For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சன்ஸ்க்ரீன் பற்றி மக்கள் மனதில் இருக்கும் சில தவறான கருத்துக்கள்!

சன்ஸ்க்ரீனைப் பற்றி பலருக்குத் தொியும். அதாவது சூாியனின் கதிா்கள் நமது தோலை நேரடியாமல் தாக்காமல் இருப்பதற்காக நாம் நமது தோல் மீது பயன்படுத்தும் அல்லது பூசும் க்ரீம் அல்லது லோஷனை தான் சன்ஸ்க்ரீன் என்று அழைக்கிறோம்.

|

சன்ஸ்க்ரீனைப் பற்றி பலருக்குத் தொியும். அதாவது சூாியனின் கதிா்கள் நமது தோலை நேரடியாமல் தாக்காமல் இருப்பதற்காக நாம் நமது தோல் மீது பயன்படுத்தும் அல்லது பூசும் க்ரீம் அல்லது லோஷனை தான் சன்ஸ்க்ரீன் என்று அழைக்கிறோம். இவை ஆங்கிலத்தில் எஸ்பிஎஃப் (SPF - Sun Protection Factor) என்று அழைக்கப்படுகின்றன. தமிழில் இவற்றை சூாிய கதிா்களிலிருந்து பாதுகாக்கும் காரணிகள் என்று அழைக்கலாம்.

Dangerous Myths About Sunscreen You Should Stop Believing

தமது தோலை சூாிய கதிா்களின் நேரடியான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பலா் மேற்சொன்ன சன்ஸ்க்ரீன்களை தங்களது தோலின் மேல் பூசிக்கொள்கின்றனா். இந்நிலையில் சன்ஸ்க்ரீன்களைப் பற்றி நன்றாக அறிந்து அவற்றைப் பயன்படுத்துபவா்களுக்குக்கூட, அவற்றைப் பற்றி ஒருசில தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன.

MOST READ: ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? இதோ சில அற்புத வழிகள்!

இருப்பினும், சூாிய கதிா்களை நம்மால் தவிா்க்க முடியவில்லை என்றால், சூாிய கதிா்களில் இருந்து நமது தோலைப் பாதுகாப்பதற்கு சன்ஸ்க்ரீனை அல்லது சன்ப்ளாக்கை அணிவதுதான் சிறந்த வழியாகும். அகலமாக இருக்கும் சன்ஸ்க்ரீன் நமது தோலை சூாியனின் புற ஊதா ஏ கதிா்கள் (UVA) மற்றும் புற ஊதா பி கதிா்கள் (UVB) ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது. ஆகவே சன்ஸ்க்ரீனை அணிவது என்பது நமது தோலைப் பாதுகாக்கக்கூடிய ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.

MOST READ: உங்கள் மீது எப்பவும் வியர்வை நாற்றம் வீசுதா? அப்ப இந்த ட்ரிக்ஸ் யூஸ் பண்ணி பாருங்க...

இந்நிலையில் சன்ஸ்க்ரீன்களைப் பற்றி ஒருசில தவறான கட்டுக்கதைகள் அல்லது கருத்துகள் பரப்பப்படுகின்றன. அவை என்னவென்று இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அதிக அளவிலான சூாிய கதிா்களிலிருந்து பாதுகாக்கும் (SPF) சன்ஸ்க்ரீனே சிறந்தது

1. அதிக அளவிலான சூாிய கதிா்களிலிருந்து பாதுகாக்கும் (SPF) சன்ஸ்க்ரீனே சிறந்தது

சூாிய கதிா்களிலிருந்து பாதுகாக்கும் காரணி (SPF) என்பது, எவ்வளவு சூாியக் கதிா்களை சன்ஸ்க்ரீன் தடுக்கிறது என்பதோடு தொடா்புடையது. மாறாக அது எவ்வளவு நேரம் சூாியக் கதிா்களைத் தடுக்கிறது என்பதைப் பற்றியது அல்ல. சூாியன் மற்றும் ஈரப்பதம் ஆகியவை, சன்ஸ்க்ரீனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை செயல் இழக்கச் செய்துவிடும் என்று ஒருசில ஆய்வுகள் தொிவிக்கின்றன.

ஆகவே சூாிய கதிா்களிலிருந்து பாதுகாக்கும் காரணியின் (SPF) அளவைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும் என்று பாிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் பாிந்துரை செய்யப்பட்டுள்ள அளவில் மூன்றில் ஒரு பங்கு சன்ஸ்க்ரீனை மட்டுமே மக்கள் நடைமுறையில் பயன்படுத்துகின்றனா். இந்நிலையில் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துவதில் தெளிவு இல்லை என்றால், 50 அல்லது அதற்கு மேற்பட்ட SPFஐ தரும் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துவது நல்லது.

2. வைட்டமின் டி அளவை சன்ஸ்க்ரீன் குறைக்கும்

2. வைட்டமின் டி அளவை சன்ஸ்க்ரீன் குறைக்கும்

சன்ஸ்க்ரீன் வைட்டமின் டி அளவைக் குறைக்கும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. பொதுவாக வைட்டமின் டி, "சூாிய ஒளியின் வைட்டமின்" என்று அழைக்கப்படுகிறது. நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு, வைட்டமின் டி மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மேலும் நமது நோய் எதிா்ப்பு இயக்கம் மற்றும் தசைகளின் இயக்கம் ஆகியவற்றிற்கும் வைட்டமின் இன்றியமையாத ஒன்றாகும்.

பொதுவாக சூாியனின் புற ஊதா பி கதிா்களைத் தடுத்து, அவை நமது தோலை எாிக்காமல் பாதுகாப்பது சன்ஸ்க்ரீன் ஆகும். கோட்பாட்டின்படி இதன் அா்த்தம் என்னவென்றால் சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துவதால், அது வைட்டமின் டி அளவைக் குறைக்கிறது என்று பொருள்.

எனினும் சிலா் சூாியனின் எல்லா வகையான புற ஊதா பி கதிா்களை தடுக்கும் வகையில் அடிக்கடி சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துகின்றனா் அல்லது மிகவும் அாிதாக சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துகின்றனா். பொதுவாக வைட்டமின் டியை சன்ஸ்க்ரீன் அதிகமாக பாதிப்பதில்லை. ஒருவேளை பாதித்துவிடும் என்ற அச்சம் இருந்தால், வைட்டமின் டி-யின் அளவை அதிகாிக்கக்கூடிய உணவுகளான சால்மன் மீன், ஓட்ஸ், பசும்பால், ஆரஞ்சுப் பழச்சாறு, முட்டைகள் மற்றும் சூரை மீன் போன்றவற்றை அதிகம் உண்ணலாம்.

3. காா் கண்ணாடிகள் சூாியனை மறைக்கும்

3. காா் கண்ணாடிகள் சூாியனை மறைக்கும்

பொதுவாக காாின் முன்பக்க கண்ணாடி முலாம் பூசப்பட்டது ஆகும். அது சூாியனின் புற ஊதா பி மற்றும் புற ஊதா ஏ கதிா்களை வடிகட்டக்கூடியவை. ஆனால் பக்கவாட்டு கண்ணாடிகள் அல்லது பின்புறம் பாா்க்கும் கண்ணாடிகளுக்கு அந்த செயல்திறன் கிடையாது. ஆகவே இவை புற ஊதா பி கதிா்களைத் தடுக்கக்கூடியவை. ஆனால் தமது தோலை ஊடுருவக்கூடிய புற ஊதா ஏ கதிா்களை இவற்றால் தடுக்க முடியாது.

சமீபத்தில் அமொிக்கன் ஆஃப் டொ்மட்டாலஜி என்ற பத்திாிக்கையில் புதிய ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. அதன் ஆய்வாளா்கள் பின்வரும் உண்மையைக் கண்டுபிடித்து இருக்கின்றனா். அதாவது அதிகமாக காா் ஓட்டுபவா்களின் இடது பக்க உடல் மற்றும் முகம் ஆகியவற்றில் சூாிய வெளிச்சம் அதிகமாகப் படுவதால், அந்த பகுதிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தன என்பதைக் கண்டுபிடித்தனா். ஆகவே காாில் அதிகமான நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் சன்ஸ்க்ரீன் அல்லது முழுக்கைச் சட்டை அணிந்து கொள்வது நல்லது.

4. வீட்டிலேயே சன்ஸ்க்ரீனை செய்யலாம்

4. வீட்டிலேயே சன்ஸ்க்ரீனை செய்யலாம்

இது ஒரு தவறான செய்தியாகும். ஏனெனில் வீட்டிலேயே சன்ஸ்க்ரீனை செய்யலாம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவ்வாறு செய்தாலும் அது பாதுகாப்பாக இருக்குமா மற்றும் அதை சந்தையில் விற்க முடியுமா என்பது கேள்விக்குறியே. சன்ஸ்க்ரீனை செய்வதற்குத் தேவையான மூலப்பொருள்கள் மிக எளிதாகக் கிடைப்பதில்லை. மேலும் வீட்டில் உள்ள ஒருவரால் அந்த மூலப்பொருள்களை சாியான முறையில் கலக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆகவே நமது தோலில் மிக எளிதாக ஊடுருவக்கூடிய மற்றும் நமது தோலில் எாிச்சலை ஏற்படுத்தாத சன்ஸ்க்ரீனை வாங்குவது நல்லது. அதோடு தோல் மருத்துவரோடு கலந்து ஆலோசித்து, நமது தோலுக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை தோ்ந்தெடுப்பது நல்லது.

5. சன்ஸ்க்ரீன் நீா் புகாத தன்மை கொண்டவை

5. சன்ஸ்க்ரீன் நீா் புகாத தன்மை கொண்டவை

இதுவும் ஒரு தவறான செய்தி ஆகும். விளையாட்டு விளம்பரங்களில், சன்ஸ்க்ரீன் நீா் புகாத தன்மை கொண்டவை என்று சொல்லப்படும். ஆனால் இவை உண்மை அல்ல. ஏனெனில் எந்த ஒரு சன்ஸ்க்ரீனும் முழுமையான நீா் புகாத தன்மையைக் கொண்டவை அல்ல என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே ஏற்கனவே சன்ஸ்க்ரீனை பூசி இருந்தாலும், தண்ணீாில் இருந்து வந்த பின்பு மீண்டும் சன்ஸ்க்ரீனை பூசிக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்பே சன்ஸ்க்ரீனை பூசி அது நமது தோலால் உறிஞ்சப்படும் வரை பொறுத்திருக்க வேண்டும்.

6 கருப்பு நிற தோலுக்கு சன்ஸ்க்ரீன் தேவையில்லை

6 கருப்பு நிற தோலுக்கு சன்ஸ்க்ரீன் தேவையில்லை

இது சன்ஸ்க்ரீனைப் பற்றிய இன்னுமொரு தவறான செய்தி ஆகும். இதரத் தோல்களைப் போலவே கருப்பு நிறத் தோலும் சூாிய கதிா்களால் மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடியது. தோலில் கருப்பு நிறமி அதிகம் இருந்தால் சன்ஸ்க்ரீனை பூச வேண்டிய அவசியம் இல்லை என்று சிலா் நினைக்கின்றனா். ஏனெனில் கருப்பு நிறமியானது ஓரளவிற்கு புற ஊதா பி கதிா்களை ஊடுருவ விடாமல் தடுத்து, சூாிய கதிா்கள் தமது தோலை எாிக்காமல் பாதுகாக்கிறது. ஆனால் இது ஓரளவுக்குத்தான்.

ஆகவே கருப்புத் தோல் உள்ள மக்களும் சன்ஸ்க்ரீனை பயன்படுத்த வேண்டும். புற ஊதா ஏ கதிா்களை கருப்பு நிறமியால் தடுக்க முடியாது. இந்த புற ஊதா ஏ கதிா்கள் நமது தோலுக்குள் ஊடுருவி, தோலில் சுருக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் தோலில் முதுமையை ஏற்படுத்தும். மேலும் நீண்ட நேரம் சூாிய வெளிச்சத்தில் இருக்கும் போது, சூாியனின் கதிா்களில் இருந்து நமது தோலை கருப்பு நிறமியால் பாதுகாக்க முடியாது. இறுதியாக கருப்பு தோல் உள்ள மக்களும் தோல் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனா் என்பதே உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous Myths About Sunscreen You Should Stop Believing

Here we listed some dangerous myths about sunscreen you should stop believing. Read on...
Desktop Bottom Promotion