For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிப்ஸ்டிக் போடாமலே உங்க உதடு பிங்க் கலர்ல மாறணுமா? இத ட்ரை பண்ணுங்க.

|

லிப் ஸ்டெய்ன் என்பது மேக்கப் சாதன பொருட்களின் ஒன்றாகும். இந்த லிப் ஸ்டெய்னை நீங்கள் லிப்ஸ்டிக்குக்கு பதிலாகப் பயன்படுத்தலாம். நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவாராக இருந்தால் லிப்ஸ்டிக் உடனே அழிந்து விடும் அல்லது லிப்ஸ்டிக் அழியாமல் உள்ளதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டியது இருக்கும். எனவே உங்களுக்காகன சிறந்த தீர்வாக லிப் ஸ்டெய்ன் உதவும்.

DIY Lip Stains For Luscious And Rosy Lips

நீங்கள் கடைகளில் லிப் ஸ்டெய்னை வாங்கி பயன்படுத்தும்போது அது உங்கள் உதடுகளை வறண்டு போகச் செய்யும். எனவே நீங்கள் ஈசியாக வீட்டுலையே லிப் ஸ்டெய்னை தயாரித்து பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் பிங்க் நிறத்திலும் வைத்து நீண்ட நேரம் உங்கள் உதடுகளில் லிப் ஸ்டெய்னை நீடிக்கச் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் உங்கள் உதடுகளுக்கு நிறத்தை மட்டும் வழங்காது இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளைப் பாதுகாக்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது. பீஸ் வாக்ஸ் வைட்டமின் ஏ கொண்டுள்ளதால் உங்கள் உதடுகளை வறண்டு விடாமல் பாதுகாக்கவும் ஆலிவ் ஆயில் உதடுகளை மென்மையாக வைக்க உதவும்.1/2 தேக்கரண்டியளவு பீ-வேக்ஸ், ஒரு தேக்கரண்டியளவு பீட்ரூட் கூழ், ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் எடுத்து கிண்ணத்தில் போட்டு இரட்டை பாய்லர் முறையைப் பயன்படுத்தி பீ-வேக்ஸை உருக வைத்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துச் சூடுபடுத்துங்கள். பின்பு அதனை அடுப்பிலிருந்து எடுத்து பீட்ரூட் கூழ் சேர்த்து கலந்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

பீ-வேக்ஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக், லாவெண்டர் எண்ணெய் இவை அனைத்தும் சேர்ந்த கலவை உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு உதவும். தேங்காய் எண்ணெய் உங்கள் உதடுகளை வெடித்து விடாமலும் வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது. லாவெண்டர் எண்ணையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளை ஈரப்பதத்துடன் வைக்கிறது. மேலும் இவை உதடுகளில் கொலாஜன் உற்பத்தியையும் மேம்படுத்துவதால் சோர்வான உங்கள் உதடுகளைச் சரி செய்கிறது. ரெட் லிப்ஸ்டிக் உங்கள் உதட்டினை பிங்க் வண்ணத்தில் மாற்றும்.இரண்டு தேக்கரண்டியளவு பீஸ் வாக்ஸ், ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய், சிறிதளவு ரெட் லிப்ஸ்டிக், ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய், 10 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பீ-வேக்ஸை கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக் ஆகியவற்றை அடுப்பில் வைத்து இரட்டை பாய்லர் முறையைப் பயன்படுத்தி வெப்பப்படுத்துங்கள். அனைத்தும் உருகியவுடன் எடுத்து அதில் லாவெண்டர் எண்ணெய் கலக்கிச் சேகரித்து வைத்துத் தேவைப்படும் போது பயன்படுத்துங்கள்.

லிப்ஸ்டிக் பயன்படுத்தினா உடனே அழிஞ்சிருதா அப்போ லிப் ஸ்டெய்ன் யூஸ் பண்ணுங்க

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

பீட்ரூட், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய மூன்றினையும் சேர்த்துப் பயன்படுத்தும் போது உங்கள் உதட்டிற்கு ஈரப்பதத்தினை தருகிறது. ஆலிவ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்களின் வறண்ட உதடுகளை மென்மையாக்க உதவும். தேன் என்பது இயற்கை உமிழ்நீராகச் செயல் படுவதால் உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் வைக்கிறது. ஒரு பீட்ரூட், நான்கு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய், இரண்டு தேக்கரண்டியளவு தேன் எடுத்து பீட்ரூட்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதனை எடுத்து வடிகட்டி பிரிட்ஜில் வைத்து வேண்டும் போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிளாக் பெர்ரி

பிளாக் பெர்ரி

பிளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றும் சேர்த்து நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் உதடுகளுக்கு ஒரு அழகான நிறத்தைத் தரும். பிளாக் பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவை இரண்டும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒன்றாகும். இவை உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்கவும், மென்மையாக்கவும் உதவுகின்றன. 4 முதல் 5 பிளாக் பெர்ரி, 4 முதல் 5 ராஸ்பெர்ரி, ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து பிளாக் பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி இரண்டையும் ஒன்றாகக் கலந்து கூழ் ஆக்கி அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்துச் சூடுபடுத்துங்கள். இப்போது அதனை எடுத்து வடிகட்டி பிரிட்ஜில் வைத்து ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன. எனவே இவை உங்கள் வறண்ட மற்றும் சோர்வான உதட்டினை சரி செய்ய உதவும். அத்துடன் உங்கள் உதடுகளுக்குச் சிவப்பு நிறத்தினை கொடுக்கும். சிறிதளவு மாதுளை, 1/2 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் எடுத்து மாதுளையை நன்றாக அரைத்து வடிகட்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். பின்னர் இந்த கலவையை பிரிட்ஜில் வைத்து வேண்டிய போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion dress actress lipstick
English summary

Amazing DIY Lip Stains For Luscious And Rosy Lips

Lip stains are a fascinating make-up product. Who doesn't want soft and pink lips! A product that gives a rosy tint to our lips and lasts for a longer period seems too good to be true. And although lip stains are an amazing product, it does come with certain drawbacks. The most obvious being that it dries out the lips. don't you worry! Today, we have put together for you 5 amazing DIY lip stains that will make your lips rosy and juicy without making them dry.
Story first published: Wednesday, September 25, 2019, 11:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more