Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வறண்ட சருமம் கொண்ட மணப்பெண்களுக்கான அழகு குறிப்புகள்
உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சில சரும பராமரிப்பு குறிப்புகளும் மேக்கப் குறிப்புகளும் உங்களுக்காக உள்ளன. இந்த குறிப்புகள் திருமண நாள் அன்று உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் மென்மையாகவும், பிரெஷ் ஆகவும் மற
கல்யாண பெண்ணாக இருந்து வறண்ட சருமத்தை பாதுகாப்பது மிகவும் கடினமான விஷயம். உங்கள் வாழ்க்கையிலேயே மிக மிக முக்கியமான நாள் கல்யாண நாள் தான் அப்போதும் உங்கள் சருமத்தை பற்றி கவலைக் கொண்டு பிரெஷ் ஆக இருக்கா இல்லை வறண்டு விட்டதா என்று யோசித்துக் கொண்டு இருக்க முடியாது.

எனவே உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சில சரும பராமரிப்பு குறிப்புகளும் மேக்கப் குறிப்புகளும் உங்களுக்காக உள்ளன. இந்த குறிப்புகள் திருமண நாள் அன்று உங்கள் சருமத்தை வறண்டு போகாமல் மென்மையாகவும், பிரெஷ் ஆகவும் மற்றும் பளபளப்பாகவும் வைக்க உதவும்.

சி.டி.எம் ஸ்கின்கேர்
சி.டி.எம் ஸ்கின்கேர் என்பது கிளீன்சேர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசர் ஆகியவற்றை வழக்கமாகப் பயன்படுத்துங்கள். முதலில் உங்கள் சருமத்தை நீங்கள் தயார் செய்ய வேண்டும். ஒரு சிறந்த அழகான மேக்கப் பெறுவதற்கு உங்களின் சருமத்தை முதலில் சரி செய்ய வேண்டும் அதற்காகத் தான் இந்த சி.டி.எம் ஸ்கின்கேர் முறை கையாளப்படுகிறது. சி.டி.எம் ஸ்கின்கேர் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி சருமத்தைப் புத்துணர்ச்சி செய்து ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

ப்ரைமர்
ப்ரைமர் என்பது உங்கள் மேக்கப் கலையாமல் ஒரு நாள் முழுவதும் இருப்பதற்கு உதவும். நீங்கள் கல்யாண பெண்ணாக இருப்பதால் உங்கள் மேக்கப் அன்றைய நாள் முழுவதும் கலையாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் மேக்கப் செய்ய ஆரமிப்பதற்கு முன்பு முகத்தில் ப்ரைமர் அப்ளை செய்யுங்கள்.

லிக்விடு ஃபவுன்டேஷன்
உங்களது வறண்ட சருமத்திற்கு ஏற்ற ஒரு ஃபவுன்டேஷனை தேர்வு செய்யுங்கள். அதிலும் பவுடர் ஃபவுன்டேஷனை விட லிக்விடு ஃபவுன்டேஷன் தான் எப்போதும் வறண்ட சருமத்திற்கு ஏற்ற ஒன்றாக இருக்கும். எல்லாவற்றை விட முக்கியமான ஒன்று நீங்கள் தேர்வு செய்யும் ஃபவுன்டேஷன் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஒன்றாக இருந்தால் தான் புகைப்படங்களில் மிகவும் அழகாகத் தெரிவீர்கள்.

கன்சீலர்
கன்சீலர் என்பது நாம் தினமும் பயன்படுத்தும் மேக்கப் சாதனம் இல்லை என்றாலும் பெண்களின் திருமண நாள் அன்று அவர்களின் முகத்தில் இருக்கும் கரு வளையங்கள், முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைப்பதற்குப் பயன்படுகிறது. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு கிரீம் கன்சீலர் ஏற்ற ஒன்றாக இருக்கும்.

லிக்விடு ப்ளஷ்
உங்கள் வறண்ட சருமத்தில் மென்மையான மற்றும் பளபளப்பு தன்மையை ஏற்படுத்துவதற்குக் கண்டிப்பாக ப்ளஷ் பயன்படுத்த வேண்டும். உங்கள் முகத்தில் பளபளப்பைத் தருவதற்குச் சிறந்த ஒன்றாக லிக்விடு ப்ளஷ் உதவும். இந்த லிக்விடு ப்ளஷ் உங்கள் ஃபவுன்டேஷன் உடன் கலந்து பளபளப்பைத் தரும்.

ஐ ப்ரைமர்
உங்கள் ஐ ஷேடோக்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஐ ப்ரைமரை பயன்படுத்துங்கள். இது உங்கள் ஐ ஷேடோக்களைப் மென்மையாக்கவும் மற்றும் மேலும் வண்ணங்களைச் சேர்ப்பதற்கும் உதவும். மேலும் ஐ ப்ரைமர் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு மிக முக்கியமான ஒன்று எனவே இதனைத் தவறாமல் பயன்படுத்துங்கள்.

கிரீம் ஐ ஷேடோ
நம் எல்லாரும் பொதுவாக உபயோகிப்பது பவுடர் ஐ ஷேடோக்கள் தான். ஏனெனில் அவற்றைப் பயன்படுத்தி நாம் பழகிவிட்டோம். ஆனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் கிரீம் ஐ ஷேடோக்களை பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் பவுடர் ஐ ஷேடோ சிறிது நேரத்தில் அழிந்து விட வாய்ப்புக்கள் அதிகம் ஆனால் கிரீம் ஐ ஷேடோ நீண்ட நேரம் அழியாமல் இருக்கும் ஆதலால் வறண்ட சருமம் கொண்டவர்கள் கிரீம் ஐ ஷேடோவை உபயோகிங்கள்.

பவுடர்
வறண்ட சருமம் கொண்டவர்கள் முடிந்த வரை பவுடர் உபயோகிப்பதைத் தவிருங்கள். நீங்கள் எவ்வளவு தான் விலையுயர்ந்த பவுடர் வாங்கி பயன்படுத்தினாலும் அவை சிறிது நேரத்தில் வேர்வையினால் அழிந்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே எப்போதும் வறண்ட சருமம் கொண்டவர்கள் கிரீம் பொருட்களைத் தேர்வு செய்வது நல்லது.

பளபளப்பான லிப்ஸ்டிக்
லிப்ஸ்டிக் என்பது மேக்கப்பில் உள்ள முக்கியமான ஒன்று. எல்லாவற்றையும் செய்து விட்டு கடைசியில் லிப்ஸ்டிக் சரியாக அமையவில்லை என்றால் அழகையே கெடுத்து விடும். எனவே தேர்வு செய்யும் லிப்ஸ்டிக் பளபளக்கும் தன்மையுடையதாக இருக்க வேண்டும் அல்லது மேட் லிப்ஸ்டிக் தேர்வு செய்தால் அதன் மீது கிளாஸி பயன்படுத்துங்கள்.

செட்டிங் ஸ்ப்ரே
செட்டிங் ஸ்ப்ரே, இது உங்கள் முழு மேக்கப் நாள் முழுவதும் அழியாமல் பார்த்துக் கொள்ளும். முக்கியமாக மணப்பெண்களின் மேக்கப் வெகு நேரம் கலையாமல் இருப்பதற்கு இந்த செட்டிங் ஸ்ப்ரே உதவும். முக்கியமாக ஹைட்ரேட்டிங் செட்டிங் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துங்கள். இந்த அனைத்து குறிப்புகளையும் பின்பற்றி அழகான மணப்பெண்ணாகக் காட்சியளியுங்கள்.



Click it and Unblock the Notifications