For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உதட எப்படி சிவப்பா பளபளப்பா மாத்துறதுனு தெரிலயா? இத பாருங்க.

எல்லாருக்கும் மென்மையான மற்றும் பிங்க் கலர் உதடுகள் வேண்டும் என்று தான் ஆசை. உங்கள் உதடுகளைப் பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்ளுவதற்கு லிப்-பாம், லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் போன்ற பொருட்கள் உங்கள

|

எல்லாருக்கும் மென்மையான மற்றும் பிங்க் கலர் உதடுகள் வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் எப்படி உதடுகளைப் பராமரித்தாலும் கொண்டாலும் எப்போதும் அது மென்மையாகவும் சிவப்பாகவும் இருப்பதில்லை. உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றினாலும் அவை சற்று நாட்கள் எடுத்துக் கொள்ளும். எனவே கடைகளில் செயற்கையாகக் கிடைக்கும் சில நல்ல மற்றும் உதடுகளுக்குப் பாதுகாப்பான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம்.

Different Lip Products A Woman Can Swear By

உங்கள் உதடுகளைப் பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்ளுவதற்கு லிப்-பாம், லிப்ஸ்டிக் மற்றும் லிப் கிளாஸ் போன்ற பொருட்கள் உங்களுக்கு உதவும். ஒரு மென்மையான, நிறமுள்ள மற்றும் அழகான உதடு உங்களுக்கு ஒரு அழகான தோற்றத்தினை தரும். ஆனால் வெடித்த மற்றும் வறண்ட உதடுகள் உங்களின் அழகைக் கெடுத்து விடும். எனவே எந்த பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் உதடுகளை மென்மையாகப் பளபளப்பாக மாற்றலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்ஸ்டிக்ஸ்

சாப்ஸ்டிக்ஸ்

சாப்ஸ்டிக்ஸ் என்பது தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. சாப்ஸ்டிக்ஸ் பயன்படுத்துவதால் வறண்ட உதடுகளைச் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் லிப்-பாமினையும் பயன்படுத்தலாம். இப்போது கிடைக்கும் லிப் பாம்கள் எஸ்.பி.எஃப் உடன் கிடைக்கின்றன. இந்த எஸ்.பி.எஃப் உங்கள் உதடுகளைச் தீங்கு விளைவிக்கும் சூரியனின் கதிர்களிடமிருந்து பாதுகாத்து உதடுகளை நீரேற்றமாகவும் மென்மையாகவும் வைத்து இருக்க உதவுகிறது.

லிப் பட்டர்

லிப் பட்டர்

பாடி பட்டர் போலவே லிப் பட்டர் உங்கள் உதடுகளுக்கு அற்புதம் செய்யும் ஒன்றாகும். லிப் பட்டர் அதிக அளவில் கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளதால் உங்கள் உதடுகளை நீரேற்றத்துடனும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது. நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது தினமும் லிப் பட்டர் தடவி விட்டு படுகைக்குச் செல்லலாம்.

லிப் கிளாஸ்

லிப் கிளாஸ்

எல்லா பெண்களும் தங்கள் உதடுகள் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைபடுவார்கள். லிப் கிளாஸ் என்பது உங்கள் உதடுகளைப் பளபளப்பாக வைப்பது மட்டும் இல்லாமல் உதடுகளை எப்போதும் ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது. லிப் கிளாஸில் சில வகையான வண்ணங்கள் மற்றும் பிளவோயூர்களில் கிடைக்கிறது. இதில் உங்களுக்குத் தேவையான ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள். ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் லிப் கிளாஸ் பழங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் ஏயெனில் இது உங்கள் உதடுகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

டின்டேட் பாம்

டின்டேட் பாம்

நீங்கள் மேக்கப் விரும்பாத ஒருவராக இருந்தால் டின்டேட் பாம் உங்களுக்கு ஏற்ற ஒன்று தான். இதில் எந்த விதமான கலர் இல்லாமல் இயற்கையாக நுயூடு நிறத்தில் இருப்பதால் உங்கள் உதடுகளின் நிறத்திலேயே காட்சியளிக்கும் மற்றும் ஈரப்பதத்துடன் வைக்கும்.

லிப் ஸ்க்ரப்

லிப் ஸ்க்ரப்

பேஸ் ஸ்க்ரப் மற்றும் பாடி ஸ்க்ரப் ஆகிய இரண்டை போலவே லிப் ஸ்க்ரப் உங்கள் உதடுகளுக்கு மிகவும் சிறந்தது. சிலர் உதடுகளில் பாடி ஸ்க்ரப் பயன்படுத்துகிறார்கள் இது உங்கள் உதடுகளுக்கு எப்போதும் உதவாது. ஆனால் லிப் ஸ்க்ரப் உங்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும் உதடுகளை நீரேற்றத்துடன் மற்றும் மென்மையாகவும் மாற்றுகிறது.

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

எல்லா பெண்களுக்கும் தெரிந்த மற்றும் எல்லா பெண்களும் பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு மேக்கப் சாதனப் பொருள் என்றால் அது லிப்ஸ்டிக் தான். லிப்ஸ்டிக்கள் உங்கள் உதடுகளைக் கவர்ச்சியாக வைக்க உதவும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு லிப்ஸ்டிக் தேர்வு செய்து அதனைப் பயன்படுத்துங்கள்

லிப் ஸ்டெய்ன்

லிப் ஸ்டெய்ன்

உங்களுக்கு லிப்ஸ்டிக் போட்டு சற்று நேரத்திலேயே களைந்து விடுகிறது என்ற பிரச்சனை இருந்தால் நீங்கள் லிப் ஸ்டெய்ன் பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளில் நீண்ட நேரம் அழியாமல் இருக்க உதவுகிறது மேலும் உங்கள் உதடுகளை வண்ணங்களுடன் காட்சியளிக்க வைக்கும்.

லிப் லைனர்

லிப் லைனர்

லிப் லைனர் என்பது உங்கள் உதட்டின் தோற்றத்தை மேலும் அழகாக மாற்ற உதவும் ஒன்றாகும். நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு லிப் லைனர் எடுத்து உதடுகளின் மேல் கோடு வரைந்து விட்டு லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது உங்கள் உதடுகளுக்கு முழுமையான தோற்றத்தினை தரும். லிப் லைனர் வாங்குவதற்கு முன்பு உங்களின் லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ற ஒன்றா என்பதை உறுதி செய்து கொண்டு வாங்குங்கள். இப்போது உங்கள் உதடுகளுக்கு எது சரியான ஒன்றோ அதனைத் தேர்வு செய்து வாங்கி உங்கள் உதடுகளை மென்மையாகவும் மற்றும் பளபளப்பாகவும் மாற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Lip Products A Woman Can Swear By

Each one of us dreams of having luscious and soft lips and hence taking care of the lips with the right products is extremely important. Here, we are presenting to you essential lip products for women, so continue reading. You should take care of your lips just like your face and other parts of the body. We all have loved lip products where lip gloss, lip balm, and lipsticks play a very important role.
Story first published: Tuesday, October 1, 2019, 18:18 [IST]
Desktop Bottom Promotion