து மென்மையான மற்றும் அழகான உதடுகளாக மாற்ற முடியும். இந்த முறையை நீங்கள் 5 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கலாம்.

DIY Sugar Lip Scrub With Honey

ஸ்க்ரப் செய்வதினால் குளிர்காலத்திலும் உங்கள் உதடுகளை நீண்ட நேரத்திற்கு மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைக்க முடியும். எனவே வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு லிப் ஸ்க்ரப் தயாரித்து உதடுகளின் அழகை மெருகேற்றுவது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் சர்க்கரை

தேன் மற்றும் சர்க்கரை

சிறிதளவு தேன் அதனுடன் சர்க்கரை மற்றும் பாதாம் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கும் மற்றும் இறந்த சரும செல்களை புத்துயிர் பெறச் செய்வதற்கும் உதவும். தேவையான பொருட்களைக் கொண்டு எவ்வாறு லிப் ஸ்க்ரப் தயாரிப்பது மற்றும் எவ்வாறு உதடுகளில் பயன்படுத்துவது என்பதை முதலில் அறிந்து கொள்ளலாம்.

இரண்டு தேக்கரண்டியளவு சர்க்கரை, ஒரு தேக்கரண்டியளவு தேன் மற்றும் ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய் அனைத்தையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பேஸ்ட் ஆகக் கலக்கிக் கொள்ளுங்கள். இதனை கை விரல்களில் எடுத்து உதடுகளில் தடவி மசாஜ் செய்யுங்கள். இந்த கலவையின் சுவை மிகவும் நன்றாக இருப்பதால் உங்களுக்குச் சாப்பிட ஆசை வரும். உதடுகளில் நன்றாக மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு லிப்-பாம் பயன்படுத்துங்கள்.

Most Read: உங்க உதட எப்படி சிவப்பா பளபளப்பா மாத்துறதுனு தெரிலயா? இத பாருங்க.

ஒரு தேக்கரண்டியளவு தேன்

ஒரு தேக்கரண்டியளவு தேன்

தேன் என்பது உதட்டிற்கு சிகிச்சையளிக்க உதவும் ஒரு மருந்தாகும். இது காற்றிலிருந்து ஈரப்பதத்தினை எடுத்து உலர்ந்த மற்றும் வெடித்த உதடுகளைச் சரி செய்யும். இது அதிகளவில் ஆண்டி ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளதால் ஆண்டிசெப்டிக் விளைவு அல்லது சிறிய வெட்டுக்கள் அல்லது தீக்காயங்களைக் குணப்படுத்தும். மேலும் எரிச்சலூட்டும் உதடுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

இரண்டு தேக்கரண்டியளவு சர்க்கரை

இரண்டு தேக்கரண்டியளவு சர்க்கரை

சர்க்கரை உங்கள் உணவில் சேர்ப்பது போலவே அழகுக் குறிப்புகளிலும் சேர்க்கலாம். சர்க்கரை நமது சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஒன்றாகும். இவை முகம் மற்றும் உதடுகளின் அழகை மெருகூட்டுவதில் முக்கிய பங்கு வைக்கின்றன. கச்சா சர்க்கரை, பழுப்பு சர்க்கரை, வழக்கமான வெள்ளை சர்க்கரை இவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

ஒரு தேக்கரண்டியளவு எண்ணெய்

ஒரு தேக்கரண்டியளவு எண்ணெய்

உங்கள் ஸ்க்ரப்பில் ஈரப்பதத்தைச் சேர்க்க ஒரு தேக்கரண்டியளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குச் சிறிதளவு மட்டுமே தேவைப்படுவதால் பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஜொஜோபா எண்ணெய் இவற்றுள் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Most Read: எண்ணெய் சருமத்தினால் சோர்வடைந்து விடீர்களா உங்களுக்கானத் தீர்வு.

மற்ற சில பொருட்கள்

மற்ற சில பொருட்கள்

உங்கள் ஸ்க்ரப்பிணை இன்னும் சிறப்பாக மாற்ற நினைத்தால் அதனுடன் சற்று கூடுதல் பொருட்களைச் சேர்க்கலாம்.

உங்கள் உதடுகள் விரிசல் மற்றும் வலியுடன் இருந்தால் தயார் செய்த ஸ்க்ரப்வுடன் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை எண்ணெயைச் சேர்த்துப் பயன்படுத்துங்கள்.

ஆக்ஸிஜனேற்றங்களை சேர்க்க விரும்பினால் அதனுடன் கோகோ பவுடர் மற்றும் ஒரு துளி சாக்லேட் சுவையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஸ்க்ரப்பை நீங்கள் உண்ண விருப்பினால் அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணிலா சாறு சேர்த்துச் சுவையுங்கள். யம்மி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Sugar Lip Scrub With Honey

A lip scrub combines exfoliation with much needed moisture to to keep lips softer longer, even in cold winter weather. So get on the lip scrub wagon with these homemade recipes and follow with a homemade lip balm. This recipe is a classic! A little honey combined with sugar and almond oil is all you need to moisturize and slough off dead skin.
Story first published: Tuesday, October 8, 2019, 13:13 [IST]
Desktop Bottom Promotion